கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

ரபீயுல் அவ்வல்

ரபீயுல் அவ்வல்இஸ்லாமிய காலண்டரின் 3வது மாதம்.
ரபீயுல் அவ்வல் என்ற பதத்தின் பொருள்:வசந்த காலத்தின் முதல் மாதம். இறைத்தூதர் முஹம்மத் (ஸல்…) அவர்கள் மண்ணுலகுக்கு வந்ததும், மரணமடைந்ததும் இந்த மாதத்தில்தான்.

ரபீயுல் அவ்வல் மாதம் நடந்தேறிய நிகழ்வுகள்:
இறைத்தூதர் முஹம்மத் (ஸல்…) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிஜ்ரத்.
ஹிஜ்ரி 2ல் புவாத் யுத்தம்.
ஹிஜ்ரி 2ல் ஸஃப்வான் யுத்தம்.
நபிகளார் நபிப்பட்டம் பெறுவதற்கு 7 வருடங்கள் முன்பு அவர்களின் மகள் ருகையா (ரலி…) அவர்களின் பிறப்பு.
நபிகளார் நபிப்பட்டம் பெறுவதற்கு 6 வருடங்கள் முன்பு அபூபக்கர் (ரலி…) அவர்களின் மகள் அஸ்மா (ரலி…) அவர்களின் பிறப்பு.
அபூபக்கர் (ரலி…) அவர்கள் கலீஃபாவாகப் பதவியேற்பு.

ரபீயுல் அவ்வல் மாதம் நடந்தேறிய திருமணங்கள்:
ஹிஜ்ரி 3ல் மூன்றாவது கலீஃபா உத்மான் (ரலி…) அவர்களுக்கு நபிகளாரின் மகள் உம்மு குல்தூம் (ரலி…) அவர்கள் மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்கள்.

ரபீயுல் அவ்வல் மாதம் நடந்தேறிய மரணங்கள்:ஹிஜ்ரி 4ல் நபிகளாரின் மனைவியும், இறை நம்பிக்கையாளர்களின் அன்னையுமான ஸைனப் (ரலி…) அவர்கள் மரணமெய்தினார்கள்.
ஹிஜ்ரி 10ல் நபிகளாரின் மகனார், இப்றாஹீம் (ரலி…) அவர்கள் மரணமெய்தினார். (அன்னாரது தாயார் மாரியா கிப்தியா).

இந்தியர்கள் நோயில் விழும் வாய்ப்புகள் அதிகரிப்பு: உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

இந்தியர்களின் வாழ்க்கை முறையும் உணவுப் பழக்க வழக்கங்களும் மாறிவிட்டன; உடல் உழைப்பு குறைந்துவிட்டது. உடல் பயிற்சி என்பது அறவே கிடையாது.

மணிக்கணக்காக தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்து தொடர்கள் பார்ப்பதும் நொறுக்குத் தீனி தின்பதும் காபி, டீ அடிக்கடி குடிப்பதும் அதிகரித்துவிட்டது.

ஆண்கள் புகையிலை, மதுபான வகைகளை அடிக்கடி பயன்படுத்துகின்றனர். இரவில் நேரத்தோடு தூங்காமல் நடுநிசிவரை கண் விழிப்பதும் அதிகரித்து வருகிறது. இந்தக் காரணங்களால் இந்தியர்களுக்கு இதய நோய், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதி, கால் மூட்டுகள் வலுவிழப்பது அதிகம் வரத் தொடங்கியிருக்கிறது என்று உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கிறது.

இந்தியாவில் இப்போது நடுத்தர வர்க்கத்தாரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களுடைய வாழ்க்கை முறை அடியோடு மாறிவருகிறது. உடல் உழைப்பையும், உடலை வருத்தி செய்யும் செயல்களையும் ஏதோ ஒரு காரணத்துக்காக கைவிட்டு வருகிறார்கள்.

சத்துள்ள புன்செய் தானியங்கள், நவதானியங்கள், காய்கறி, பழங்களைச் சாப்பிடும் பழக்கம் குறைந்து வழக்கம் அல்லாத பச்சரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு போன்றவற்றை அதிகம் உட்கொள்கின்றனர்.

காபி, டீ ஆகிய சூடான பானங்களுடன் மதுவகைகளை ருசி பார்க்கும் வழக்கம் ஆண்களிடம் அதிகரித்து வருகிறது. இது படிப்படியாக கல்லீரல், குடல் ஆகியவற்றுடன் முழு உடலையும் கெடுத்துவிடும் என்பதை அறிந்தே இப்பழக்கத்தை வளர்த்துக் கொண்டு வருகின்றனர்.

எண்ணெயில் பொரித்தது, அவசரகதியில் மசாலா பொருள்களுடன் தயாரித்தது, காரம், மணம், சுவைக்காக ரசாயனங்கள் சேர்த்தது ஆகியவற்றை விரும்பி உண்ணும் போக்கு அதிகரித்து வருகிறது.

குளிர்பானங்களிலும் உள் உறுப்புகளுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய அதிக அமிலத்தன்மையும் காரத்தன்மையும் உள்ள,சர்வதேச அளவில் விளம்பரப்படுத்தப்படும் பானங்களைக் குடிப்பது, ஐஸ்கிரீம், சாக்லெட் போன்ற பல்லுக்கும் உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் சுவைப் பண்டங்களைத் தின்பது ஆகியவையும் அதிகரித்துவிட்டன.

எல்லாவற்றையும் விட பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் அரசு அலுவலகங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் பணிபுரியும் இளைஞர்களும் உடல் பயிற்சியை அறவே விட்டுவிட்டனர்.

காலை, மாலை நேரங்களில் திடல்களில் விளையாடுவது என்பதும் அபூர்வக் காட்சியாகிவிட்டது. இலவச பஸ் பாஸ்களாலும், டூ வீலர் எனப்படும் பெட்ரோல் வாகனங்களாலும் நடப்பது என்பதே மறந்ததுபோல ஆகிவிட்டது.

இப்படி எல்லா வழிகளிலும் உடலுக்கு உரம் சேர்க்கும் செயல்களை நிறுத்திவிட்டு, உடலைச் சல்லடையாகத் துளைக்கும் மதுபானங்களையும் தின்பண்டங்களையும் சுவைப்பது அதிகமாகிவிட்டதால் எதிர்காலத்தில் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.

மத்திய, மாநில அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் உடனே போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மக்களை உடல் பயிற்சியில் தீவிரமாகத் திருப்பிவிட்டால்தான் சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் எண்ணிக்கை இந்தியாவில் குறையும் என்கிறது.

மாரடைப்பு, மூளையில் ரத்தம் உறைதல் (பக்கவாதம்), ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகுதல், ரத்தக்கொதிப்பு அதிகமாதல், கழுத்துப் பகுதியில் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், எலும்புகள் தேய்ந்து வலுவிழத்தல், மனநலம் குன்றி எப்போதும் சோகத்திலும் விரக்தியிலும் ஆழ்ந்திருத்தல் ஆகியவை அதிகரித்து வருவதாக அதன் களஆய்வு தெரிவிக்கிறது.

கேரளம் தடுப்பு நடவடிக்கை:
பெண்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்புகள் எவை என்று தெரிந்து தடுப்பு நடவடிக்கைகளை கேரள அரசு எடுத்திருக்கிறது. மக்களுக்கு அது விழிப்புணர்வை ஊட்டி வருகிறது.

ஆண்டுக்கு 32 லட்சம் மக்கள் உலகமெங்கும் இறக்கின்றனர். அவர்களில் 26 லட்சம் பேர் ஏழை, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வந்த நோய்களை ஆராய்ந்ததில் உடல் பயிற்சி இல்லாததுதான் இறப்புக்குக் காரணம் என்று தெரிகிறது.

சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அடித்தல், நீண்ட தொலைவு காலாற நடத்தல், வீட்டு வேலைகளைத் தாங்களே செய்தல், கிணற்றில் நீர் இறைத்தல், துணிகளைத் துவைத்தல், வீடு பெருக்கி மெழுகுதல், காலை மாலை குடும்பத்தவர்களுடன் பூப்பந்து, சிறகுப்பந்து, வளைபந்து போன்றவற்றையாவது ஒரு மணி நேரம் விளையாடுதல் மூலம் உடலையும் உள்ளத்தையும் நலமாக வைத்துக் கொள்ளலாம் என்று உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகிறது.

இதற்கு முதல் படியாக எல்லோர் வீடுகளிலும் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியை நாளின் பெரும்பாலான நேரங்களில் மூடி வைப்பதே நல்லது. அது கண்பார்வை கெடுவதை நிச்சயம் தடுக்கும். மனம் அமைதி அடையும்.

தினமணி

கைதிற்கு பயந்து சுவிஸ் பயணத்தை ரத்துச்செய்​த ஜார்ஜ் w புஷ்

அடுத்தவாரம் திட்டமிட்டிருந்த சுவிஸ் சுற்றுப் பயணத்தில் கைதுச் செய்யப்படுவோம் என பயந்து பயணத்தை ரத்துச் செய்துள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் w புஷ்.

வருகிற 12-ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் நடைபெறவிருகும் நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் பங்கேற்கமாட்டார் என அவரது செய்தித் தொடர்பாளர் டேவிட் ஷேர்ஸர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் கைதுச்செய்யப்பட்டு விடுவோம் என அஞ்சி ஜார்ஜ் புஷ் தனது சுற்றுப் பயணத்தை ரத்துச் செய்ததாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஆனால், இடதுசாரிகளின் போராட்டம்தான் காரணம் என அவ்வமைப்புகள் தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிலிருந்து கைதுச் செய்யப்பட்டவர்களை கொடூரமாக சித்திரவதைச் செய்ததற்காக புஷ்ஷின் மீது வழக்கு பதிவுச்செய்ய தீர்மானித்ததாக மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன.

சுவிட்சர்லாந்தில் சுற்றுப்பயணம் நடத்தவிருக்கும் புஷ்ஷை கைதுச் செய்ய அந்நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஜெனீவா நீதிமன்றத்தில் புஷ்ஷின் மீது சித்திரவதைக் குற்றம் சுமத்தி வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுவிட்சர்லாந்தில் ஜார்ஜ் புஷ் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் ஹோட்டலுக்கு வெளியே போராட்டத்தில் கலந்துகொள்பவர்கள் ஒரு ஜோடி ஷூக்களுடன் வரவேண்டுமென மனித உரிமை அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.

கடந்த 2008-ஆம் ஆண்டு ஜார்ஜ் புஷ்ஷின் மீது ஈராக்கின் தலைநகர் பாக்தாதில் வைத்து ஷூவை வீசிய முன்ததர் அல் ஸெய்தியின் தீரச்செயலை நினைவுக்கூறும் விதமாகத்தான் இந்நடவடிக்கை என அவ்வமைப்புகள் கூறியிருந்தன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ் &பாலைவனதூது

தாய்லாந்து விஞ்ஞானியின் மாற்றம்..

டாக்டர் டிகாடட் டிஜாஸன் (Dr. Tagatat Tejasen):
லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ்
இந்த மனிதர் இஸ்லாத்தின் கொள்கையைக் (ஷஹாதா) மொழிந்து அவர் இஸ்லாமியர் ஆகுவதை வெளிபடுத்துகிறார். இந்த சம்பவம் நடந்தது ரியாத்தில் நடந்த “எட்டாவது சவுதி மருத்துவ மாநாட்டில்” ஆகும். அவர் தாய்லாந்தில் உள்ள ஷியாங் மாய் பல்கலைகலத்தின் உடற்கூறு மருத்துவத் துறைத் தலைவர் பேராசிரியர் “தெஜாதத் டிஜாஸன்” ஆகும். அவர் முன்பு அதே பல்கலைகழகத்தில் மருத்துவத் துறைத் தலைவராக இருந்தார்.Skin Structure பேராசிரியர் தெஜாஸனிடம் அவரது சிறப்பு துறையான உடற்கூறு மருத்துவம் தொடர்புடைய குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் சிலவற்றை நாம் அளித்தோம். அப்போது அவர் தங்களது புத்த சமய புத்தகங்களில் கரு வளர்ச்சி நிலைகள் பற்றிய சரியான விவரங்கள் உள்ளன என கருத்து தெரிவித்தார். நாங்கள் அந்த புத்தகங்கில் உள்ள விவரங்களை அறிய மிக ஆவலாய் உள்ளோம் எனவும் அந்த புத்தகங்களைப் பற்ற அறிய விரும்புவதாகவும் கூறினோம். ஒரு வருடம் கழிந்து பேராசிரியர் டிஜாஸன் “மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக்கழகத்திற்கு” தேர்வாளராக வந்தார். நாங்கள் அவர் கடந்த வருடம் கூறியதை நினைவு கூர்ந்தோம். அந்த கூற்றை தான் உறுதிபடுத்தாமல் கூறி விட்டதாக அவர் வருத்தம் தெரிவித்தார். அவர் புத்த சமய புத்தகங்களை ஆராய்ந்த போது அவைகளில் இது சம்பந்தமான ஒரு விவரமும் இல்லை என்பதை அறிந்தார். இதன் பின் பேராசிரியர் கீத் மூரே எழுதிய ‘தற்கால கருவியல் சம்பந்தமான கருத்துக்கள் எப்படி குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் உள்ள கருத்துக்களுடன் ஒத்து வருகின்றது” என்ற உரையைக் கொடுத்தோம். அவரிடம் கீத் மூரே பற்றிக் கேட்டோம். அவரைப் பற்றித் தெரியும் என்றும் அவர்; ‘கருவியல் துறையில்” உலக பிரசித்து விஞ்ஞானி என்றும் கூறினார். பேராசிரியர் டிஜாஸன் இந்த விவரங்ளைப் (மூரேயின் கருத்துக்கள்) படித்து மிகவும் ஆச்சரியப்பட்டார். நாங்கள் அவரது சிறப்புத் துறையிலே பல கேள்விகளைக் கேட்டோம். அதில் ஒன்று தான் இன்றைய நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பான “தோலின் உணர்ச்சிகள்” பற்றியதாகும். டாக்டர் டிஜாஸன் ‘ஆம்- தோல் ஆழமாக எரிfireக்கப் பட்டால் (உணர்ச்சிகள் பாதிக்கும்)” என்றார். அவரிடம் சொல்லப்பட்டது- ‘நீங்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இது பற்றி கூறிய இந்த புத்தகத்தை – புனித நூலை – குர்ஆனை அறிய விரும்புகிறீர்கள?;” இறை நிராகரிப்போர்களை நரக நெருப்பால் தண்டனை கொடுப்பதைப் பற்றிக் கூறும் போது அவர்களது தோல் அழிந்த பின் திரும்ப அவர்களுக்கு புதிய தோலை உருவாக்கி அவர்களுக்கு நரக வேதனையை அனுபவிக்கச் செய்யப்படும் என்று கூறுவதன் மூலம் உணர்ச்சிகளின் நரம்புகள் தோளில் தான் முடிவடைகின்றன என்னும்உண்மை விளங்குகிறது. குர்ஆனின் வசனங்களைப் பாருங்கள்:
யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ- அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்;. அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை- அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென- அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் – நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:56)
நாம் அவரிடம் கேட்டோம்: ’1400 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ச்சிகளின் நரம்புகள் தோலில் முடிவடைகின்றன என்பதற்கு இது ஆதாரம் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?’ ‘ஆம் நான் ஏற்றுக் கொள்கிறேன்’ என்றார் டாக்டர் டிஜாஸன் உணர்ச்சிகள் பற்றிய இந்த உண்மை நீண்ட காலத்திற்கே முன்பே தெரிந்ததாகும். காரணம் யாராவது ஒருவர் எதாவது தவறு செய்தால் அவர் தோலைச் சுடுவதன் மூலம் தண்டிக்கப்படும். அதன் பின் அல்லாஹ் அவருக்கு பதிய தோலை போர்த்தி வேதனையை அனுபவிக்கச் செய்வான். அதாவது பல்லாண்டுகளுக்கு முன்பே வேதனையை உணரக்கூடியவைகள் தோலில் தான் உள்ளன என்பதை அறிந்துள்ளார்கள். எனவே தான் புதிய தோல் மாற்றப்படுகின்றது. தோல் தான் உணர்ச்சிகளின் மையம். நெருப்பால் முழுமையாக தோல் எரியும் போது- அது அதனுடைய உணர்ச்சிகளை இழந்து விடுகின்றது. அதன் காரணமாகத் தான் மறுமையில் அல்லாஹ் தோலை மாற்றிக் கொண்டே இருப்பான் குர்ஆன் 4:56ல் உள்ளது