கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

மலரும் நினைவுகள்


தகவல் பரிமாற்றங்களில் கடிதங்கள் நமக்கு உதவியதைநம்மாலமறக்கமுடியாது அனாலும் மறந்து விட்டோம். இந்த காலத்தில் தொழில்நுட்பப முன்னேற்ற்த்தில் நொடியில் தகவல்களை பரிமாறிக்கொள்அநேகசாதனங்கள் வந்துவிட்டாலும் கடிதங்களில் நமது தாய்,தந்தை,மனைவிகளிடம் பரிமாறிக்கொண்ட அந்த சுகமானஅனுபவங்களே தனி சுகம்தான் .

எனது அனுபவங்களை 1970 ம் வருடங்களிலிருந்து நினைத்துப்பார்க்கிறேன் எங்கள ஊரில் அநேக குடும்பத்தலைவர்கள் பிழைப்பிற்க்காக மலேசியா,சிங்கப்பூர்ரில் இருப்பார்கள் குடும்பத்தார்களிடம் தகவல்களை பரிமாறிக்கொள்ள அவர்களுக்கு அன்று இருந்த ஒரே சாதனம் கடிதம்தான் வந்து சேர குறைந்தது 15 நாளாகும். குடும்ப செலவுக்கு பணமும் பதிவு தபால் மூலமாகத்தான் வரும்.எங்களுக்கு காலையில் முதல் வேலையே போஸ்ட் ஆபீஸ் சென்று பார்ப்பதுதான் அங்கு ஒரு கூட்டமே நிற்கும் கூடுமானவரை அங்கேயே தபால்களை விநியோகம் செய்துவிடுவார் போஸ்ட்மேன். பதிவுத்தபால் வந்திருந்தால் வீட்டுக்கு வர்றேன் என்பார் அத்தாட்டேந்து பணம் வந்திற்குனு அதற்க்கு அர்த்தம் அதை வாங்கிக்கொண்டு போஸ்ட் மேனுக்கு டிப்ஸ் கொடுப்பது ஊர் வழக்கம் .
     
1975 வாக்கில் அரபு நாடுகளின் பயணம் துவங்கிவிட்டது இவர்களுக்கும் 1990 வரை கடிதங்கள்தான் மிகவும் பெரிதாக கைகொடுத்துக்கொண்டு இருந்தன இதனிடையே என் வாழ்கையிலும்.அதன் பின்பு தொலைபேசி,செல்,கணினி என்றாகி இப்போது நாம் அனைவருமே கடிதங்களை மறந்துவிட்டோம் .
     
எனது அரபு நாடு பயண வாழ்க்கை 1983 துவங்கி 1990 வரை கடிதம்தான் அதன்பின்பு போன்,செல்,நெட் என்று நானும் மாறி போய்விட்டேன் என்பதுதான் உண்மை.ஆனாலும் பழைய கடித பரிமாற்றத்தில் அடைந்த ஆனந்தம் இப்போதில்லை. ஒரு கடிதத்தை போட்டு கிடைத்தது பதில்வர 15 நாள் காத்திருப்போமே அதுஒரு சுகம், வந்த கடிதத்தை படித்து மகிழ்ச்சியான செய்தியா இருந்தால் மீண்டும் மீண்டும் படித்து பரவசமடைவோமே அதுஒரு சுகம்,தாங்கமுடியாத துக்க செய்தியையும் ஏந்திவந்து நம்மை கலங்கவைக்கவும் செய்யும்.

என் அனுபவத்தில் முன்று நாளைக்கு ஒரு கடிதம் போடுவதும் அதுபோலவே என்  மனைவியும் போட்டதும் உண்டு. கடிதம் போடுவதில் நான் நம்பர் ஓன் என்று போஸ்ட் மேனிடம் பாராட்டும் பெற்றிருக்கேன் .
     
பெருநாள் வாழ்த்து,பிறந்தநாள் வாழ்த்து,திருமணநாள் வாழ்த்து,அழைப்பிதல்  என்றும் நம்மை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி இருக்கிறது இந்த கடிதங்கள். இன்றுவரை  இவைகளை  சேகரித்து வைத்துக்கொண்டு நினைவு வரும்போதல்லாம் எடுத்து பார்த்து மகிழ்வதும் பேரின்பம் அல்லவா?
       
இறுதியாக சொல்லி முடிக்கவேண்டும் அல்லவா? அதனால்  எல்லோரும் கடிதத்திக்கு மாறுங்கள் என்று சொல்லப்போவதில்லை. நம் வாழ்க்கையில் தகவல் பரிமாற்றத்தில் கடிதங்கள் நமக்கு எப்படியெல்லாம் நண்பனாக இருந்தன என்பதை நினைவு கூருவோம் நன்றி .
அன்புடன், S.M.சாதிக்

0 கருத்துகள்: