கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

சட்டம் தன் கடமையை செய்யுமா?

சட்டம் தன் கடமையை இப்பொழுதாவது சரி வர செய்யும்மா? என்று உலகமே! எதிர்பார்த்த வண்ணம் உள்ளது. பாபர் மசூதி இடிப்பு அத்வானிக்கு நோட்டீசு சி.பி.ஐ. கோரிக்கையை ஏற்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. அயோத்தியில் குவிந்து இருந்த கரசேவகர்கள் பாபர் மசூதியை இடித்தனர். அவர்களை பா.ஜ.க. தலைவர்கள் தூண்டி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. பாபர் மசூதி இடிப்புத் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

கரசேவகர்களிடம் மத உணர்வை தூண்டி விட்டு பாபர் மசூதியை இடிக்க செய்தனர் என்று பா.ஜ.க. தலைவர்கள் அத்வானி, உமாபாரதி மற்றும் சிவசேனா தலைவர் பால்தாக்கரே உள்பட 21 பேர் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. இது தொடர்பாக சி.பி.ஐ. ரேபரேலியில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் அத்வானி மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்க மறுத்த ரேபரேலி கோர்ட்டு சி.பி.ஐ. மனுவை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து அலகாபாத் ஐகோர்ட்டில் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது. ஆனால் ஐகோர்ட்டும் சி.பி.ஐ.யின் மனுவை நிராகரித்தது. இந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பா.ஜ.க. தலைவர்கள் சதி செய்துள்ளதாக கூறி சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது. இந்த மனு மீதான விசாரணைக்கு பதில் அளிக்குமாறு பா.ஜ.க. தலைவர்கள் அத்வானி, உமாபாரதி மற்றும் சிவசேனா தலைவர் பால்தாக்கரேக்கு நோட்டீசு அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் புதிய வேகம் ஏற்பட்டுள்ளது.

தேமுதிகவுக்கு 41இடங்கள்

அதிமுக மற்றும் தேமுதிக இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் தேமுதிக.,வுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் இடையே வெள்ளிக்கிழமை இரவு கையெழுத்தானது. கடந்த பிப். 24ம் தேதி தேமுதிகவினர் பண்ருட்டி ராமசந்திரன் தலைமையில் அதிமுகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். முதல் கட்ட பேச்சு சுமுகமாக முடிந்ததாகத் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று இரவு 9 மணி அளவில் விஜயகாந்த் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தொகுதி பங்கீடு குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது. இதன் பிறகு தேமுதிகவுக்கு 41 இடங்கள் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டு, ஒப்பந்தமும் கையெழுத்தானது.

25 பைசாவுக்கு குட் பை!!

நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி முதல் 25.காசு நாணயத்திற்கு மூடு விழா நடத்தவுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. ஒரு காலத்தில் ஒரு காசு, 2 காசு, 5 காசு, 10 காசு என்று நாணயங்கள் இருந்தன. அவற்றை பல ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தி விட்டனர். இவற்றை இப்போதெல்லாம் காணவே முடிவதில்லை. தற்போது 25 காசு, 50 காசு ஆகியவை மட்டும் புழக்கத்தில் உள்ளன. இதில் 25 காசு நாணயத்தையும் புழக்கத்திலிருந்து நிறுத்த அரசு தீர்மானித்துள்ளது. அதன்படி ஜூன் 30ம் தேதியுடன் 25 காசு நாணயத்தை நிறுத்தவுள்ளனர். அதற்குப் பிறகு இந்த காசு செல்லாததாக அறிவிக்கப்படும். அதன் பிறகு இதை எங்கும் பயன்படுத்த முடியாது. எனவே அதற்குள் 25 காசுகளை வைத்துள்ளவர்கள் அவற்றை வங்கிகளில் மொத்தமாக கொடுத்தால் அதற்கு நிகரான தொகையை வங்கிகள் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ஒருவரிடம் ஒரே ஒரு 25 காசு மட்டும் இருந்து, அதை மாற்றிக் கொள்ள விரும்பினால், அதற்கு ஈடாக என்ன தொகை தருவார்கள்?

அடங்க மறுப்போம் அத்துமீறுவோம்!!

சிந்திக்கவும்! "இணையதள வாசகர்களே உங்கள் அன்பான விமர்சனத்திற்கு" நன்றி கூறியவனாக உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. என் ஆக்கங்களை தொடராக படித்து வரும் வாசகர்களுக்கு இப்போது மனதில் ஒரு கேள்வி எழலாம். அது என்ன வென்றால்? நம் நாட்டில் நமக்காக நன்மை செய்த ஒரு தலைவருமே இல்லையா? என்ற கேள்வி எழலாம், அதற்கு பதில் இருந்தார்கள், ஆனால் இந்த பாசிச வந்தேறி மதவெறியர்கள் அவர்களை நிம்மதியாக இருக்கவிடவில்லை. அது எப்படி? என்று பார்ப்போம்.

வேண்டும் ஆட்சி மாற்றம்!


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!

சகோதரர்களே! நம் மாநிலத்தினுடைய சட்டமன்றத் தேர்தலை எதிர் நோக்கி இருக்கிற இச்சூழ்நிலையில் பல விதமான கேள்விகளும், ஆதங்கமும், அதிருப்தியும், நம்மில் பலரை ஆட்கொண்டுடிருப்பதை நம்மால் உணர முடிகிறது. இவ்வேலையில் சில எதார்த்த நிலைகளை நாம் அறிந்த கொண்டாமேயானால் அல்லாஹ் நாடினால் அது நமக்கு பயனுல்லாதாக அமையும் என்று நம்புகிறேன்.

தேர்தல் : கட்சிகளுக்கு/வேட்பாளர்களுக்கு நடத்தை விதிகள்

ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
செய்யத்தக்கவை:
* தேர்தல் கூட்டங்கள் நடத்துவதற்கான இடத்தை காவல்துறை, அனைத்து தேர்தல் கட்சிகளுக்கும், போட்டியிடும் வேட்பாளர்களுக்கும்  நியாயமான முறையில் ஒதுக்கித் தர வேண்டும்.
* பிற அரசியல் கட்சி வேட்பாளர்களை விமர்சனம் செய்யும் போது, அவரது கடந்த கால செயற்பாடுகள் பற்றி தான் பேச வேண்டும்.
* ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த, முன்அனுமதி அவசியம்.
* பொதுக்கூட்டத்தை சீர்குலைக்க நினைப்பவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க, காவல்துறை  உதவியை நாட வேண்டும். தன்னிச்சையாக செயற்படக் கூடாது
* ஊர்வலம் நடத்துவதற்கு முன், காவல்துறை  அனுமதி கட்டாயம். ஊர்வலம் துவங்கும் இடம், முடியும் இடத்தை, முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
* தேர்தல் அதிகாரிகள், பணியாளர்கள் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும்.
* தேர்தல் நாளில் வாக்காளருக்குத் தரப்படும் அடையாள சீட்டில், கட்சி பெயர், சின்னம் இருக்கக் கூடாது.
* வாக்குப்பதிவு நாளில், வாகனக் கட்டுப்பாட்டை, அரசியல் கட்சிகள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
* தேர்தல் ஆணையம்  அனுமதி பெற்றவர் மட்டுமே, வாக்குச் சாவடிக்குள் செல்ல வேண்டும். முதல்வர், அமைச்சர், எம்.பி., – எம்.எல்.ஏ., ஆகியோருக்கும் இது பொருந்தும்.
செய்யத்தகாதவை :
* அமைச்சர்கள் யாரும் வேட்பாளராகவோ, முகவராகவோ இல்லாத பட்சத்தில், வாக்கு  எண்ணிக்கை மையத்திற்குள் செல்லக் கூடாது.
* கருத்து வேற்றுமைகளை அதிகரிக்கும் வகையிலும், பரஸ்பர வெறுப்பை அதிகரிக்கும் வகையிலும், பதட்ட நிலையை அதிகப்படுத்தும் வகையிலும், வேட்பாளர் பேசக் கூடாது.
* கோவில், பள்ளிவாசல், சர்ச் போன்ற வழிபாட்டு தலங்களில், வேட்பாளர்கள் பிரசாரம் செய்யக் கூடாது.
* ஓட்டுக்கு லஞ்சம், தகாத வார்த்தை பயன்படுத்தல், வாக்காளர்களை அச்சுறுத்தல் போன்றவை குற்றமாகும்.
* அரசு சுவரில் விளம்பரம் செய்யக்கூடாது.
* பிற அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்களில், குழப்பம் செய்யக்கூடாது.
* பிற கட்சியினர் நடத்தும் பொதுக்கூட்டம் நடக்கும் வழியில் ஊர்வலம் செல்லக் கூடாது. பிற கட்சியினரின் சுவரொட்டிகளைச் சேதப்படுத்தக் கூடாது.
* தேர்தலன்று மது வகைகள் விற்க அனுமதியில்லை.
* தேர்தலன்று ஓட்டுச்சாவடி அருகே கட்சி சார்ந்த துண்டுசீட்டு, சுவரொட்டிகள் , கொடிகள், தேர்தல் சின்னங்கள் வைக்க அனுமதியில்லை.
இவை மட்டுமின்றி தேர்தல் ஆணையம் அவ்வப்போது வெளியிடும் உத்தரவுகளை, வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் கடைபிடிக்க வேண்டும்

தமிழக சட்டசபைத் தொகுதிகள்




1. கும்மிடிப்பூண்டி
2. பொன்னேரி (தனி)
3. திருத்தணி
4. திருவள்ளூர்
5. பூந்தமல்லி (தனி)
6. ஆவடி
7. மதுரவாயல்
8. அம்பத்தூர்
9. மாதவரம்
10. திருவொற்றியூர்

11. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்
12. பெரம்பூர்
13. கொளத்தூர்
14. வில்லிவாக்கம்
15. திரு.வி.க.நகர் (தனி)
16. எழும்பூர் (தனி)
17. ராயபுரம்
18. துறைமுகம்