கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

கஃபதுல்லாஹ்வின் முன்னாள் இமாம் வஃபாத்தானார் !


(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)
1968 முதல் கஃபதுல்லாஹ்வின் அனைத்து மார்க்க காரியங்களுக்கும் பொறுப்பாளியாக நியக்கப்பட்டு, நீண்ட காலம் கஃபதுல்லாஹ்வில் இமாமாக இருந்த, முன்னாள் இமாம் "அஷ்ஷைக் முஹம்மத் பின் அப்துல்லாஹ் அஸ்ஸபீல்" நேற்றுமுன்தினம் (17/12/2012) வஃபாத்தானார்.

நேற்று "அசர்"க்குப்பிறகு கஃபதுல்லாஹ்வில், "ஜனாசா தொழுகை" நடத்தப்பட்டு "அல்-அத்ல்" கபரஸ்தானில் அடக்கம் செய்ய்யப்பட்டார்.

அவருக்கு வயது 89. அரபுலக மார்க்க பிரச்சாரகரான அவர், 1923ல் சவூதி அரேபியாவின் "அல்பகீர்" நகரத்தில் பிறந்தார்.

தனது தந்தை அப்துர்ரஹ்மான் அவர்களிடம் கல்வி கற்ற அவர், 1945ல் "அல்பகீரியா பிரைமரி ஸ்கூலில்" ஆசிரியரானார்.

பின்னர் 1951ல் "அல்புரைதா இன்ஸ்டிடியூட்டில்" பேராசிரியராக நியமிக்கப்பட்ட அவர், மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க (தனது 40வது வயதில்) 1963ல் கஃபதுல்லாஹ்வின் இமாமானார்.

1968 முதல் கஃபதுல்லாஹ்வின் அனைத்து மார்க்க காரியங்களுக்கும் பொறுப்பாளியாக நியக்கப்பட்ட அவர், மூன்றாண்டுகளுக்கு பின்னர் 1971 முதல் கஃபதுல்லாஹ் மற்றும் "மஸ்ஜிதுன்நபவி" ஆகிய இரு பள்ளிவாசல்களின் நிர்வாகக்குழுவுக்கும் தலைவராக நியமிக்கப்பட்டு, 29 ஆண்டுகள் அப்பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டார்.

நீண்ட காலம் கஃபதுல்லாஹ்வில் இமாமாக இருந்த, அவரது விருப்பத்தின் பேரில், கடந்த 2000ம் ஆண்டு முதல், பொறுப்புக்களிலிருந்து விடுவிக்கப்பட்டு ஓய்விலிருந்தார்.

0 கருத்துகள்: