கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

குழந்தைகளைப் பாதிக்கும் ஆஸ்த்மா.

இன்று குழந்தைகளைப் பாதிக்கும் மிகப் பெரிய பிரச்னையாகக் கருதப்படுவது, ஆஸ்துமா. சுமார் 10 சதவிகிதக் குழந்தைகள் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். போதிய விழிப்பு உணர்வு இல்லாதது மட்டுமே, குழந்தைகள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுவதற்கான காரணம்.


‘ஆஸ்துமாவை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டால்… மற்ற குழந்தைகள்போல வெளியே சென்று விளையாட முடியாது. அடிக்கடி பள்ளிக்கு விடுப்பு எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்ப தால், பாதிக்கப்பட்ட பிஞ்சுகளின் வாழ்க்கைத் துள்ளலே குறைந்துவிடும்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, முன்பு சிரப் அல்லது மாத்திரை கொடுப்போம். தொடர்ந்து மருந்துகள் எடுப்பது, குழந்தைக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். தவிர, பெரியவர்கள் பயன்படுத்துவதுபோன்று, இன்ஹேலர் மூலம் மருந்துகளை உறிஞ்சுவது குழந்தைகளால் முடியாது. இப்போது, இந்த குறையைத் தீர்க்கும் வண்ணம், ‘ஸ்பேஸருடன் பேபி மாஸ்க் இன்ஹேலர்’ என்ற கருவி உள்ளது. இந்தக் கருவியைக் குழந்தையின் முகத்தில் பொருத்தி, மருந்தை அழுத்தி னால் போதும்… மருந்து நேராகக் குழந்தைகளின் நுரையீர லுக்குச் சென்று விடும். மருந்து நேரடியாக நுரையீரலுக்கே செல்வதால், குறைந்த டோஸ் மருந்துகளே குணப்படுத்தப் போதுமானதாக இருக்கி றது. இதனால், பக்க விளைவுகளும் குறைந்துவிட்டன.

உறிஞ்சும் மருந்திலும் புதிய மாற்றங்கள் வந்துவிட்டன. முதலாவது குரூப், ரிலீவர். ஆஸ்துமா அறிகுறி தோன்றியதும் குழந்தைக்கு இந்த மருந்தைச் செலுத்தினால், உடனடி ஆறுதல் கிடைக்கும். பிரச்னை சரியானதும், இதை நிறுத்திவிடலாம். மீண்டும் பாதிப்பு அடிக்கடி ஏற்படாமல் இருக்க, பிரிவென்டர் எனப்படும் தடுப்பு மருந்தும் உள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். ஆனால், இதுபற்றிய போதிய விழிப்பு உணர்வு பெற்றோர்களிடமே இருப்பது இல்லை. அதனால், நோய் அறிகுறி இருக்கும்போது மட்டுமே பயன்படுத்தி, குணமானதும் நிறுத்திவிடுகிறார்கள். இதனால்தான் மீண்டும் மீண்டும் ஆஸ்துமா பிரச்னை வருகிறது.

பொதுவாக மூச்சை இழுக்கும்போது, அது நுரை யீரலின் சின்னச் சின்னக் குழாய்கள் வழியாக உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்கிறது. ஆஸ்துமா பாதிப்பில், இந்தக் குழாய்கள் சுருங்கி விடும். மருந்து செலுத்தியதும் மீண்டும் பழைய வடிவத்துக்குத் திரும்பும். இந்த தடுப்பு மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால், நிரந்தரமாகவே அந்தக் குழாய்கள் சுருங்கிவிடுகின்றன. இதை ஏர்வே ரீ-மாடலிங் என்று சொல் வோம். அப்படி நிரந்தரமாகக் குறுகி விட்டால், மிகப் பெரிய பிரச்னையாகி விடலாம். எனவே, தற்காலிக நிவாரணம் கிடைத்துவிட்டது என்பதற்காக மருந்து எடுப்பதை நிறுத்திவிடாமல், குறிப்பிட்ட காலத்துக்குத் தொடர்ந்து மருந்து எடுத்துக்கொள்வது அவசியம்.

சில குழந்தைகளுக்கு தூசு அலர்ஜி மிகப் பெரிய பிரச்னை. அதற்காக, அந்தக் குழந்தையை வீட்டுக்குள்ளேயே வைத்திருக்க முடியாது. பள்ளிக்குச் சென்றுதான் ஆகவேண்டும், மற்ற குழந்தைகளுடன் விளையாடத்தான் வேண்டும். அப்படிப்பட்ட குழந்தை களுக்கு அந்த அலர்ஜியைத் தவிர்க்க, ‘சப்லிங்குவல் இம்யூனோதெரபி’ அறிமுகமாகி உள்ளது. இந்தியா வில் ஒரு சில இடங்களில்தான் இந்த வசதி உள்ளது. இந்த முறையில், முதலில் குழந்தைகளுக்கு எதனால், என்ன மாதிரியான அலர்ஜி ஏற்படுகிறது என்பதைப் பரிசோதனை செய்து கண்டறிவோம். அதன் அடிப் படையில், அலர்ஜிக்கு எதிரான நோய் எதிர்ப்பை உருவாக்கும் ‘அலர்ஜன்’களை அந்தக் குழந்தையின் நாக்கில் வைப்போம். முதலில் சிறிய அளவில் ஆரம் பித்து நாளுக்கு நாள் அலர்ஜனின் அளவை அதிகமாக்குவோம். இதனால், குழந்தையின் உடலில் அலர்ஜிக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கூடிக் கொண்டே போகும். சிறிது காலத்தில் அந்த குழந் தைக்கு அலர்ஜி என்பதே இல்லாமல் போய் விடும்!

ஆஸ்துமா நோயில் இன்ஹேலர் விஷயத்தில்கூட பெற்றோர் மத்தியில் பயம் இருக்கிறது. அதாவது, போதைப் பழக்கம்போல, தங்கள் குழந்தைகள் இதற்கு அடிக்ட் ஆகிவிடுவார்களோ என்று அஞ்சுவார்கள். இந்த பயம் தேவை இல்லாதது. இதுபோன்ற தவறான எண்ணங்கள் பெற்றோர்களிடம் இருந்து விலகவேண்டும்.

அடிக்கடி இருமல், மூச்சு வாங்குதல், மாடிப்படி ஏறினாலோ, விளையாடினாலோ அதிகம் இளைப்பது, மூச்சு விடும்போது விசில் சத்தம் வருவது, மூச்சுவிட முடியாதபடி நெஞ்சில் அழுத்தம் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். இந்த அறிகுறிகள் இருந்தாலே ஆஸ்துமாதான் என்றும் முடிவு செய்துவிட முடியாது. வேறு சில நோய்களுக்கும் இதே அறிகுறிகள் உள்ளன. ஆனால், எதுவாக இருந்தாலும் மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சையைத் தொடர்வதுதான் நல்லது.

பெற்றோரில் ஒருவருக்கு ஆஸ்துமா பிரச்னை இருந்தாலும், குழந்தைக்கும் வர வாய்ப்பு அதிகம். தாய் கருவுற்று இருக்கும்போது புகைபிடித்தாலும், குழந்தைக்கு ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்பு அதிகம்.மற்றவர்கள் புகைக்கும்போது அதை கர்ப்பிணி சுவாசித்தாலும் அது கருவையும் பாதிக்கும். எனவே, கர்ப்ப காலத்தில் சிகரெட் புகையை சுவாசிக்கும் சூழலைத் தவிர்க்க வேண்டும்.

குழந்தைக்கு ஆறு மாதங்களுக்கு வேறு ஆகாரங் களைத் தவிர்த்து, தாய்ப்பால் மட்டுமே புகட்டினால், அந்தக் குழந்தைக்கு ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு!’ என்கிறார்.

அலர்ஜியை அண்டாமல் காக்க முயற்சிப்போம்!
Tamilsource,

0 கருத்துகள்: