சமச்சீர் திட்டத்தில், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்களுக்கு, தமிழ்நாடு பாடநூல் கழகம், விலைபட்டியல் வெளியிட்டுள்ளது. சமச்சீர் கல்வி விவகாரம், சுப்ரீம்கோர்ட் வரை சென்றதால், இந்தாண்டு நடைமுறைக்கு வருமா, வராதா என்ற குழப்பம் நீடித்தது. இந்நிலையில், சமச்சீர் கல்வியை அமல்படுத்துமாறு, சுப்ரீம் கோர்ட்டும், "சமச்சீர் கல்வி திட்டத்தை உடனே அமல்படுத்துவோம்' என, முதல்வர் ஜெயலலிதாவும் சட்டசபையில் அறிவித்தார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு இலவசமாக, சமச்சீர் புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் அறிவிக்கப்பட்ட விலையை, தனியார் பள்ளிகள் கொடுத்து, புத்தகங்களை பெற்று வருகின்றன.
வகுப்பு வாரியாக, தமிழ்நாடு பாடநூல் கழகம் நிர்ணயித்துள்ள விலை வருமாறு:வகுப்பு புத்தகம் விலை
1, 2 தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சூழ்நிலையியல் 200 ரூபாய்
3 முதல் 6 தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் 250 ரூபாய்
7, 8 ,, 300 ரூபாய்
9, 10 ,, 350 ரூபாய்
தனியார் பள்ளிகள், நடப்பாண்டு பள்ளிக்கட்டணம் தவிர, புத்தக கட்டணமாக, 1,000 முதல் 3,000 ரூபாய் வரை வசூலித்துள்ளன. ஆனால், சமச்சீர் கல்வி புத்தகங்களின் விலை, 10ம் வகுப்புக்கு அதிகபட்சமாக, 350 ரூபாய் மட்டுமே. எனவே, கூடுதலாக வசூலித்த பணத்தை தனியார் பள்ளிகள் திரும்ப தர வேண்டும் என்ற கோரிக்கை, பெற்றோரிடம் எழுந்துள்ளது.
நன்றி:தினமலர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக