கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

தற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் நரகவாதியே !

                                 ஏகஇறைவனின் திருப்பெயரால்....

                  وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ }
                    وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِن صَوْتِكَ إِنَّ أَنكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ

மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.திருக்குர்ஆன்.31:18.

''நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப் பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்'' (என்றும் அறிவுரை கூறினார்).திருக்குர்ஆன்.31:19.

அல்லாஹ்விற்கு ஆற்ற வேண்டிய கடமைகள்

இந்தக்கடமையே  மகத்தானதும் கட்டாயமானதுமாகும். ஏனெனில் அது மகத்தான படைப்பாளனான, அனைத்து விஷயங்களையும் நிர்வகிக்கும் அரசனாகிய அல்லாஹ்வுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளாகும். அவனே இப்பிரபஞ்சம் அனைத்தையும் படைத்து தனது எல்லையில்லா ஞானத்தின் மூலம் நிர்ணயம் செய்து வருபவன்.

புனித ஹஜ் பயணிகளுக்கு 8மாத கால பாஸ்போர்ட் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி.,க்கு இந்திய வெளிவிவகாரத்துறை பதில்

இந்திய வெளிவிவகார அமைச் சகம் வகுத்துள்ள காலவரைய ரைக்குள் போலீஸ் விசாரணை அறிக்கை கிடைப்பதில் காலதாம தம் ஏற்பட்டால் சவூதி அரேபியா விற்கு மட்டும் பயணிக்கும் வகை யில் 8 மாத கால அவகாசம் கொண்ட பாஸ்போர்ட்களை புனித ஹஜ் பயணிகளுக்கு வழங்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கோணுழாம்பள்ளம் பள்ளிவாசல்தெரு ராஜ்முஹம்மது அவர்களின் மனைவி மல்லிகாபீவி அவர்கள் மறைவு

                             அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம் பள்ளிவாசல்தெரு ராஜ் முஹம்மது அவர்களின் மனைவி மல்லிகாபீவி இன்று காலை
(07.04;2012)தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

காது குத்துவது ஹராமா?

Post image for காது குத்துவது ஹராமா?சமீபகாலமாக ஃபத்வா ஒன்று காது குத்துவது ஹராம் என்று சிலர் கூறுகின்றனர். காது குத்துவது சமுதாயத்தில் உள்ள பெண்களின் பழக்கமாக நபி(ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பே இருந்தது. இந்த பழக்கம் முஸ்லிம் பெண்களால் இன்றளவும் தொடரப்பட்டுள்ளது. மேலும் காது குத்தக்கூடாது என்பவர்கள் கீழ் வரும் வசனத்தையும் ஹதீதையும் ஆதாரமாக கூறுகின்றனர்.

இருண்ட மாநிலத்தில் மேலும் ஒரு இடி

சென்னை: தமிழகத்தில் மின் கட்டண உயர்வை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று அறிவித்தது.

இந்த மின்கட்டண உயர்வு, 37 சதவீதம் வரை இருக்கும் என்றும், இது ஓராண்டு வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வு, ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.

கோணுழாம்பள்ளம் பள்ளிவாசல்தெரு R.சம்சுதீன் அவர்களின் மகனார் முஹம்மது இஷாம் அவர்கள் மறைவு

                                      அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம் பள்ளிவாசல்தெரு R.சம்சுதீன் அவர்களின் மகனார் முஹம்மது இஷாம் அவர்கள் இன்று காலை (௦01.04.2012)தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.