கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

திருமணத்தில் எடுக்கப்படும் வீடியோ – விழிகளுக்கு விருந்தாகும் வீட்டுப் பெண்கள்!

திருமணம் ஒரு நபிவழியாகும். ஆனால் இன்று அந்தத் திருமணம் இறைவனுக்கு மாறுசெய்வதில் தான் துவங்குகின்றது. அதுதான் வரதட்சணை. இதனைத் தொடர்ந்து ஆடம்பரமான அழைப்பிதழ், பணத்தின் மதிப்பைக் காட்டுகின்ற விருந்து, பகட்டான மண்டபம், பந்தல், வண்ண விளக்குகள் அலங்காரம், இன்னிசைக் கச்சேரி, வாணவேடிக்கை, ஊர்வலம் என்று பாவகரமான செயல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

கோணுழாம்பள்ளம்பள்ளிவாசல்தெரு சுபைதாபீவி அவர்கள் மறைவு.

                                அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) 
கோணுழாம்பள்ளம்பள்ளிவாசல்தெரு(மர்ஹூம்அப்துல்லாஹ் அவர்களின் மனைவியும்)அப்துல்ஹமீது, ஹஜ்ஜிமுகம்மது அவர்களின் தாயாருமாகிய‌ ,சுபைதாபீவி அவர்கள் இன்று காலை (10.11.2013) தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 4.30  மணியளவில் நடைபெற்றது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’   எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

பந்தநல்லூர் மின்சார வசூல் மையத்தில் உள்ள கணினியில் தொழில்நுட்ப கோளாறு

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQItEcWZZc4SRaGC7NpQIjUsiOeALsasx6FSBNC1lf-tyTM4nL9திருவிடைமருதூர், : பந்தநல்லூரில் உள்ள மின்சார வசூல் மையத்தில் பெரும்பாலான நேரங்களில் கணினியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதால் கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருச்சி ஜமாஅத்துல் உலமா நடத்திய ஷரீஅத் மாநாடு தீர்மானம்

575716
திருச்சி, நவ.7- திருச்சி மாநகர மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் ஷரீஅத் மாநாடு திருச்சி சிங்காரதோப்பு நியூ கோல்டன் மஹாலில் நடைபெற்றது. காலையில் நடைபெற்ற முதல் அமர்வில் மார்க்க கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லவி ஏ.முஹம்மது ரூஹுல் ஹக் தலைமை வகித்தார். திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டமான திருச்சி மாநகர், புறநகர், கரூர், பெரம்பலூர், அரியலூர் உள் ளிட்ட மாவட்டங்களின் ஜமாஅத் தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

வதைக்கும் விவாகரத்து வழக்குகள்! மௌலவி, அ. முஹம்மத்கான் பாகவி!

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நான்கு குடும்ப நல நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.இவற்றில் 2013 ஆகஸ்டுவரை 15,324 குடும்ப வழக்குகள் நிலுவையில் உள்ளன. விவாகரத்து,ஜீவனாம்சம், குழந்தைகள்மீதான உரிமை, மீண்டும் சேர்ந்துவாழ விருப்பம் ஆகிய வழக்குகள்ஆயிரக்கணக்கில் தேங்கிக்கிடக்கின்றன.

கோணுழாம்பள்ளம் T.C.முஸ்லிம்தெருK.S சயீத்யாசீன்.அவர்கள் மறைவு.


                                         அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம் T.C.முஸ்லிம்தெரு K.S.சயீத்யாசீன்.அவர்கள் இன்று (06.10.2013) இரவு 6.00 மணியளவில்  தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.ஜனாஸா நல்லடக்கம் நாளை நடைப்பெறும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.



அக்டோபர் 5 – சென்னையில் சரித்திரம் படைக்கும் சாதனை மாநாடு .

சென்னை வேப்பேரி பெரியார் திடலில் 5-10-2013 சனிக்கிழமை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் எம்.எஸ்.எஃப் முஸ்லிம் மாணவர் பேரவை மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது.