கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

திருமணம் தரும் நறுமணம்!

வீட்டைக் கட்டிப்பார், திருமணம் செய்து பார்" என்று ஒரு பழமொழி உண்டு. இதற்கு எத்தனை நூறு வயதோ தெரியவில்லை. ஆனால், இன்றும் அது உண்மையாகவே இருக்கின்றது.
சொந்த வீட்டையாவது கட்டி முடித்துவிடலாம் போல் தெரிகிறது. ஆனால், திருமணத்தை நாம் நடாத்தி முடிப்பதற்குள் நாம் படும் பாடு ஒன்றா? இரண்டா? "ஆறு பெண்பிள்ளைகள் பெற்றால் அரசனும் ஆண்டி" என்பது மற்றொரு முதுமொழி. வாழ்க்கை என்பது, புயலில் அலைமோதும் ஒடம்தான்.

இந்திய முஸ்லிம்களின் முதலாவது கல்வி நிறுவனம்

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், அண்ணாமலைப்பல்கலைக் கழகம், காரைக்குடி அழகப்பா பல் கலைக்கழகம் என தேசத் தலைவர் பெயராலும் நிறுவனர்கள் பெயரா லும் பல்கலைக்கழகங்கள் உள் ளன. ஆனால் நிறுவனரின் பெயரை அறியவாய்ப்பில்லாமல், அமைந்த இடத்தின் பெயரைக் கொண்டு விளங்குவது அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்.

நோய்களை குணமாக்கும் உணவு வகைகள்

தலையிடி: மீன் சாப்பிடுங்கள்
மீனில் உள்ள எண்ணை தலையிடி வருவதைத் தடுக்கும். அதேசமயம், இஞ்சி வலியையும், நெஞ்சு எரிவையும் தடுக்கும்.

உயர்கல்வி நிறுவனங்களில் MBA படிக்க CAT நுழைவு தேர்வு

இந்தியாவில் படித்து முடித்தவுடன் மிக அதிக சம்பளம் தரும் படிப்பு IIM-ல் உள்ள MBA படிப்பு தான், அதிக பட்சமாக ஒரு வருடத்திற்க்கு ஒரு கோடி (மாதம் 8 லட்சம்) வரை சம்பளம் IIM-ல் MBA படித்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது.   இப்படி அதிக சம்பளம் தரும் இந்த படிப்புகளில் சேர CAT என்ற நுழைவு தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.  இதில் முஸ்லீம்களையும் சேர்த்து பிற்படுத்தபட்ட வகுப்பினருக்காக 27% இட ஒதுக்கீடு உள்ளது.

வாழ்க்கையின் இரகசியம்

நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை


உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்!


யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ


அவரே உண்மையில் உயர்ந்த மனிதர்!


பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது.


பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.


மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட


ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்!


அருகில் இருக்கும்போது கோபுரங்கள்கூட உயரமாகத் தெரிவதில்லை.


தூரத்தில் இருக்கும் போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன.


மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும்


மறக்க வேண்டாதவகைகளை மறந்து விடுவதும்தான்


இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு காரணம்


ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல


விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!


நன்றாகப் பேசுவது நல்லதுதான்


ஆனால் நன்றாகச் செய்வது அதனிலும் நல்லது!


சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது.


பல நேரங்களில் வெற்றியே புத்தியாகி விடுகிறது!


முட்டாளைச் சமாளிக்க சுருக்கமானமான வழி


மெளனமாக இருப்பதுதான!


பல அறிஞர்களிடம் உறவாடினால் நீயும் அறிஞனாகிறாய்!


பல பணக்காரர்களுடன் உறவாடினால் பணக்காரனாக மாட்டாய்!


தோல்வி வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள்!


வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டதுபோல் காட்டிக்கொள்!


இதுதான் வாழ்க்கையின் இரகசியம்!


source: நிலா முற்றம்

உறுதி மிக்க மனிதர்

Post image for உறுதி மிக்க மனிதர்இரு கைகளும் இழந்த நிலையிலும் இந்த மனிதர் உழைப்பை நிறுத்தவில்லை தன் மனைவியை மறக்கவில்லை தன் பிள்ளைகளை மறக்கவில்லை தன் இறைவனையும் மறக்கவில்லை.