
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கிறது. இன்று (பிப்ரவரி 28) அறிவாலயத்திற்கு வந்த திருமவளவன் கருணாநிதியோடு தொகுதி ஒப்பந்தம் போட்டார். தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் திருமாவளனும் கருணாநிதியும் கையெழுத்திட்டார்கள். அப்போது தி.மு.க. தொகுதி பங்கீடு குழுவை சேர்ந்த ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி ஆகியோர் உடன் இருந்தனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 13 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை வைத்தார். ஆனால் பத்து தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என்று தி.மு.க. கையை விரித்துவிட்டது.கடைசியில் 11 தொகுதிகள் வரை கேட்டு போராடி பார்த்தார் திருமாவளவன். ஆனால் 10 தொகுதிகள் மட்டுமே இப்போது தி.மு.க. ஒதுக்கியிருக்கிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி இடம் பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 9 இடங்கள் ஒதுக்கப்பட்டது. அதில் இரண்டு தொகுதிகள் விடுதலைச் சிறுத்தைகள் வெற்றி பெற்றது. கடந்த 2009 எம்.பி. தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு திருமா மட்டும் வெற்றி பெற்றார். 1998ம் ஆண்டில் இருந்து தேர்தல் அரசியலில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கெடுத்து வந்தாலும் அந்த கட்சிக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் கிடைக்கவில்லை. தனிச் சின்னமும் பெறமுடியவில்லை. இந்த முறை அதனை பெற்றுவிட வேண்டும் என்றுதான் அதிக தொகுதிகளை தி.மு.க.விடம் கேட்டது. ஆனால் கிடைக்கவில்லை
முதல்வர் கருணாநிதியை சந்தித்தார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ். இந்த சந்திப்பின் போது பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, டி.ஆர். பாலு, துரைமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர். கூட்டணியில் சேர்வது தொடர்பாக பா.ம.க.வுக்கு தி.மு.க.வுக்கு இடையே உரசல்கள் இருந்து வந்த நிலையில் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. கூட்டணியில் பா.ம.க.வை சேர்த்துக் கொள்ள தி.மு.க. முடிவு செய்தது. இது தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறதாம். கடந்த 2006 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் வழங்கப்பட்டன. இப்போது அதே 31 இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதோடு ஒரு ராஜ்ய சபா இடமும் அளிக்கப்பட்டுள்ளது என்று ராமதாஸுடன் சென்றவர்கள் குறிப்பிட்டார்கள்

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளன. புது டெல்லியில் இன்று (மார்ச் 1) தலைமை தேர்தல் ஆணையர் டாக்டர் எஸ் ஓய் குரேஷி பேட்டி அளித்த அளித்தார். பேட்டி விவரம்:
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும். மேற்கு வங்காளத்தில் 6 கட்டங்களாக ஏப்ரல் 18, 23, 27 மற்றும் மே 3, 7, 10 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும். அசாம் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 4 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெறும்.
தமிழ்நாட்டில் இந்த மாதம் 19ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கும். வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் மார்ச் 26. வேட்புமனு பரிசீலனை மார்ச் 28.வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் மார்ச் 30. வாக்கு எண்ணிக்கை மே 13.

திமுக கூட்டணியில் கொங்குநாடு முன்னேற்ற கழகத்திற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று இரவு கையெழுத்தானது. கொமுக வேட்பாளர்கள் தங்கள் கட்சி சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என கொமுக அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் இதுவரை பாமக 31, விடுதலை சிறுத்தைகள் 10, கொமுக 7, முஸ்லிம்லீக் 3, மூமுக 1 என மொத்தம் 52 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம் லீக் உட்பட 4 வேட்பாளர்கள் திமுக சின்னத்தில் போட்டியிடுகின்றனர். எனவே திமுகவுக்கு 4 தொகுதிகள் உறுதியாகியுள்ளது. 234 ல் 52 போக மீதம் உள்ள 182 தொகுதிகளை தான் காங்கிரசு மற்றும் திமுக பிரித்துக்கொள்ள வேண்டும். திமுக கடந்த தேர்தலை போல 132 (+4=136) தொகுதிகளில் போட்டியிட்டால் காங்கிரசுக்கு 50 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்யலாம் என தெரிகிறது.

அன்பார்ந்தவர்களே சிந்திக்கவும்: நம் நாட்டிலே கேள்வி கேட்க முடியாத இரண்டு நபர்கள் உண்டு, ஒன்று ஜனாதிபதி, மற்றொன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி. இதில் மதிப்பிற்குரிய சுப்ரீம் கோர்டின் அவலங்களை பற்றி இன்று பாமரன் கூட மதிப்பு குறைந்த வார்த்தைகளால் விமர்சிக்க தொடங்கி விட்டான். ஏன் இந்த இழி நிலை? அதற்கு காரணம் இந்தியாவின் நான்கு தூண்களில் ஒன்றான "நீதி துறை" இன்று உயர் ஜாதிகாரர்களின் பிடியில் அகப்பட்டு கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டதுதான் காரணம். அதற்க்கு சில உதாரணங்களை பார்க்கலாம்.
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்கு அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் பணி துவங்கி உள்ளது.
இதன் ஒரு கட்டமாக அமீரகத்தில் வாழும் இந்திய மக்கள் அங்குள்ள
தூதரக இணையதளத்தில் விண்ணபித்து கொள்ள வேண்டும். அதில் அவர்களது விசா எண், முடிவடையும் காலம், பாஸ்போர்ட் எண் மற்றும் முடிவடையும் தேதி, முகவரி, செல்பேசி எண், இந்திய முகவரி போன்ற சில தகவல்கள் கொடுக்க வேண்டும். பின்னர் மின்னஞ்சலுக்கு மற்ற விவரங்கள் வரும். அடையாள அட்டை இந்திய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இதுவரை இதில் பதிவு செய்யாதவர்கள் உடனே இதை பயன்படுத்தி கொள்ளவும்.
http://uaeindians.org/registration.aspxநன்றி:மணற்கேணிடைம்ஸ்

இந்தியாவை நிர்வகிக்கும் முக்கிய பதிவிகளுக்குக்கான நுழைவு தேர்வை
மத்திய அரசின் UPSC வருட வருடம் நடத்தி வருகின்றது. மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்), சுங்கத்துறை, வெளியுறவு துறை உட்பட 24 அரசு உயர் பதவிகளுக்கான (IAS, IPS, IFS etc…) முதல் கட்ட நுழைவு தேர்வு Civil Services Preliminary Examination 2011 விண்ணப்பம் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகின்றன. தேர்வை பற்றிய முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவையே நிர்வகிக்கும் முக்கிய அரசு பதவிகளுக்கான தேர்வு என்றும் இதை சொல்லலாம். முஸ்லீம்கள் ஒடுக்கப்படுவதற்க்கும், உரிமைகள் நசுக்கப்படுவதர்க்கும் இது போன்ற மாவட்ட ஆட்சியர், காவல் துறை ஆணையர், கண்கானிப்பாளர் போன்ற பணிகளில் முஸ்லீம்கள் இல்லாததே (அல்லது மிக குறைவாக இருப்பதே) காரணம். இந்த
தேர்வை எழுதி வெற்றி பெறுவதன் மூலம் நாமும் மாவட்ட ஆட்சியராகவும், காவல் துறை ஆணையராகவும், உள்துறை, உளவுத்துறை என இந்தியாவின் முக்கிய அதிகார பொருப்புகளில் அமர முடியும். இந்த தேர்விற்க்கான கட்டணம் வெரும் ரூ.70 தான். இப்படி அதி முக்கியதுவம் வாய்ந்த இந்த தேர்வை எழுதும் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிக குறைவு.