கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

செரிமானத்தை தூண்டும் சோம்பு !!!

Fennel
அஞ்சரைப் பெட்டிக்குள்ளேயே ஆயிரம் மருந்துகள் உண்டு. அந்தளவிற்கு நம் வீட்டு சமையல் அறைகளுக்குள்ளேயே மாபெரும் மருத்துவக் களஞ்சியத்தை வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.
 வீட்டுச் சமையலில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் சோம்பு,
தலைசிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது.
பெருஞ்சீரகம், வெண்சீரகம் என்று அழைக்கப்படும் சோம்பு வெண்மை நிறத்துடன் சிறிது பச்சை கலந்த நிறமுடையது. இது பூண்டு வகையைச் சார்ந்தது. இலை, வேர் மற்றும் விதைகள் மருத்துவ பயன் கொண்டவை. விதைகளில் இரண்டு வகை உண்டு.
பண்டைய வல்லுநர்கள் இத்தாவரத்தினை பாம்பு கடிக்கு மருந்தாக பயன்படுத்தியுள்ளனர். மத்திய காலங்களில் இதனை சூனிய செயல்களுக்கு எதிரான தாவரமாக பயன்படுத்தியுள்ளனர்.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

இனிப்பு வகை சோம்பில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் பொருட்களான அனிதோள்,பென்கோன்,மெதைல் சவிகோல் உள்ளன. மேலும் ஃபிளவனாய்டுகள், கௌமெரின்கள், ஸ்டீரால்கள் காணப்படுகின்றன. கசப்பு வகைகளில் கூடுதலான ஃபென்கோன் உள்ளது.
ரத்தப்போக்கினை கட்டுப்படுத்தும்
கனிகள் வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரானது. மணமுள்ளவை. காய்ச்சல் போக்குவி. மார்பு மற்றும் சிறுநீரக நோய்களில் பயனுள்ளவை. சாறு கண்பார்வையை மேம்படுத்தும். இதன் சூடான கசாயம் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக இரத்தப் போக்கினை கட்டுப்படுத்துகிறது.
விதைகள் முக்கியமாக வயிற்று வாயு கோளாறுகள், வயிற்று வலி போக்கவும், வலி நீக்கியாகவும், மன ஆறுதல் தரவும் பயன்படுகின்றன.
குழந்தைகளுக்கு மருந்து
இவற்றின் கசாயம் குழந்தைகளின் வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு, வயிற்று உப்புசம், ஆகியவற்றைப் போக்குகிறது. பல் முளைத்தல் வலியினையும் போக்கும். விதைகளின் எண்ணெய், குடல்களின் பிடிப்பு வலியை நீக்குகிறது. பேதி மருந்துகளின் கூடுதல் செயல்பாட்டினால் ஏற்படும் பிடிப்பு வலியினை போக்கும்.
இலைகள் சிறுநீர் போக்கு தூண்டுவியாகும். வியர்வையினை அதிகரிக்கும். வேர்கள் பேதி மருந்தாக பயன்படுகின்றன. விதைகளின் வடிநீர் தொண்டைகம்மல் மற்றும் இருமல் போக்குவியாகும். தாய்மார்களின் தாய்ப்பால் அதிகரிக்க உதவுகிறது. மனிதர்களின் வாழ்நாள் அதிகரிக்கவும், எடை குறைவாகவும் பயன்படும் புகழ் பெற்ற தாவரமாக கருதப்படுகிறது.
செரிமானத்தை தூண்டும்
செரிமான சக்தியைத் தூண்ட எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளைக் கூட செரிக்கச் செய்யும் தன்மை சோம்பிற்கு உண்டு. உணவுக்குப்பின் சிறிதளவு சோம்பை வாயில் போட்டு மென்று சாறை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வந்தால் உண்ட உணவு எளிதில் சீரணமாகும்.குடல்புண் ஆறசாப்பிட்ட உணவினால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமடைகின்றன. இதனால் குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடலில் புண்கள் ஏற்படுகின்றன. இந்தப் புண்கள் ஆற சோம்பை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குடல்புண் நாளடைவில் குணமடையும்.
வயிற்றுவலி, வயிற்று பொருமல்அஜீரணக் கோளாறுகளால் வயிற்றில் வாய்வுக்களின் சீற்றம் அதிகமாகி வயிற்றுவலி, வயிற்று பொருமல் ஆகியவை ஏற்படுகின்றன. இவர்கள் உடனே சிறிதளவு சோம்பை எடுத்து வாயில் போட்டு மென்று தின்றால் சிறிது நேரத்தில் குணம் தெரியும்.
கருப்பை பலம்பெற 
கருப்பை பாதிக்கப்பட்டால் கருத்தரிப்பு நடக்காது. இதனால் சிலர் குழந்தை பேறு இல்லாமல் கூட அவஸ்தைப் படுவார்கள். பெருஞ்சீரகத்தை இளம் வறுவலாக வறுத்து பொடித்து, வேளையொன்றுக்கு 2 கிராம் வீதம் தனியாகவோ அல்லது பனங்கற்கண்டு கலந்தோ சாப்பிட்டு வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் விலகும்.ஈரல் பாதிப்பு நீங்கஉடலின் செயல்பாடுகள் அனைத்திற்கும் முக்கிய காரணியாக இருக்கும் உறுப்பு ஈரல்தான். ஈரல் பாதிக்கப்பட்டால் பித்தம் அதிகமாகி பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். ஈரல் நோயைக் குணப்படுத்த சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது.
சுரக் காய்ச்சல்அதிக குளிர் சுரம் இருந்தால் சோம்பை நீரில் கொதிக்க வைத்து கொடுத்தால் குளிர் சுரம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.இருமல் இரைப்பு மாறநாள்பட்ட வறண்ட இருமல், இரைப்பு இவைகளால் அவதிப்படுபவர்கள் சோம்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரைப் பருகி வந்தால் நாள்பட்ட இரைப்பு, மூக்கில் நீர் வடிதல் குணமாகும்.
பசியைத் தூண்டபசியில்லாமல் அவதிப்படுபவர்கள் சோம்பை தனியாக மென்று சாப்பிட்டு வந்தால் நன்கு பசியெடுக்கும்

0 கருத்துகள்: