கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

அன்பளிப்பு


ஒருவருக்கொருவர் அன்பளிப்புச் செய்து கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக அன்பளிப்பு, உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடும். மேலும் எந்த அண்டை வீட்டாரும் தம்முடைய அண்டை வீட்டாரை இழிவாகக் கருத வேண்டாம் அவர் ஆட்டின் குழம்புத் துண்டை அன்பளிப்பாக அனுப்பிய போதினும் சரி என்று நபி (ஸல்) அவர்கள் கூறினர்.நபி(ஸல்) அவர்கள் அன்பளிப்பை ஏற்றுக் கொண்டதுடன் அதற்குப் பகரமாக அன்பளிப்பும் அனுப்பி வந்தனர்.

அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)
நூல் : அபூதாவூத், திர்மிதீ)

குடும்பத்தை பிளவுபடுத்தும் பாவிகள்

Post image for குடும்பத்தை பிளவுபடுத்தும் பாவிகள்
குடும்ப வாழ்க்கையின் அவசியம் குறித்து நாம் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறோம். நமது குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சியும் நல்லுறவும் நீடிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறோம்.
ஆனால் மற்றவர்களின் குடும்பங்களைப் பற்றி நமக்கு இத்தகைய நல்லெண்ணம் இருப்பதில்லை.

நீரிழிவு நோய்க்கு நபிவழியில் தீர்வு

"நான் நோயுறும்போது அவனே (அல்லாஹ்வே) எனக்கு நிவாரணம் தருகின்றான்'' (அல்குர்ஆன் 26:80)

மேற்கண்டபடி நோய்க்கான நிவார ணத்தை தானே தருவதாக அல் லாஹ் திருமறைக் குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான். இதேபோல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், எல்லா நோய் களுக்கும் இப்பூமியில் நிவாரணம் உண்டு என்கிறார்கள்.

இந்திய சட்டத்துறையில் ஷரீஅத் சட்டத்தின் பங்களிப்பு

( வழக்கறிஞர் நீடூர் அல்ஹாஜ் ஏ.எம். சயீத் )

   (நபியே) உண்மையான இவ்வேதத்தை நாம் தான் உம்மீது இறக்கினோம். இது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மையாக்கி வைக்கின்றது. அன்றி அவைகளைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே நீர் அல்லாஹ் இறக்கிய இ(வ் வேதத்)தைக் கொண்டே அவர்களுக்கிடையில் தீர்ப்பளியும். மெளட்டீகக் காலத்து சட்டங்களையா இவர்கள் விரும்பிகின்றனர். மெய்யாகவே நல்லுறுதி பூண்ட மக்களுக்கு அல்லாஹ்வை விட அழகான தீர்ப்பளிப்பவர் யார்?  – திருக்குர்ஆன் 5:48-50.

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை:

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்திகிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.


இன்று தமிழகம் முழுவதும் பரவலாக
காணப்படுகிறது பரோட்டாகடை .


அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .

நபி (ஸல்) சமுதாயத்தவர்களுக்கு மட்டும் தண்ணீர்த் தடாகம்

நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் (கியாமத்) நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஊதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்'. (அல்குர்ஆன் 78:17,18)

தண்ணீர்த் தடாகம்

மக்கள் விசாரணைக்காக ஒன்று திரட்டப்படும் அந்நாளின் கொடூரத்தைப் பற்றி முன்னர் நாம் விளக்கியுள்ளோம். கடும் தாகத்தால் மக்கள் துடிக்கக் கூடிய அந்நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு மட்டும் தாகம் தீர்க்கத் தனி ஏற்பாட்டை அல்லாஹ் செய்வான்.

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25% இடம்

 இலவச - கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இனி 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்துக்கான விதிமுறைகளில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.