போல். நாம் அவரிடம் மேலும் சில கேள்விகளைக் கேட்டோம். ‘இவை முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு மனிதர்களின் மூலமாக வந்திருக்க வாய்ப்புள்ளதா? பேராசிரியர் டிஜாஸன் இது ஒரு காலத்திலும் மனிதர்களின் மூலம் வந்திருக்க சாத்தியம் இல்லை என்று மறுத்தார். ஆனால் இந்த அறிவின் காரணியைப் பற்றியும் முகம்மது எங்கிருந்து இதனைப் பெற்றிருக்க வாய்ப்பள்ளது? என்றும் கேட்டார். ‘மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் உள்ள அல்லாஹ்விடம் இருந்த’ என்று நாம் கூறினோம். அதன்பின் அவர் ‘அப்படி என்றால் யார் அந்த அல்லாஹ’” என்று கேட்டார்.
  • அவன் தான் இருப்பவைகள் அனைத்தையும் படைத்தவன் ஆகும்.
  • நீங்கள் ஒரு அறிவைக் கண்டால்- அது மிக்க அறிவுடையோனிடமிருந்து மட்டும் தான் வந்திருக்க முடியும்.
  • இந்த அண்டங்களின் படைப்புகளில் அறிவைக் கண்டால்- அனைத்து அறிவுடையோனால் தான் இந்த அண்டங்கள் படைக்கபட்டதால் ஆகும்.
  • இந்த படைப்புகளில் ஒரு முழுமையைக் கண்டால் இவையனைத்தையும் மிக அறிவான்மையுள்ள ஒருவனால் தான் படைக்கபட்டுள்ளது என்பதற்கு ஓர் ஆதாரமாகும்.
  • கருணையைக் கண்டால் கருணைமிக்க வல்லோனின் படைப்பு என்பற்கு சாட்சியாக ஆகும்.
  • இதே போல் படைப்புகள் அனைத்தும் ஒரு முறைப்படியாகவும்- ஒழுங்காகவும் அமையப் பெற்றதைக் கண்டால் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் உள்ள ஒரே இறைவனால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது என்பதற்கு இது ஓர் ஆதாரமாகும்.
cross section of skin பேராசிரியர் டிஜாஸன் நாம் கூறிவைகளை ஏற்றுக் கொண்டார். அவர் தம் நாடு திரும்பி இந்த புதிய ஞானத்தையும்- கண்டுபிடிப்புகளைப் பற்றிய பல விரிவுரைகள் நிகழ்த்தினார். இந்த விரிவுரைகளின் பயனாக அவரது மானவர்களில் ஐந்து பேர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக நாம் அறிந்தோம். பின் ரியாத்தில் நடந்த எட்டாவது சவுதி மருத்துவ மாநாட்டில் குர்ஆன் மற்றும் சுன்னாவில் உள்ள மருத்துவ அறிவியல் பற்றிய விரிவுரைகளில் தொடர்ச்சியாக பங்கேற்றார். பேராசிரியர் டிஜாஸன் நான்கு நாட்கள் முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத பல அறிஞர்களிடம் குர்ஆன்- ஹதீஸ்களில் உள்ள இந்த உண்மைகளைப் பற்றி கலந்து ஆலோசிப்பதில் கழித்தார். அந்த மாநாட்டின் இறுதிப் பகுதியில் பேராசிரியர் எழுந்து பேசலானார்: ‘கடந்த மூன்றாண்டுகளாக ஷேக் அப்துல் மஜீத் அல் ஜிந்தானி அவர்களால் தரப்பட்ட குர்ஆனில் நான் ஈடுபாடலானேன். கடந்த வருடம் நான் பேராசிரியர் கீத் மூரே அவர்களின் புதிய ஆய்வுகளை ஷேக் மூலம் பெற்றேன். அவர்கள் இதனை தாய்லாந்து மொழியில் மொழிபெயர்த்து தாய்லாந்து முஸ்லிம்களிடையே உரையாற்றக் கூறினார்கள். அவர்களது வேண்டுகோளை நான் நிரைவேற்றினேன். நான் ஷேக்கிடம் கொடுத்த வீடியோ கேசட்டில் நீங்கள் அதனைப் பார்க்கலாம். இந்த மாநாட்டு மூலமும் எனது ஆராய்ச்சிகளினாலும் நான் நம்புவது என்னவென்றால்- 1400 ஆண்டுகளுக்கு முன்பே குர்ஆனிலே பதியப்பட்டுள்ளது அனைத்துமே உண்மை என்பதையும் அவைகளை அறிவியல் மூலம் நிருபிக்கலாம் என்பதாகும். படைப்பதற்கு தகுதியான இறைவன் மூலம் பெற்ற இந்தச் செய்தியை தெரிவித்த முஹம்மது நபி அவர்கள் படிக்கவோ- எழுதவோ தெரியாதவர். எனவே நிச்சயமாக அவர் இறைவனின் தூதராவார்கள். எனவே நான் ‘லாயிலாஹ இல்லல்லாஹ்..” அதாவது வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை- ‘முஹம்மது ரசூலுல்லாஹ்” முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவரார்கள்” என்பதை கூற இதுவே சரியான நேரம் என்பதை உணர்கிறேன். நான் இந்த மாநாட்டின் மூலம் அறிவியல் உண்மைகளi மட்டுமல்லாது மேலும் பல அறிஞர்களிடையே கலந்துரையாடி பல அறிஞர்களின் நட்பு கிடைத்தது. இந்த மாநாட்டிற்கு வருகை தந்ததன் மூலம் நான் அடைந்த மதிப்பிட முடியாத ஒரு பலன் என்னவென்றால் ‘லாயிலாஹ இல்லல்லாஹ் முகம்மது ரசூலுல்லாஹ்” என்னும் கலிமாவைக் கூறி நான் ஒரு முஸ்லிமானதுதான்.
எவர்களுக்குக் கல்வி ஞானம் அளிக்கப்பட்டுள்ளதோ- அவர்கள் உமக்கு உம்முடைய -இறைவனிடமிருந்து அருளப்பெற்ற (இவ்வேதத்)தை உண்மை என்பதையும்- அது வல்லமை மிக்க- புகழுக்குரியவ(னான நாய)னின் நேர்வழியில் சேர்க்கிறது என்பதையும் காண்கிறார்கள். (அல்குர்ஆன்: 34:6)                                          
நன்றி;சித்தார்கோட்டை தமிழ் இணையதளம்

வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்களிப்பது எப்படி? மத்திய அரசு விளக்கம்

வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்களிப்பது எப்படி? மத்திய அரசு விளக்கம்
இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
அதன்படி தேர்தல் நடைபெறும் போது, தங்கள் தொகுதிக்கு வந்து வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்களிக்கலாம். இதற்காக தங்கள் பாஸ்போர்டை வாக்குச்சாவடியில் பணியில் உள்ளவர்களிடம் காட்ட வேண்டும். அவர்கள் தேர்தல் நடைபெறும் தொகுதியில் உள்ளவர்கள்தான் என்பது அதன் மூலம் அறிந்து கொள்ளப்படும்.
18 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்ற பொதுவான விதியுடன், வேறு எந்த நாட்டிலும் அவர்கள் குடியுரிமை பெற்றிருக்கக் கூடாது என்பதும் முக்கியமாகும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி ஒருவருக்கு வாக்களிக்க உரிமை உண்டு என்றால், தேர்தலில் போட்டியிடவும் உரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் இந்தியாவில் வாக்குரிமை வேண்டும் என்ற வெளிநாடுவாழ் இந்தியர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது. முன்பு உள்ள விதிகளின்படி ஒருவர் 6 மாதங்களுக்கு மேல் வெளிநாட்டில் சென்று தங்கியிருந்தால், வாக்காளர் பட்டியலில் இருந்து அவர்களது பெயர் நீக்கப்பட்டுவிடும்.
இந்தியாவைச் சேர்ந்த சுமார் 1 கோடியே 10 லட்சம் பேர் பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர்.
தினமணி

