கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இந்தியர்கள் இனி குடியேற்ற படிவம் நிரப்ப தேவையில்லை!


இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு விமானம் மூலம் செல்லும் பயணிகள் எரிச்சலாக கருதும் விஷயங்களில் ஒன்றான குடியேற்ற படிவம் நிரப்புதல் சீக்கிரம் முடிவுக்கு வரும் என தெரிய வந்துள்ளது. சாதாரணமாக இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்பவர்கள் தங்கள் பொருட்களை எடை போடும் போதே குடியேற்ற படிவம் கொடுக்கப்படும். அதில் தங்கள் கடவுசீட்டு விபரம், செல்லும் இடம், விமான விபரங்கள் முதலியவை நிரப்பப்பட வேண்டும்.

நியூயார்க் டைம்ஸ் - இஸ்லாம் - பிரான்ஸ்


CRÉTEIL பகுதியில் உள்ள சஹாபா மசூதி 
ஒன்றை தீவிரமாக எதிர்ப்பதால் அது விளம்பரமாக அமைந்து எதிர்க்கப்பட்டதின் வளர்ச்சிக்கு உதவி விடும் என்பது உண்மையானால் அது இஸ்லாமிற்கு மிக சரியாகவே பொருந்தும். எதிர்ப்புகளின் வளர்ச்சியில் வளர்ந்த மார்க்கம் இஸ்லாம்.

பெற்றோரின் வலியைப் புரியாத பிள்ளைகள்.


அ. முஹம்மது கான் பாகவி
முன்பெல்லாம் பெற்றோர்கள் ஏழெட்டுக் குழந்தைகளைப் பெற்று மகிழ்ச்சியோடுதான் வாழ்ந்துவந்தார்கள். பிள்ளைகளுக்குச் செல்லம் கொடுத்த அதேநேரத்தில், கண்டிப்பும் அவர்களது வளர்ப்பில் இருந்தது. பல பிள்ளைகளிடையே பாசம் பகிர்ந்து போனதாலோ என்னவோ, அளவுக்கதிகமாகச் செல்லம் காட்டியதில்லை. இதனால்,  பொறுப்புள்ளவர்களாக அவர்களின் பிள்ளைகள் வளர்க்கப்பட்டார்கள். இதில் ஒன்றிரண்டு விதிவிலக்கு இருக்கலாம்.

தேர்தல் சீர்த்திருத்தம் தேவை! டெல்லியில் மமக, முஸ்லிம் லீக்,முழக்கம்!


தலைநகர் டெல்லியில் கடந்த மார்ச் 6 மற்றும் 7 தேதிகளில் தேர்தல் சீர்த்திருத்திற்கான தன்னார்வ அமைப்பான ‘CERI’ சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. தற்போது இந்தியாவில் இருக்கும் தொகுதி வாரி தேர்தல் முறைக்கு மாறாக, ஜெர்மனி, சுவீஸ் போன்ற நாடுகளில் நடைமுறையில் இருக்கும் விகிதாச்சார அடிப்படையிலான தேர்தல் முறையை இந்தியாவில் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற அக்கருத்தரங்கில் மமக சட்டமன்ற கட்சித் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்!


சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும்!
“உங்களில் எவரேனும் சபைக்குச் சென்றால் ஸலாம் கூறட்டும். அங்கிருந்து எழ நாடினாலும் ஸலாம் கூறட்டும்.  ஏனெனில் முன்னால் (ஸலாம்) கூறியது பின்னால் (எழுவதற்கு கூறியதாக) ஆகாது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), ஆதாரம்: அபூதாவுத், திர்மிதி, இப்னுஹிப்பான்.

வேறு மதத்திலிருந்து இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறியவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்


இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவருமான பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா அவர்கள் இன்று (27.02.2013) பிற்படுத்தப்பட்ட ஆணையத் தலைவர் நீதியரசர் ஜனார்த்தனன் அவர்களை நேரில் சந்தித்தார்கள்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிகளின் தியாகம்…..


அந்நியனுக்கு அடிமைச் சேவகம் செய்தவர்கள் எல்லாம் இன்று ஆட்சிக் கட்டிலும், அதிகார இடங்களிலும் அமர்ந்து கொண்டு சுதந்திரத்திற்கு தங்கள் எதிர்கால சந்ததியினரின் நலன்களை அர்ப்பணித்த சமுதாயத்தை அடக்கியாகின்ற அவலம் இங்குமட்டும் சுதத்திரத்திற்கு வாளேந்திய சமுதாயம் வாழ்வுரிமை கேட்டு வீதியில் நிற்கும் அவலம் இங்கு மட்டுமே.