வருகிற ஏப்ரல்-13-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது. முக்கிய அரசியல் கட்சிகளுக்கிடையேயான தொகுதி பங்கீடுகள் முடிவுற்ற நிலையில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றன.
அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை தேர்வுச் செய்யும் பொழுது குறைந்த பட்சம் 10 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த வேண்டுமென்பது முஸ்லிம் சமுதாய ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் அ.இ.அ.தி.மு.க தாங்கள் போட்டியிடும் 160 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது. முஸ்லிம் சமுதாயத்தின் எதிர்பார்ப்பை வீணடிக்கும் விதமாக 160 தொகுதிகளில் வெறும் 2 முஸ்லிம் வேட்பாளர்களை மட்டுமே ஜெயலலிதா தேர்வுச் செய்துள்ளார்.
ஆவடியில் அப்துல் ரகீமும், ராணிப்பேட்டையில் அ.முகம்மது ஜானும் அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் வேட்பாளர்களாவர். அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகளில் கூட மாற்று மதத்தைச் சார்ந்த வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வன்னிய சமுதாயத்தைச் சார்ந்த 28 பேருக்கு வாய்ப்பளித்துள்ளார் ஜெ. ஆக, ஜெயலலிதா தனது கட்சி வேட்பாளர் பட்டியலில் முஸ்லிம்களுக்கு அளித்துள்ளது 1.25 சதவீதமாகும்.
ஹிந்துத்துவா சிந்தனையுடைய நான்கு பார்ப்பணர்களின் ஆலோசனைகளை ஜெயலலிதா பின்பற்றுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள சூழலில் வேட்பாளர்கள் தேர்விலும் அவர்கள் தங்கள் கைங்கர்யத்தை காட்டிவிட்டார்களோ என தமிழக மக்களின் நலனில் அக்கறையுடையவர்களிடம் எழுந்துள்ள சந்தேகமாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக