கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

மன்னிப்பும், ஜன்னத்தும்!

இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள். அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது. அது பயபக்தியுடை யோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. (சூரா ஆல இம்ரான் 3 : 133)

ரமலானும் துஆவும்

                    

கோணுழாம்பள்ளம் மெயின்ரோடு S.Aஅப்துல்சலாம் அவர்கள் மறைவு.

                                            அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம் மெயின்ரோடு A.முகம்மதுமுஸ்தபா, A.பரகத்துல்லாஹ்,  A.தீன்முகம்மது அவர்களின் தகப்பனார் S.Aஅப்துல்சலாம் அவர்கள் (04.07.2014) வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில் தாருல்ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வாஇன்னா இலைஹிராஜிஊன் ஜனாஸா நல்லடக்கம்( (05.07.2014) சனிக்கிழமை நடைப்பெறும் 

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது

கோணுழாம்பள்ளம் மெயின்ரோடு அஜீதாபீவி அவர்கள் மறைவு.

                                              அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம் மெயின்ரோடு அஜீதாபீவி  அவர்கள் (04.07.2014) வெள்ளிக்கிழமை  12.30 மணியளவில் தாருல்ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வாஇன்னா இலைஹிராஜிஊன் ஜனாஸா நல்லடக்கம்( 04.07.2014)  மாலை நடைபெற்றது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது

அசதுத்தீன் உவைசியின் ஆணித்தரமான உரை.

                      

ஐந்து நிமிடப் பேச்சு அது. ஆனால் ஆணித்தரமான, அழகான, நிறைவான பேச்சு.

மணிச்சுடர், இனி தனிச்சுடர் தான்!

முஸ்லிம்கள் சிறுபான்மையினர் இல்லையா?

நஜ்மாவின் கருத்து எல்லா மதச் சிறுபான்மையினரையும் நோக்கி விடுக்கப்பட்டதுபோல்தான்

‘இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்லர் - பார்சிகளே சிறுபான்மையினர்' என்ற சிறுபான்மையினர் நலத் துறையின் மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நஜ்மா ஹெப்துல்லாவின் கருத்து, பெரும் சர்சையை எழுப்பியுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் தகவல்தொடர்பு ஆலோசகராக இருந்து, பிறகு பா.ஜ.க-விலிருந்து விலகிய சுதீந்திரா குல்கர்னி இதுகுறித்து தனது ட்வீட்டர் பதிவில் ‘அது உண்மையெனில், 69,000 பார்சிகளுக்காக கேபினட் தகுதியில் ஒரு அமைச்சர் தேவையா? உண்மையை உணருங்கள் நஜ்மா’ என்று விமர்சித்துள்ளார்.