கோணுழாம்பள்ளத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க,நீக்க,திருத்தம் செய்ய நடைப்பெற்ற சிறப்பு முகாம்.
கோணுழாம்பள்ளம் அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குச்சவாடி மையத்தில் வாக்களார் பெயர் சேர்க்க,நீக்க,திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடைபெற்றது. இம் முகாமில் 01.01.2016. அன்று 18வயது பூர்த்தியாகியுள்ள புதிய வாக்களர்கள் அனைவரும் தங்கள் பெயர்களை சேர்த்து கொள்ள..பதிவு செய்தார்கள்.ஏற்கனவே வாக்காளர்களாக இருப்பவர்கள் தங்களது வாக்கு உரிமை பறிக்கப் படாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
லேபிள்கள்:
ஊர் செய்திகள்
கோணுழாம்பள்ளம் கல்லகொல்லைதெரு S.பக்கீர்முஹம்மது மறைவு
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம்கல்லகொல்லைதெருஜாகிர்ஹுசைன்,சாகுல்ஹமீது,
நஜீர் அகமது இவர்களின் தகப்பனார்S.பக்கீர்முஹம்மது அவர்கள்(18.09.2015)வெள்ளிக்கிழமை இரவு 7.00மணியளவில் தாருல்ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வாஇன்னா இலைஹிராஜிஊன் ஜனாஸா நல்லடக்கம் (19.09.2015)சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது
லேபிள்கள்:
வபாத்செய்திகள்
கோணுழாம்பள்ளம் M.சம்சுதீன் அவர்களின் மனைவி ரம்ஜான்பீவி அவர்கள் மறைவு
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம்- திட்டச்சேரி புதுத்தெரு M.சம்சுதீன் அவர்களின் துணைவியாரும்,S.சாஜஹான், S.சஹாபுதீன், S.தாஜுதீன், தாயாருமான ரம்ஜான்பீவி அவர்கள் (09.08.2015)ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00மணியளவில் தாருல்ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வாஇன்னா இலைஹிராஜிஊன் ஜனாஸா நல்லடக்கம் (10.08.2015)திங்கள்கிழமை பிற்பகல் 12.15 மணியளவில் நடைபெற்றது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது
லேபிள்கள்:
வபாத்செய்திகள்
முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ‘பாரத ரத்னா ஏ.பி.ஜே அப்துல் கலாம் வபாத்
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ‘பாரத ரத்னா’ ஆலி ஜனாப் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள், இன்று (27.07.2015 திங்கட்கிழமை) மாலை மேகாலய மாநில தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (IIM) மாணவர்களிடத்தில் நடைபெற்ற கருத்தரங் கில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட மயங்கி விழுந்தார். பிறகு மருத்துவமணயைில் சேர்க்கப்பட்ட கலாம் அவர்கள், தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாருக்கு வயது 84.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆசெய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், நண்பர்கள், மாணவ செல்வங்கள் மற்றும் இந்திய நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.
லேபிள்கள்:
வபாத்செய்திகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





