திருவிடைமருதூர் அடுத்த பந்தநல்லூரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகம் உள்ளது. தற்போது கணினி பதிவுமூலம் மட்டும் தான் மின் கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் பந்தநல்லூரில் உள்ள இந்த அலுவலகத்தில் கணினி சம்மந்தமான இணையதள இணைப்பில் 3 மாதமாக அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. இதனால் மின் கட்டணம் செலுத்த வரும் கோனுளாம்பள்ளம், பந்தநல்லூர், குறிச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 13 ஆயிரம் பேர் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது வேலைகளை விட்டு சென்று மின் அலுவலகத்தில் காத்திருந்தும் கட்டணத்தை கட்ட முடி யாத நிலை உள்ளது. இதனால் குறிச்சி மற்றும் கோனுளாம்பள்ளம் பகுதிகளில் உள்ள தமிழ்நாடு மின்சார அலுவலகத்தில் மின் வசூலிப்பு மையம் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மின்துறை நிர்வாகத்திடம் கேட்ட போது, மின் கட்டணம் செலுத்தும் முறை முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் அந்தந்த பகுதிகளில் உள்ள இணையதளம் இணைப்பு பெற்ற அஞ்சலகங்கள், சில தனியார் வங்கி மற்றும் அரசுடமை வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் எவ்வித கட்டணமும் இல்லாமல் மின் கட்டணம் செலுத்தலாம். வங்கிகளில் கணக்கு இல்லாதவர்களும் மின் கட்டணம் செலுத்தலாம். பந்தநல்லூரில் உள்ள அலுவலகத்தில் தற்போது நிலவி வரும் கணினி சம்மந்தமான தொழில்நுட்ப கோளாறு விரைந்து சரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
source: http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=247811&cat=504
0 கருத்துகள்:
கருத்துரையிடுக