ஹஜ் பயணம் மேற்கொள்வோர், அக்கமிட்டியின் ஒதுக்கீடு கடிதத்திற்கு காத்திருக்காமல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்’ என, சென்னை மண்டல துணை பாஸ்போர்ட் அதிகாரி தவ்லத் தமீம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வோர், கடைசி நேர நெருக்கடியை தவிர்க்கும் வகையில், ஹஜ் கமிட்டியின் ஒதுக்கீடு கடிதத்திற்கு காத்திருக்காமல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள், தங்கள் விண்ணப்பத்தின் முதல் பக்கத்தில் ஹஜ் பயணி என, சிவப்பு மையால் குறிப்பிட்டு, வழக்கமான ஆவணங்கள் மற்றும் கட்டணங்களுடன் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மாநில ஹஜ் கமிட்டியிடமிருந்து ஒதுக்கீட்டு எண் பெறப்பட்டதும், போலீஸ் சரிபார்த்தல் அறிக்கை பெறப்படாத விண்ணப்பங்களுக்கும், ஹஜ் பிரிவில் எட்டு மாதங்கள் செல்லத்தக்க, சவூதி அரேபியாவுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படும். ஹஜ் பயணம் முடிந்ததும், விண்ணப்பதாரர்களின் போலீஸ் சரிபார்த்தல் அறிக்கையின் ஒப்புதல் உறுதி செய்யப்படும். அதன்பின் அவர்கள், ஹஜ் பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட வேண்டும். அவர்களுக்கு 10 ஆண்டுகள் செல்லத்தக்க புதிய பாஸ்போர்ட் தரப்படும். இவ்வாறு தவ்லத் தமீம் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக