கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

MTV முதல் மக்கா வரை - கிறிஸ்டியான பேக்கர்


இசையிலேயே எப்பொழுதும் மூழ்கிக் கொண்டிருந்த கிறிஸ்டியான பேக்கர் 1990 களில் ஐரோப்பாவின் நம்பர் ஒன் சேனலில் தொகுப்பாளராக இருந்தார். வெகு விரைவிலேயே நேயர்களின் விருப்பத்திற்கு உரியவராகவும் இருந்தார்.
1965 டிசம்பர் 13ம் தேதி ஜெர்மனியின் ஹம்பர்கரில் பிறந்த கிரிஸ்டியானா, ஐரோப்பாவின் பிரசித்திப் பெற்ற MTV யின் தொகுப்பாளராக 1996 வரை பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். ஒரு முறை கோல்டன் கேமரா அவார்டும் இரண்டு முறை கோல்டன் ஓல்ட் அவார்டும் பெற்றிருந்தார்.

1992-ல் அவருடைய வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட சம்பவம் ஏற்பட்டது. பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான்கானுடன் லண்டனில் உரையாடும் சந்தர்ப்பம் அமைந்தது. அதன்பின் இம்ரான்கானின் விருந்தாளியாக பாகிஸ்தான் செல்ல நேர்ந்தது. பாகிஸ்தான் பயணம் கிறிஸ்டியானாவின் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் மக்களின் குணமும்,பழக்கவழக்கமும்,மனிதநேயமும அவரை மிகவும் கவர்ந்தது. எனவே கிறிஸ்துவ மதத்தை விட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். இஸ்லாமிய சூபிசம் அவருக்கு மிகவும் பிடித்தது. மனிதநேயமும்,அன்பும் சூபிசத்தின் மூலம் கிடைக்கிறது என்பது கிறிஸ்டியானாவின் கருத்து. இஸ்லாம் ஏற்றுக்கொண்டபின் 1995க்கு பின் தன் பிறந்த நாடான ஜெர்மனிக்கு சென்றாலும், அங்கிருந்தவர்களின் அணுகுமுறை பிடித்தமானதாக இருக்கவில்லை. .

நண்பர்களும், உறவுகளும் அதிருப்தியுடன் பார்க்க துவங்கியதுடன் அவர் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தார். இப்பொழுது லண்டனில் வசிக்கிறார். மேற்கத்திய இசையின் மூலம் ஏராளமான பணமும் புகழும் கிடைத்தபோதும் ஏதோ ஒரு வெறுமை தன் மனதில் தோன்றுவதாக உணர்ந்தார். இந்த மன உளைச்சலும்,வெறுமையும் தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்னரே விலகியது என்றும், 1995ல் வெளிப்படையாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்னரேயே ''நான் ஒரு முஸ்லிம்'' என்ற உள்ளுணர்வின் நிழலில் வாழ்க்கையின் பிரச்சனைகளிலிருந்து விடுதலை கிடைத்ததாக அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன் என்றும் அவர் சான்று பகர்கிறார்.

சமீபத்தில்,இஸ்லாத்தின் சிறப்புகளையும், இஸ்லாத்தைக் குறித்து மேற்கத்திய சமுதாயத்தில் நிலவிக் கொண்டிருக்கும் தவறான அபிப்பிராயங்களுக்கு பதிலலிக்கக்கூடிய வகையில் ''from mtv to mecca'' [MTV முதல் மக்கா வரை ] என்ற புத்தகத்தை கிறிஸ்டியானா வெளியிட்டார். மேற்கத்திய சமூகத்தில் இந்த புத்தகத்திற்கு அதிக அங்கீகாரம் கிடைத்தது. பிரிட்டன் பார்லிமென்டின் கீழுள்ள all group parliment committy ஹாலில் 2012-sep 3ம் தேதி புத்தகத்தின் வெளியீட்டைப் பற்றிய சர்ச்சை நடந்தது. பிரிட்டனின் அறிவு ஜீவிகள் பங்கு கொண்ட செமினாரில் இஸ்லாம் சூடேறிய சர்ச்சைக்குட்பட்டது. இந்த புத்தகத்தின் அரபி, ஜெர்மன், இந்தோனேசியா, மலேஷியன் பதிப்புகள் உடன் வெளிவரும். தன்னுடைய வாழ்க்கையை இஸ்லாம் எவ்விதம் ஈர்த்தது என்பதைப் பற்றியே இந்த புத்தகம் கூறுகிறது. புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் ,அதன் உள்ளடக்கம், கருத்துக்கள் பற்றி தெளிவாக கூறினார்.

''சத்தியத்தைத் தேடும் ஒரு பெண்ணின் விடியலுக்கான பயணம்'' என்று சிந்தனையாளர் தாரிக் ரமதான் இந்த புத்தகத்தை குறித்து சிறப்பித்தார். இஸ்லாம் மதத்தைப் பற்றியும் கலாச்சாரத்தைப் பற்றியும் கிறிஸ்டியானாவுக்கு அறிமுகப்படுத்த எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவருடைய விருப்பம் பாடல்களிலும், உணவுகளிலும் மட்டுமல்ல பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் இருந்தது என்பது அவரது சிறப்பியல்புகலாக இருந்தது. தொடர் முயற்சிகளின் பலனாக தன்னுடைய நம்பிக்கையின் மூலம் சத்தியத்தைப் பற்றிய தேடல் எனக்கு அவர்மீது மதிப்பை தந்தது. இந்த புத்தகம் முஸ்லிம், முஸ்லிமல்லாதவர்கள் அனைவரையும் கவரும் என்பது உண்மை. அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! எல்லா வெற்றிகளையும் தந்தருள்வானாக! என்று இம்ரான் கான் புத்தகத்தைக் குறித்து புகழ்ந்து கூறினார்.

ஒரு சர்ச்சையில் இஸ்லாத்தில் ஹிஜாபைக் குறித்து கிறிஸ்டியானா கூறியது; இஸ்லாம் கலாச்சாரத்தோடு உள்ள ஆடை அணிய வலியுறுத்துகிறது. ஹிஜாபை பரிகாசம் செய்பவர்கள் தங்களுடைய கலாச்சாரத்தையே பரிகாசம் செய்பவர்களாவர். காரணம், கலாச்சார நாகரீகம் கொண்ட எந்த சமூகமும் பிற சமூகத்தை பரிகசிப்பவர்களாக இருக்க மாட்டார்கள். ஹிஜாபை பற்றி விமர்சிப்பவர்களை அடக்கி ஆள்வதை விட்டுவிட்டு, அதற்கு பதிலாக, அவர்களே அதை சுயமாக தேர்ந்தெடுக்கும் நிலை கொடுக்க வேண்டாமா என்பதே கிறிஸ்டியானாவின் கேள்வி. 43வயதான கிறிஸ்டியானா, ஹோமியோபதி மருத்துவர். இப்பொழுது NBC EUROPE போன்ற சேனல்களில் நிகழ்ச்சிகள் நடத்துகிறார்.

யூரோப்பில் சமீபத்தில் நடந்த நபிகள் நாயகம் கருத்தரங்கத்தில் பங்குகொண்டு இஸ்லாத்தில் பெண்களின் உயர்ந்த நிலை, பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புகள், நபிகள் நாயகம் சொன்ன பெண் விடுதலை போன்ற விஷயங்களை அவர் தைரியத்தோடு வெளிப்படுத்தினார். ''சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனிதஉரிமை பாதுகாப்பு, பிற உயிரினங்களிடம் கருணை, ஏழைகளுக்கும், வறியவர்களுக்கும் உதவி செய்தல், போன்ற பல விஷயங்களையும் ஆணித்தரமாக எடுத்துரைக்கும் இஸ்லாம் உலகத்தில் வசிக்கும் அனைத்து படைப்புகளின் ஒழுங்கமைப்பு என்ற நிலையில் வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டிருக்கிறது என்று உதாரணங்களுடன் தன் கருத்தை பதிவு செய்தார்.
- உம்மு அனீ சா
Courtesy : idealvision

0 கருத்துகள்: