கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

உலமா பெருமக்களை கண்ணியப்படுத்துவது சமுதாயக் கடமை நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா நூற்றாண்டு விழாவில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. பேச்சு


முஸ்லிம்களை உண்மை யான முஸ்லிம்களாக வாழச் செய்யும் வழிகாட்டிகள் சங்கைக்குரிய உலமா பெருமக்கள்தான். அவர் களை கண்ணியப்படுத்த வேண்டியது சமுதாயத்தின் கடமை என காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கி ணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. குறிப்பிட் டார்.

இறுதி இறைத்தூதர் முஹம்மது அவர்களின்

இதற்கு முன் என்றுமே இருந்திராத அளவிற்கு மாபெரும் கூட்டத்தால் அன்று சங்கைமிகு மக்காவின் புனித பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது, அங்கு கூடியிருந்தோரின் உள்ளச்சமும் வணக்க வழிபாடுகளும் அவர்களின் ஆன்மிக உணர்வுகள் முழுமை அடைந்திருந்ததை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

நபி மருத்துவம் - திராட்சை!


திருக்குர் ஆனில் திராட்சையைப்பற்றி பதினோரு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திராட்சையை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் என்று முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக அபூநயீம் தமது நூலில் எழுதியுள்ளார்கள்.

தொணதொணக்கும் மனைவிமார்கள்


இவ வாய் இருக்கே, எப்பப் பார்த்தாலும் தொண தொணன்னு யாரையாவது குறை சொல்லிக்கிட்டே இருக்கும் என்று சில பெண்கள் குறித்துச் சொல்வர்கள். அவர்கள் உள்ளுக்குள் பலாப்பழம் போல இருந்தாலும் வெளியில் முள்ளாகத் தெரிபவர்கள்.

இஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை!


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வினதிருப்பெயரால்..
"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துக் கொள்ளும் பொருட்டு, பின்னர் உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடைவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக கண்ணியமிக்கவர்" (சங்கைமிகு அல்குர்ஆன் 49:13)

பணம்+நோய் = வளைகுடா வாழ் இந்தியர்களின் சம்பாத்தியம்!

பணம்+நோய் = வளைகுடா வாழ் இந்தியர்களின் சம்பாத்தியம்!
‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’- ஆனால் பணம் என்ற செல்வத்தின் மீது நாட்டம் கொண்டு வளைகுடா நாடுகளுக்கு பறக்கும் இந்தியர்களின் ஆரோக்கியத்திற்கு என்ன நிகழ்கிறது?

 பணத்தை சம்பாதித்துவிட்டு தாயகம் திரும்பும் வேளையில் ஆரோக்கியம் என்ற செல்வம் சீரழிந்து போயிருக்கும். கை நிறைய பணமும், உடல் நிறைய நோய்களையும் சுமந்துகொண்டு வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர். வளைகுடாவில் பணியாற்றும் இந்தியர்களைப் பொறுத்தவரை கடுமையான ஆரோக்கிய பிரச்சனைகள் என்ன என்பது குறித்து சிறிது ஆராய்வோம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கல்வி விழிப்புணர்வு மாபெரும் மாநாடு செப்டம்பர் 8 சனிக்கிழமை கும்பகோணத்தில் நடைபெறுகிறது

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கல்வி விழிப்புணர்வு மாபெ ரும் மாநாடு தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வரும் செப்டம் பர் 8ம் தேதி சனிக்கிழமை நடை பெறுகிறது. இம்மாநாட்டு நடத்து வதற்கான ஒருங்கிணைப்பு பணி களை ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திற்குட்பட்ட தஞ்சா வூர், நாகை வடக்கு, நாகை தெற்கு, திருவாரூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களின் நிர்வாகிகள் முழுவீச்சுடன் செய்து வருகின்றனர்.