கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

குழப்பமின்றி மின் கட்டணம் கணக்கிடுவது எப்படி?


புதிய மின் கட்டண முறையில், வீட்டு இணைப்பு நுகர்வோர் குழப்பமின்றி கட்டணம் செலுத்துவதற்கான விவரங்களை, தமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. குழப்பம்:புதிய மின் கட்டண முறைகளை, தமிழக அரசு, ஏப்ரல் முதல் அமல்படுத்தியுள்ளது. இதில் வீடுகளுக்கான கட்டணம், பலவித அடுக்கு முறைகளை கொண்டுள்ளதால், எத்தனை யூனிட்டுகளுக்கு, எவ்வளவு கட்டணம் என, நுகர்வோர் குழப்பமடைகின்றனர்.

துபை ஈமான் அமைப்பின் உயர்கல்வி உதவித்திட்டம்


கோணுழாம்பள்ளம் T.C.முஸ்லிம்தெரு S.M.பக்கீர்முஹம்மது அவர்கள் மறைவு

                                   அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம் T.C.முஸ்லிம்தெரு S.M.பக்கீர்முஹம்மது அவர்கள் இன்று பிற்பகல் (28.05.2012)
1.30மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.ஜனாஸா நல்லடக்கம் நாளை(29.05.2012)  காலை10.00 மணியளவில் நடைபெறும்.


எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

கண்ணுக்கு தெரியாத வில்லன்கள்



நம்மைசுற்றி எல்லா இடங்களிலும் கோடிக்கணக்கான கண்ணுக்குத்தெரியாத நோய்கிருமிகள் நிறைந்திருக்கிறது. நம் நோயெதிர்ப்பு சக்தி வலுவிழக்கும் நேரம் பார்த்து இவை நம்மை தாக்கி நோயாளியாக்கக் காத்திருக்கின்றன. பொதுவாக எங்கெங்கே இந்த கிருமிகள் கூடாரம் போட்டு தங்கக் கூடும் என்று பார்ப்போம். அவற்றை இல்லாது ஒழிப்பதன் மூலம் உடல் நலத்தைக் காப்போம்.

புனித ஹஜ் பயணத்திற்கு திருச்சியி​லிருந்தும் விமானம் ஹஜ் மாநாட்டில் எம்.அப்துர் ரஹ்மான் எம்.பி கோரிக்கை

மானியம் என்ற பெயரால் புனித ஹஜ் பயணத்திற்கு வழங்கப் படும் விமான கட்டண சலுகை ஆயுளில் ஒரு முறை வழங்கப்பட வேண்டும் என்றும், புனித ஹஜ் பயணத்திற்கு திருச்சியிலிருந்து விமான இயக்கப்பட வேண்டும் என்றும் காயிதே மில்லத் பேரவை

பழமை காலம் பொற்காலமா?

                          (டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ,பீ.எஸ்(ஓ) 
 வயதானவர்களுடன் இளைஞர்கள் தனிமையில் உரையாடினால் அவர்களுடைய ஐம்பது வருட கால அனுபவங்கள் சொல்லி அவைகளெல்லாம் மிக சிறந்தவை என்றும் , இன்றைய நடப்பினை தரம் குறைந்தது என்றும் கதை கதையாக தன் பொக்கை வாயினை ஆசைப் போட்டுக் கொண்டு கூறக் கேட்கலாம். ஒருவருடைய மனைவிகூட தன் பிறந்த வீட்டில் குறைந்த வசதி இருந்தாலும் அன்டிய கணவர் வீட்டிற்கு வந்தாலும், தன் வீட்டுப் பெருமையினை வாய் நிறைந்து சொல்வதினைக் காணலாம். ஆனால் அக்கரை எல்லாம் பசுமையில்லை, இன்றைய உலகம் தான் இனிமை, பசுமை நிறைந்தது என்ற கருத்துடன் இந்தக் கட்டுரை வரையப் பட்டுள்ளது.

தமிழை வெறுக்க வேண்டாம்!


தமிழ்ச் சமூகம் மத்தியில் கடுமையான விரோதத்தை விதைத்து வளர்ந்து விட்டிருக்கிறது சமூகம். மரபு வழியாக 15இலட்சம் ஆண்டுகளாக முஸ்லிம்கள் வளர்க்கப்பட்டும் தமிழில் ஆளுமை பெற வில்லை. தமிழின் உச்சத்தை தொடவில்லை. தகுதியற்றவர்கள், துறை சாராதவர்கள் தமிழ் மேடையில் அமருகினறனர். அமர்த்தப் படுகின்றனர். விளைவு தமிழ்ச் சமுகத்தின் மிகப்பெரிய அவைகளுக்கு முஸ்லிம்கள் அழைக்கப்படுவதில்லை. அமர்த்தப்படுவதில்லை.