மானுட சமுதாயத்தின் நல்வாழ்வுக்காக மகத்தான சேவையாற்றிய மாமனிதர் - மனிதரில் புனிதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் பேச்சு

நான் உங்களை போன்ற ஒரு சாதாரண மனிதனே என தன்னை அழைத்துக் கொண்டு மானுட சமு தாயத்தின் நல்வாழ்வுக்காக மகத்தான சேவையாற்றிய மாபெரும் சாதனையா ளராக மனிதரில் புனிதராக விளங்கியவர் மாமனிதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் என வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

வடக்குகோட்டையார் முஹம்மது அப்துல்லா அறக்கட்டளை சார்பில் மீலாது நபி விழா தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னை சைதாப் பேட் டையில் நடைபெறுகிறது. 2-ம் நாள் நிகழ்ச்சியான நேற்று வேலூர் நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் வாழ்த் துரை வழங்கினார்.

அப்போது அவர் கூறிய தாவது-

மனித குலம் ஒற்றுமை யுடனும் - நல்லிணக்கத்து டனும் சகோதரப் பாசத்து டனும் வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத் தோடு சான்றோர்கள், ஆன்றோர்கள் பலரும் பாடுபட்டு வருகின்றனர். மக்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நல்லி ணக்கத்துடன் வாழ்வதற்கு தேவையான வழிமுறை களை அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்விலி ருந்து பெற்றுக் கொள்ள முடிகிறது. இங்கே பேசிய தமிழக திட்டக்குழு துணைத் தலைவர் முனை வர் நாகநாதன் அவர்கள் ஆற்றிய உரையானது மிக சிறப்பான ஆய்வுரையாக அமைந்திருந்தது.

நாமெல்லாம் அறிய வேண்டிய பல அற்புதமான செய்திகளை அவர்கள் எடுத்துரைத்தார்கள். இந்த கருத்துக்கள் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளை யும் நாம் ஒவ் வொருவரும் மேற் கொள்ள வேண்டும். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தன்னை குறித்து கூறும்போது, `நான் உங்களைப் போன்ற சாதாரண மனிதன்தான்� என்றே அழைத்துக் கொண்டார்கள்.

அண்ணலாரின் பெருந் தன்மையின் உச்சகட்ட வெளிப்பாடாகவே இதனை எடுத்துக் கொள்ள முடிகிறது. அவர்கள் தன்னை சாதாரணமாக அழைத்துக் கொண்டா லும் அவர்கள் அளவுக்கு மானுட சமுதாயத்தின் நல்வாழ்வுக்காக சேவையாற்றிய மற்றோர் மனிதரை நபிகளாரோடு ஒப்பிட்டுக் காட்ட இய லாது என்ற அளவுக்கு அவர்கள் மனிதரில் புனிதராக - மாமனிதராக வாழ்ந்து காட்டியவர்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் போதித்த இறை நெறி கோட்பாடானது நமது தமிழ் நெறிக்கு மிகவும் நெருக்கமானதாக இன்னும் சொல்லப் போனால் தமிழ் நெறியின் மறுவடிவமாகவே அமைந்திருக்கிறது. திருமூலர் பாடல்களில் இடம் பெற்றுள்ள பகுத்த றிவு கருத்துக்களை ஒத்த தாகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போத னைகள் அமைந்துள்ளன. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் போதித்த இறைக்கோட்பாடு புதிதாக உருவாக்கப்பட்ட கோட்பாடல்ல. ஆதி மனிதர் காலம் தொட்டு படிப்படியாக வளர்ச்சி யுற்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் பூர்த்தி செய் யப்பட்ட வழிமுறையாக மார்க்கமாக விளங்குவதே இஸ்லாமிய மார்க்கமாகும்.

இஸ்லாத்தைப் பின் பற்றுவோர்களை மேற்கத் திய நாடுகளைச் சார்ந்த எழுத்தாளர்கள் `முஹம்ம தியன்� என்றும், `முஹம் மதன் ரிலீஜன்� என்றும் எழுதுகிறார்கள். இது அவர்களது அறியாமை யும், தவறான புரிதலையுமே வெளிப்படுத்துகிறது. முஹம்மது நபி (ஸல்) அவர்களால் இஸ்லாம் மார்க்கம் உருவாக்கப்பட வில்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறப்ப தற்கு முன்பிருந்தே ஆதி மனிதர் ஆதம் காலம் தொட்டே இஸ்லாம் மார்க்கம் இருந்து வரு கிறது.

அம் மார்க்கத்தின் இறுதித் தூதராக மனித குலம் அனைத்திற்குமான பொதுவான தூதராக வருகை தந்தவர்தான் முஹம்மது நபி (ஸல்) அவர்கள். மானுட சமுதா யத்தின் நல்வாழ்வுக்காக மகத்தான சேவையாற்றிய நபிகள் (ஸல்) அவர்களின் பெருமைகளை எடுத்து ரைக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அனைத்து சமுதாயத்தைச் சார்ந்த மக்களும் அதிகளவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. பேசினார்.
நன்றி;http://www.muslimleaguetn.com/

மோடியை கைது செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தை திட்டமிட்டு நடத்தியவர் நரேந்தி மோடிதான் என்றாலும் அவருக்கு இதில் தொடர்பு இல்லை என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மோடியின் ஆதரவாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட 600 பக்க அறிக்கையை தெஹல்கா இணையதளமும் ஹைட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியும் அதன் நகலை வெளியுட்டுள்ளனர். பாஜகவின் முகத்திரையைக் கிழிக்கும் வகையால் நரேந்திர மோடிக்கு கலவரத்தில் பங்கு உண்டு என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 13 ஆதாரங்களையும் சிறப்பு புலனாய்வுக் குழு வெளியிட்டுள்ளது.

நரேந்திர மோடியை சிறப்புப் புலனாய்வுக்குழு குற்றம் சாட்டவில்லை என்ற பிரச்சாரம் பொய் என்பது தெளிவாகிவிட்டதால் கடமை தவறி கலரத்தை  முன்னின்று நடத்திய நரேந்திர மோடி அரசை டிஸ்மிஸ் செய்து அவரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக  சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது
நன்றி;கொள்ளுமேடுxpress