கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

முஸ்லிம்களை உசிப்பேற்றிய பாபரி மஸ்ஜித் இடிப்பு!


டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ)
இந்திய துணைக் கண்டம்  பல்வேறு ஜாதி,மதம்,இனம்,மொழி,கலாட்சாரம் வேடுபாடுகள் கொண்ட நாடு. அந்நிய படை எடுப்புகளான  அலெக்சாண்டர்,செங்கிஸ்கான், முகலாயர்கள், டச், போர்துகீஸ், பிரெஞ்சு, ஆங்கிலேயர் ஆகியோர் கடந்த கால நிகழ்வுளாக இருந்தன. ஆனால் முகலாயர்களைத் தவிர இந்திய நாட்டு மக்களைக் கவர்ந்து, அவர்களுடைய கலாச்சாரத்திற்கு மெருகூட்டி,
மக்களோடு மக்களாக கலந்தவர்கள் வேறு நாட்டவர் ஒருவருமில்லை. இந்திய செல்வங்களை சுரண்டி ஐரோப்பிய நாடுகளின் சிம்மாசனத்தில்  அலங்கரித்தனர்ஐரோப்பிய நாட்டவர்.

அதற்கு உதாரணமாக   இங்கிலாந்து  ராஜ சிம்மாசனமும் ராணியின் கோகினூர் வைர கிரீடமே ஒரு சான்றாகும். ஆனால் இஸ்லாமிய மார்க்கம் போதித்தது, 'குடிபுகுந்த நாட்டினுக்கு விசுவாசமாக இருப்பது' என்ற கொள்கையினை தான் இன்றும் கூட பல்வேறு நாடுகளில் குடியேறிய முஸ்லிம்களும் கடைப் பிடித்து வருகின்றனர். உலகில் முஸ்லிம்கள் எந்தவித தேச விரோத செயல்களிலும் ஈடுபடுவதில்லை.

இந்தியாவினை ஆண்ட முஸ்லிம் அரசர்கள் , 'மக்கள் நல்வாழ்வு' கொள்கைகளைக்  கடைப் பிடித்து ஆட்சி செய்ததால் தான் முன்னூறு ஆண்டுகள் இந்துக்கள் மெஜாரிடியான நாட்டில் ஆட்சி நடத்த முடிந்தது.

அதன் எடுத்துக் காட்டுதான் முஸ்லிம் பள்ளிவாசல்களும், இந்துக்கள் கோவிலும் பல பகுதிகளில் அடுத்தடுத்து இருப்பதினை இருப்பதினைக் காணலாம். 'உன் மதம் உனக்கு என் மதம் எனக்கு' என்ற மத சகிப்புத் தன்மைக்கு எடுத்துக் காட்டாக விளங்கியது இஸ்லாமியர் ஆட்சி.

எப்போது பறங்கியர் என்ற ஆங்கிலேயர் அமீனா போன்ற ஆமையாக இந்திய நாட்டில் நுழைந்தார்களோ அப்போதே இந்தியர்களை 'பிரித்தாளும்' கொள்கையினைக் கையிலெடுத்து வெற்றிக் கொடியினை டெல்லி செங்கோட்டையில் ஏற்றினர். அந்த வெற்றி நூறு ஆண்டுகள் கூட நிலைத்து நிற்க வில்லை. முதலாம் விடுதலை போரான 1857 ஆண்டு முஸ்லிம்களும், இந்துக்களும் ஒன்று பட்டு வெகுண்டெழுந்தனர். ஆகா  இந்தியர்கள் ஒன்று பட்டு விட்டார்களே இனியும் ஆட்சி செய்ய முடியாது என்று யோசித்த ஆங்கிலோயரின் தூபங்களுக்கு பலியானது தான் 1947 ஆண்டு இந்திய துணைக் கண்டம் பிரிந்து இரண்டு நாடானது.

மத துவேசத்தில் பாகிஸ்த்தான் பஞ்சாபிலும், இந்திய வங்க தேசத்திலும் பிரிவினை நேரத்தில் ரத்த ஆறு ஓடி இந்து  மக்கள்.இந்தியாவிற்கும், முஸ்லிம் மக்கள் பாகிஸ்தானுக்கும் இடம்பெயர வழிவகுத்தது. அப்படி இடம் பெயர்ந்த இந்திய முஸ்லிம்கள் படிப்பிலும், வசதி வாய்ப்பிலும் சமுதாயத்தில் உயர் நிலையில் இருந்தார்கள்.  ஆனால் நடுத்தர, ஏழை முஸ்லிம்கள்  இந்தியாதான் தங்கள் நாடு என்று சரணாகதியாகி மைனாரிட்டி  சமூகத்தினர் என்ற நிலைக்குத் தள்ளப் பட்டனர்.

இரண்டாம் உலகப் போருக்கு முன்பு 1936 இல் இந்துத்துவ தலைவர்கள் சிலர் 400 வருடங்களுக்கு முன்பு கட்டப் பட்ட பாபரி மஸ்ஜித் அருகில் தான் தங்கள் கடவுள் ராமர் பிறந்தார் என்ற தூபத்தினை போட்டனர். அதன் விளைவுதான் சுதந்திரம் அடைந்த பின்பு 22-12.1949 நடு ராத்திரியில் பாப்ரி மஸ்ஜிதின் மையப் பகுதியில் ராமர் சிலையினை வைத்து சமுதாய ஒற்றுமைக்கு வேட்டு வைத்தனர்.


சில இந்துத்துவ அரசியல் கட்சிகள் ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் பாப்ரி மஸ்ஜித் பிரச்சனையினை கையிலெடுத்து, மஸ்ஜித் இருக்கும் இடத்தில் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்று குரல் கொடுத்து வந்தது. 1986 ஆம் ஆண்டு பாப்ரி மஸ்ஜித் வளாகத்தில் அமைக்கப் பட்ட தற்காலிக கோவிலுக்கு போட்டிருந்த பூட்டினை திறந்து விட்டதால் மதப் பூசல் பிரச்சனை பூதாகரமாக கிளம்பியது. பாப்ரி மஸ்ஜித் அமைந்துள்ள அயோத்தி உத்திர பிரதேச மாநிலத்தில் வருவதால் அதனை 1990 ஆம் ஆண்டு ஆட்சி செய்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்று தடையினை மீறி வந்த கரசெவர்களை தடுத்தி நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்தி 16 உயிர்கள் போனாலும் பரவாயில்லை, தன பதவி தேர்தலில் பறிபோனாலும் பரவாயில்லை என்று துணிச்சலாக செயல் பட்டார்.அதன் விலை1991 தேர்தலில் ப.ஜ.கஆட்சிப்பொறுப்பேற்று கல்யாண் சிங் முதல்வரானார்.

அதன் தைரியத்தில் சில முக்கிய தலைவர்கள் மஸ்ஜித் இடித்து விட்டு ராமர் கோவில் கட்ட நாடு முழுவதும் கர்செவர்களை திரட்டி முண்டாசு தட்டினார்கள். விளைவு, 6.12.1992 இல் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதும், மத்திய அரசு மவுனம் சாதித்ததும் வரலாற்றுப் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டியவை தானே!

மஸ்ஜித் இடிப்பு ஒரு திட்டமிட்ட சாதியில்லை என்று ஸ்பெஷல் சி.பி.ஐ. நீதி மன்றம் தீர்ப்புக் கூறினாலும், ஒரு சிறு உண்மை சிகழ்ச்சியினை உங்கள் முன்பு வைக்கலாம் என நினைகின்றேன். பி.ஜே.பி.யின் முன்னாள் எம்.பி. ராம்விலாஸ் விஸ்வாஸ் சொன்னதாக ஊடகங்கள் 2010 ஆம் ஆண்டு ஒரு செய்தியினை வெளியிட்டன. அதாவது 1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இருபது தேதியில் ராம்விலாஸ் விஸ்வாஸ் அவர்கள் மறைந்த பாரதப் பிரதமர் நரசிம்ம ராவினை சந்தித்ததாகவும், அப்போது பிரதமர் விச்வாசிடம் கர்செவர்களைத் திரட்டி என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டதாகவும், அதற்கு விஸ்வாஸ், 'மஸ்ஜிதை இடிக்கப் போகிறோம்' என்று சொன்னதாகவும், மஸ்ஜித் இடிக்கும் வரை விஸ்வாஸ் அங்கே இருந்ததாகவும் பெருமையுடன் விஸ்வாஸ் சொன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதிலிருந்து உங்களுக்குத் தெரிந்து இருக்கும் பாபரி மஸ்ஜித் இடிப்பு ஒரு திட்டமிட்ட சதி என்று. எப்படி மறைத்தாலும் ஆதவனை மறைக்க முடியாதோ, அதேபோன்று உண்மை ஒரு நாள் வெளி வந்தே தீரும் அது காலத்தின் கட்டாயம். அநீதியினை கண்டு வெகுண்டு எழுந்த கௌதம புத்தர், அசோகர், சிபி சக்கரவர்த்தி, மணி நீதி அரசன், பாண்டியன் நெடுஞ்செழியன் வாழ்ந்த நாட்டில் உயர் பீடத்தில் அமர்ந்திருக்கும் உச்ச நீதி மன்ற அரசர்களும் வெகுண்டேழுந்திருக்கின்றார்கள் ஏன் என்று கீழே தருகிறேன்:

பாபரி இடிப்பிற்கு காரணமானவர்கள் என்று பி.ஜே.பி. தலைவர்களான அத்வானி, 2ஜி புகழ் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினை கட்யார்  மற்றும் பதிராறு பெயர் குறிப்பிட்டவர்களும், பல ஆயிரம் பெயர் குறிப்பிடாதவர்களும்  குற்ற எண் 192/1992 இன் படி குற்றவாளியாக சேர்க்கப்பட்டு ரே பரேலி நீதி மன்றத்தில் நிறுத்தப் பட்டனர். மஸ்ஜித் இடிப்பு சம்பந்தமாக விசாரணை செய்ய  நீதிபதி லிப்ரஹன் தலைமையில் ஒரு கமிசனும் நியமனம் செய்யப் பட்டது.

ரே பெர்லி நீடி மன்றம் பி.ஜே.பி. தலைவர்கள் அத்வானி, ஜோஷி ஆகியோர்களை சதி வழக்கிலிருந்து விடுவித்து, பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கை மட்டும் விசாரணைக்கு ஏற்றது. அதனை எதிர்த்து சி.பி.ஐ. அலஹாபாத்  உயர் நீதி மன்றத்தில் முறையீடு செய்தது.

10.5.2010 அன்று அலஹாபாத் உயர் நீதி மன்றம் ரே பெரேலி நீதி மன்றம் பி.ஜே.பி. தலைவர்களை சதி வழக்கிலிருந்து விடுவித்தது சரி என்று தீர்பளித்தது. அதனை எதிர்த்து உடனே சி.பி.ஐ. உச்ச நீதி மன்றத்தினை அணுகாது ஒன்பது மாத காலந்தாழ்த்தி உச்ச நீதி மன்றத்தினை அணுகியது.

அந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் 6.12.2012 அன்று விசாரணைக்கு வரும்போது அரசு தரப்பு சொளிசிடோர் ஜெனரல் ஏ. எஸ். சாந்தியோக் ஆஜராகவில்லை. அதனை அறிந்து நீதி அரசர்களான எச்.எல். தட்டா  மற்றும் சி.கே.பிரசாத் ஆகியோர் கண்டனம் தெரிவித்ததுடன், ரே பெரேலி நீதி மன்றத்தில் நடக்கும் வழக்கினையும் விரைந்து நடத்த உத்தரவு இட்டுள்ளனர்.

பாபரி மஸ்ஜித் இடிப்பு சமூக,பொருளாதார, பண்பாடு, கல்வி போன்றவற்றால் பிரிந்து கிடந்த முஸ்லிம்களை தட்டி எழுப்பிய ஒரு வரப் பிரசாதம் என்பதினை கீழ்க்கண்ட காரணங்களுடன் விளக்கக் கடமைப் பட்டுள்ளேன்:

1) பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு முன்பு பணக்கார, படித்த முஸ்லிம்கள்  சாதாரண முஸ்லிம்களைப் ஒதுக்கித் தள்ளிய காலம் மலையேறி,இடிப்பிற்குப் பின்பு தங்களுக்கு சமூக பாது காப்புத் தேவை என உணர்ந்து சகோதரத்தம், ஒற்றுமை என்ற பாசக் கைரினை பற்ற ஆரம்பித்தார்கள்.

2) பணத்தால், படிப்பால் பிரித்தாளும் முறை மறைந்து பாமரன் முதல் பங்களா வாசி வரை முஸ்லிம் என்ற ஒரு சொல் வடக்கிலிருந்து தெற்கு வரை இணைத்தது.

3) முதன் முறையாக வாழ்க்கையில் முன்னேறிய முஸ்லிம்கள் அடித்தளத்தில் துவளும் முஸ்லிம்கள் முன்னேற்றம் பற்றி கவலைப் பட்டு பல முன்னேற்ற காரியங்களில் ஈடு பட்டார்கள்.

4) சமூதாய இயக்கங்களுடன் இனைந்து அடித்தட்ட முஸ்லிம்களுக்கும் அரசு உதவி கிடைக்க செயலில் இறங்கினார்கள்.

5) முஸ்லிம் சனத்தொகைக் கேட்ப விகிதட்சார முறைப்படி வேலை,கல்வியில் இட ஒதுக்கீடு வழங்க பல போராட்டங்கள் நடத்தும் எழுச்சியினை முஸ்லிம்களிடையே ஏற்படுத்தியது.

7) இந்தியாவில் எந்த மூலையில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப் பட்டாலும் ஒரு மித்த குழல் எழுப்பும் மன தைரியம் தந்து விட்டது.

8) விசாரணை இல்லாமல், அல்லது தண்டனை காலம் முடிந்தும், அல்லது குற்றம் செய்யாமல் சிறையில் வாடும் எண்ணற்ற முஸ்லிம் இளைஞர்களுக்காக மத, அரசியல் வேறுபாடு இல்லாத நாற்பது எம்பிக்கள் ராம் விலாஸ் பாஸ்வான், மணி சங்கர் அய்யர் ஆகியோருடன் 4.12.2012 அன்று மணிக் கணக்கில் இந்திய பிரதமரிடம் வாதாடும் அளவிற்கு நம்பிக்கை மணி ஓசை எழுப்பி உள்ளது.

9) முஸ்லிம்களிடம் கூட்டு வைத்துக் கொள்ள அரசியல் கட்சிகள் போட்டிப் போடும் அளவிற்கு முஸ்லிம்களின் ஒற்றுமை நிலை நாட்டப் பட்டது.

10) முஸ்லிம்களின் உரிமைகளை ஜனநாயக முறையில் பெறுவதிற்கு பாராளு மன்றத்திலும், சட்ட மன்றத்திலும் இடம் பெற வேண்டும் என்று சமூக அமைப்புகளும் அரசியல் கட்சிகளை துவங்கி வெற்றிகரமாக மத்தியிலும் கேரளா போன்ற மாநிலங்களிலும் சிறப்புடன் செயலாற்ற முடிகிறது.

11) பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு பின்பு நடுநிலை இந்து மக்களே பி.ஜே.பையினை ஓதிக்கித் தள்ளும் அளவிற்கு தள்ளப் பட்டுள்ளது.
ஆகவே தான் ஆரம்பத்தில் சொன்னேன் பாபரி மஸ்ஜித் இடிப்பு இஸ்லாமியர்களை உசிபெற்றிய துயரச் சம்பவம் என்று. ஆங்கிலத்தில், 'Blessing in disguise' என்று, அது உண்மையாகி விட்டதல்லவா

0 கருத்துகள்: