கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

அனாதையாக விடப்பட்ட இந்து சிறுமி பிந்து, வாழ்வளித்த முஸ்லிம் தம்பதியர்!

டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ)
30.11.2012 தேதியிட்ட செய்தித் தாள்களில் வந்த ஒரு சுவையான தகவலினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைகின்றேன்.


அரேபியாவிலும், மற்ற உலக நாடுகளிலும் பெண்களின் உரிமையினை மறுக்கப் பட்டு, அவர்கள் பிறப்பதே ஒரு சாபக் கேடு என்று கருதப் பட்ட 1400 ஆண்டுகளுக்கு முன்பு புகாரி 1418 யில் கூறியபடி "பல பெண் குழந்தைகளால் யார் சோதிக்கப் படுகிறார்களோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்தில் இருந்து காக்கும் திரையாக அமையும்" என்று சொல்லி பெண் குழந்தைகள் பிறந்தவுடன் சாகடிக்கும் முறையினை அறவே ஒழித்தது இஸ்லாமிய மார்க்கம் என்றால் மிகையாகாது.

இன்று கூட பெண் குழந்தைகள் பிறந்ததும் கள்ளிப் பாலையோ, அல்லது நெல்லினையோ பச்சிளம் குழந்தையின் வாயில் திணித்து சாகடிக்கும் முறைகள் பல்வேறு பகுதிகளில் நடப்பதும், பெண் குழந்தையினை அனாதையாக நடுத்தேருவில் விட்டு விட்டு செல்வதும் செய்திகளாகவே வந்து கொண்டுதான் இருக்கின்றது என்றால் மறுக்க முடியாது. அப்படிப் பட்ட ஒரு செய்தியினைத் தான் தினசரிகள் பகிர்ந்து கொண்டன.

முப்பது வருடங்களுக்கு முன்பு கோவையினை சார்ந்த ராஜகோபாலும் அவர் மனைவி இந்திராவும் தங்களது மூன்று வயது அருமை மகளான பிந்துவிற்கு திருவனந்தபுரம் உயிரியல் பூங்கா மற்றும் சர்கஸ் பார்ப்பதிற்காக அழைத்துச் சென்றிருக்கிறார்கள். நகரினை சுற்றி காட்டிவிட்டு வரும் வழியில் பிந்துவினை தவற விட்டு விட்டு கோவை சென்று விட்டார்கள்.

அதுதான் சமயமென்று ஒரு ஆசாமி கடத்திச் சென்று நகைகளைப் பிடுங்கிக் கொண்டு விட்டு ஒரு வீட்டில் அடைத்து வைத்திருந்திருக்கிறான். அதன் பின்பு பிந்துவினை அனாதையாக விட்டு விட்டு சென்று விட்டான். அனாதைக் குழந்தை கிடைத்தால் போதுமே இந்த பொல்லாத உலகத்தில். தங்கள் விருப்பம்போல் பந்தாடியிறுக்கிறார்கள் சிலர்.

அவர்களிடமிருந்து தப்பித்து அழுது கொண்டு வரும்போது. அந்தக் குழந்தையின் மீது இரக்கப் பட்ட ஐந்து ஆண் குழைந்தைகளுக்கு பெற்றோரான தாஜுதீன்-சுபைதா என்ற தீன்குல தம்பதியர் பிந்துவினையும் அரவணைத்து வளர்த்ததோடு நில்லாமல் அந்தக் குழந்தையின் பெற்றோரைத் தேட ஊடகங்களில் விளம்பரம் வெளியிட்டு உள்ளனர்.

அதனைப் பார்த்த சிலர் வந்து பார்த்துச் சென்று அந்தக் குழந்தை தங்களது குழந்தை இல்லை என்று சென்றாலும் கஷ்டத்தோடு கஷ்டமாக அந்த பிந்துவினை வளர்த்து வந்து உள்ளார்கள். அந்த பிந்துவிற்கு முஸ்லிம் பெயரான பீனா என்று சூட்டி அழகு பார்த்தார்கள்.

ஒரு பெண் பெரியவளானதும் ஒரு தந்தை என்ன கடமை செய்ய வேண்டும் என்று புகாரி 1905 யில் தெளிவாக கூறப் பட்டுள்ளது.

அதாவது "உங்களில் யார் திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்தி பெற்றிருக்கிறார்களோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் பார்வையினைக் கட்டுப் படுத்தும், அத்துடன் கற்பைக் காக்கும்". அந்தக் கடமையினை தாஜுதீன் நிறைவேற்ற பீனாவினை 17 வருடங்களுக்கு முன்பு நவுசாத் என்பவருக்கு நிக்கா செய்து கொடுத்து இன்று 11 வயதில் நஸ்ரின் மற்றும் முகச்னா என்ற மகள்கள் உள்ளனர்.

சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பீந்துவிற்கு பழங்கால நினைவுகள் வந்து தன் உண்மைப் பெற்றோர்களை பார்க்க ஆசைப் பாட்டு சென்னை ஊடகங்களின் துணையினைத் தேட ஆரம்பித்து இருக்கிறாள்.

நல்ல முயற்சிதானே என்று நீங்கள் எண்ணலாம். ஆனாலும் இதுவரைத் தேடாத மற்றும் இரண்டு பெண் குழந்தைகளை வைத்திருக்கும் ஒரு முஸ்லிம் பெண்ணினை அடையாளம் கண்டாவது நட்ராற்றில் விட்ட உண்மையான பெற்றோர் பீனாவினை ஏற்றுக் கொள்வார்களோ இல்லையோ ஆனால் அந்தப் பெண்ணை வளர்த்த தாஜுதீனும், கைப்பிடித்த நௌஷாத்தும் கைவிட மாட்டார்கள் அதுதான் இஸ்லாமிய மார்க்கம் போதித்த நல்லுபதேசம் என்றால் சரிதானே!
http://mdaliips.blogspot.com/

0 கருத்துகள்: