கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

அல்-இதாரா I.A.S. வழிகாட்டு மையம்

அன்பான சகோதரர்களே,
இன்றைய அரசியலில் முஸ்லிம் சமுதாயத்திற்கென்று தலைமை இல்லை, விழிப்புணர்வில்லை, எந்த அரசியல் கட்சிகளும் சமுதாயத்தை மதிப்பதில்லை, சமுதாய தலைவர்களுக்கு சமுதாயத்தை பற்றிய அக்கறை இல்லை.

அன்று நீ...!

அன்று இவ்வுலகில் உனக்கு இறுதி நாள் !
அதுதான் உன் மரணநாள்

அன்று நீ நினைத்திருக்கமாட்டாய்
உன் முந்திய வேளை உணவு உனக்கு கடைசியென்று!

அன்று நீ கண்மூடும் முன் பார்த்த பார்வையும்
உன் இறுதிப் பார்வையென எண்ணியிருக்க‌மாட்டாய்!

அன்று உன் உறவினர்களும் நண்பர்களும் அழுதாலும்
உன்னைக் காப்பாற்ற யாராலும் இயலாது!

மருந்து வாங்கும் போது… எச்சரிக்கை!

மருந்து வாங்கும் போது… கீழ்க்கண்ட விஷயங்களை அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இது உயிர் பற்றிய விஷயம். எனவே அக்கறை அவசியம்.
1. மருத்துவரின் சீட்டு இல்லாமல் வாங்காதீர்கள்!

இறைவனுக்கு நன்றி கூறி காலைப்பொழுதை தொழுகையோடு துவக்குவோம்!


நாம் கேட்காமலே அருளப்பட்ட இந்த வாழ்க்கைக்காக, ஒரு உண்மையான முஃமின் இறைவனுக்கு நன்றி செலுத்துபவராக மட்டுமில்லாமல், இறைவனும் அவனுடைய தூதரும் கற்றுத்தந்த வகையில் பயனுள்ளதாகவும் மாற்றிக்கொள்ள வேண்டும். சூரியோதயம் மற்றும் அஸ்தமனம் ஆகிய இரு நிலைகளின் மூலமாக இறைவன் தன்னுடைய அடியானுக்கு, அவனின்அருட்கொடைகளை ஞாபகப்படுத்துகிறான். அதிகமனோர் நன்றி செலுத்தாதவர்களாக இருக்கிறார்கள் என்றும் கூறுகிறான்.

கோணுழாம்பள்ளம் பள்ளிவாசல்தெரு S.A.பக்கீர்முஹம்மது அவர்கள் மறைவு

                                   அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம் பள்ளிவாசல்தெரு S.A.பக்கீர்முஹம்மது அவர்கள் இன்று இரவு (21.12.2011)  10 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.


ஜமாஅத் தொழுகை

Post image for ஜமாஅத் தொழுகை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஜமாஅத்துடன் தொழுவது தனித்துத்தொழுவதைவிட 27 மடங்குமேலானதாகும்.” (ஸஹீஹுல் புகாரி)
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளூச் செய்கிறார். பின் தொழுகையைத் தவிர வேறெந்த நோக்கமுமின்றி மஸ்ஜிதுக்குச் செல்கிறார். அப்போது அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவரது அந்தஸ்து (தரஜா) என்று உயர்த்தப்படுகிறது. ஒரு பாவம் அழிக்கப்படுகிறது. அவர் தொழ ஆரம்பித்தால் மலக்குகள், “இறைவனே! இவர் மீது அருள் புரிவாயாக!

சீன மொழியில் பழமைவாய்ந்த குர்ஆன் கண்டுபிடிப்பு

ts
பீஜிங்:மிகவும் புராதான பழமை வாய்ந்த சீனா மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட குர்ஆன் சீனாவில் கண்டுபிடிப்பு. இந்த குர்ஆன் கையால் எழுதப்பட்டு கடந்த 1912-ஆம் ஆண்டு மொழிபெயர்ப்பு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த குர்ஆனை முஸ்லிம் கலாச்சார ஆராய்ச்சியாளர்களால் சீனாவின் வடமேற்கு பகுதியான கன்சு மாகாணத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அணைக்கரை கொள்ளிடம் பாலம் புதுப்பிப்பு இலகுரக வாகனங்களுக்கு மட்டும் அனுமதி

கும்பகோணம்: அணைக்கரை கொள்ளிடம் ஆற்று பாலத்தில் புதுப்பிப்பு பணிகள் முடிவடைந்ததையடுத்து, நேற்று முதல் இலகுரக வாகனங்களில் போக்குவரத்து துவங்கியது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தையும், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களையும் இணைப்பது

அமீரகத்தில் புதிய எழுச்சி பொதுக்குழுவில் திரளானோர் பங்கேற்று அமீரக காயிதெமில்லத் பேரவை புதிய நிர்வாகிகள் தேர்வு!

அமீரகத்தில் புதிய எழுச்சி பொதுக்குழுவில் திரளானோர் பங்கேற்று அமீரக காயிதெமில்லத் பேரவை புதிய நிர்வாகிகள் தேர்வு!

சென்னை பாஸ்போர்ட் சேவை மையத்தில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வசதி

வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் பாஸ்போர்ட்டுக்கு நேரடியாக விண்ணப்பிக்கும் வகையில் சென்னை பாஸ்போர்ட் சேவை மையத்தில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு

இஸ்லாத்தில் பெண்கள் நிலை

இஸ்லாத்தில் பெண்களுக்கிருக்கிற உரிமைகள் பற்றிப் பேசுவதற்கு முன் பெண்களை மற்ற சமூகத்தினர் எப்படி நடத்திக் கொண்டிருந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்துவது அவசியமாகும்.
 கிரேக்கர்கள் பெண்களை வியாபாரப் பொருட்களாகவே கருதினர்.

நீங்கள் சமூக ஆர்வளர்களா?

          அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…
 நமது இஸ்லாமிய சமூதாயத்திற்க்காக தங்கள் வாழ்க்கை முழுவதையும் அர்பனம் செய்பவர்களும் நம்மில் உண்டு,சமூதாயத்தை பற்றி கவலை படாமல் சுயநலமாக வாழ்பவர்களும் நம்மில் உண்டு. நாம் நமது பங்கிற்க்கு ஒரு முஸ்லிமாக நமது இஸ்லாமிய சமூதாயத்திற்க்கு என்ன செய்தோம் என்று சற்று சிந்தனை செய்து பார்ப்போம்….! வாழ்க்கை முழுவதையும் கொடுதோமா? அல்லது சுயநலமாக வாழ்கிறோமா? நம்மில் சிலர் ஏதோ ஒரு விதத்தில் சமூதாயத்திற்க்கு சேவை செய்கிறோம்.

மாதம் ரூ.750 பெற்ற உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1000 ஆக அதிகரிப்பு: ஜெயலலிதா உத்தரவு

மாதம் ரூ.750 பெற்ற உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1000 ஆக அதிகரிப்பு: 
ஜெயலலிதா உத்தரவுதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாப்பதிலும், அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உயர்த்துவதிலும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முனைப்புடன் செயல் பட்டு வருகிறது.

கோணுழாம்பள்ளம் T.C.முஸ்லிம்தெரு சயீத்அஸ்ரஃப் அலி அவர்கள் மறைவு

                                      அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம் T.C.முஸ்லிம்தெரு சயீத்அஸ்ரஃப் அலி அவர்கள் இன்று காலை (13.12.2011) தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

தீராத விளையாட்டுப் பிள்ளை தண்ணீர், தீர்வென்ன தமிழகமே

தமிழக மக்களின் தாகம் தீர்க்கவும், தமிழக விவசாயிகள் வாழ்வாதாரத்தின் அடித்தளமாகவும், பறவைகள், விலங்கினங்கள் துள்ளி விளையாடவும் வழி வகை செய்யும் ஆறுகளாக வற்றாத காவேரி, முல்லைபெரியார், பாலாறு, தாமரவரணி உள்ளன. அவை அத்தனையுமே கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநில எல்லையிலுள்ள மலைபகுதியிளிருந்து புறப்படுகின்றன. ஆனால் அவை அத்தனையுமே கடைசியில் சங்கமமாவது பெருங்கடலேயாகும்.

குர்ஆனின் நற்போதனைகள்...

உண்மை பேசுக!
அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119
நேர்மையாக பேசுக!
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.

விட்டுக்கொடுத்தால் வெற்றிபெறலாம்!

விட்டுக் கொடுக்கும் தன்மை

முஸ்லிம்களிடத்தில் இது குறைந்து வருவதனால் தான் இன்று நம்மிடையே பகைமை உணர்வுகள் அதிகம் ஏற்பட்டு பல பிணக்குகளும் பிரிவுகளும் உண்டாகியிருக்கின்றன. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் குர்ஆன், ஹதீஸ் என்று வாய்கிழியப் பேசுபவர்கள் தான் இத்தகைய விட்டுக்கொடுக்கும் தன்மை சிறிதும் அற்றவர்களாக அதிகம் காணப்படுகின்றனர். இவர்கள் ஷைத்தானின் சூழ்ச்சிக்கு பலியாகி அவனின் மாயவலையில் விழுந்திருக்கிறார்கள்.

மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள்

ஒரு மனிதன் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவை ஆகி விடுகின்றன. அம்மூன்று செயல்கள்:—
    1.சதக்கத்துல் ஜாரியா 2.பலன் தரும் கல்வி 3.பெற்றோருக்காக பிரார்த்திக்கும் நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:முஸ்லிம்

குடி கெடுக்கும் குடியரசுகள்

அல்குர்ஆனின் வழியில் அறிவியல்……
இஸ்லாம் தடை செய்யும் தனி மனித, சமூகத்தீமைகளில் முதன்மையானது மது. குடி குடியைக் கெடுக்கும் என்று கூறுவதன் பொருள் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.ஆகவேதான் மதுவை தீமைகளின் தாய் என்று கூறுகிறார்கள்.

நமக்கு ஏன் வேண்டும் ஊடகம்?


இஸ்லாமியர்களுக்கென்று ஒரு ஊடகம் வேண்டும் என்ற கோஷம் பல்லாண்டுகளாக ஒலித்து வருகின்றது. அப்படி ஒலித்துக்கொண்டிருந்தாலும், இஸ்லாமியர்களுக்கேன்றே பல்வேறு மாத இதழ்கள், வார இதழ்கள் வந்துகொண்டுதானிருக்கின்றன..
அவைகள் பெரும்பாலும் இயக்கங்கள் சார்ந்தவைகளாகவும்,

நிலையில்லாத இந்த வாழ்வில் பெருமையடித்துக் கொள்வதற்கு எதுவுமில்லை!

அடுத்த வினாடி எது வேண்டுமானாலும் நடக்கலாம், அழுது கொண்டிருப்பவன் சிரிக்கலாம், சிரித்துக் கொண்டிருப்பவன் அழலாம் ஏனெனில் கண நேரங்களிலெல்லாம் உலகம் மாற்றமடைந்து கொண்டே இருக்கிறது. நாம் எவளவு நாட்கள் வாழ்வோம் என்பதில் கூட எந்த நிச்சயமும் இல்லை,

இதய நோய்களுக்கு பகைவனாக விளங்கும் புகையை பற்றிய சில உண்மைகள்

1. ஒவ்வொரு சிகரெட்டும் உங்கள் விலை மதிப்புள்ள வாழ்க்கையிலிருந்து ஐந்து நிமிடங்களை பறித்துக் கொள்கிறது.
2. ஒவ்வொரு புகை இழுப்பும் 4,000 வெவ்வேறு தீய பொருட்களைக் கொண்டது. இதில் புற்றுநோய் மற்றும் இருதய நோய் ஏற்படுத்தும் ரசாயனங்களும் அடங்கும்.

என்றும் நம் நினைவில்…! நீதிக்காக ஏங்கும் பாபரி!

                                   என்றும் நம் நினைவில்…!
let we forgot
பாபரி மஸ்ஜித் என்றதும் நம் நினைவில் நிழலாடுவது சிதிலமடைந்த மூன்று கும்பங்கள் கொண்ட ஒரு கட்டடமும், பின்னர் அது மணல் மேடாகத் தகர்க்கப்பட்டதும், பயங்கரவாத ஃபாசிச ஹிந்துத்துவ கோர முகங்களும், நாடு முழுவதும் அதனையொட்டி நடந்த முஸ்லிம் இனப் படுகொலைகளும், இழந்த முஸ்லிம்களின் ரத்தமும், சதையும், அதனை மீட்டெடுப்பதற்கான முஸ்லிம்களின் நீண்டகாலப் போராட்டமும்தான்!

முல்லை பெரியாறு சுருக்கமான வரலாறு !

கேரளத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி கடலில் கலந்த பெரியாறு, முல்லை நதிகளுக்கு இடையே அணை கட்டும் பணியை 1874-ல் தொடங்கியவர் பிரிட்டனைச் சேர்ந்த பொறியாளர் பென்னிக்குயிக்.அரசு நிதி உதவியுடன், அடர்ந்த வனப்பகுதியில் 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் மேற்கொள்ளபட்ட இந்த அணை கட்டும் பணி ஆரம்பக்கட்டத்தில் தோல்வி அடைந்தது. இதனால் அரசு தனது நிதி உதவியை நிறுத்திவிட்டது. எனினும், பென்னிக்குயிக் தனது சொத்துக்களை விற்று, அணை கட்டும் பணியைத் தொடர்ந்தார்.

மண்ணை மயானமாக்கும் மது

manathodu-manathai1-270x138
மீண்டும் ஒரு தடவை அவரை ரயில் வண்டியில் கண்டபொழுது அவர்என்னைப் பார்த்து சிரிக்க முயன்றார். காய்ந்த உதடுகள், வெளிறிப்போன முகம், குழி விழுந்தகண்கள்… என்று ஆளின் கோலமே மாறிப்போயிருந்தது.

பாவம் தமிழன்!

கேரள முதலமைச்சரும் அம்மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தில்லியில் பிரதமரையும் மற்றவர்களையும் சந்தித்துத் தங்களின் நேர்மையற்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
அணை 999 என்ற முற்றிலும் பொய்யான தகவல்கள் அடங்கிய படத்தை கேரள முதலமைச்சர் தலைமையில் திரையிட்டு அனைத்துக்கட்சித் தலைவர்கள் பத்திரிகையாளர்கள் எல்லோருக்கும் காட்டியிருக்கிறார்கள்.

முல்லைப் பெரியாறு அணை வரலாற்றுப் பின்னனி என்ன? ஒவ்வொரு தமிழனும் அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டிய குரும்படம்


ஒவ்வொரு தமிழனும் அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்களில் முல்லைப் பெரியாறு அணையும் ஒன்று. முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்ட வருடம் என்ன? அணை யாருக்குச் சொந்தம். இந்த அணைப்பற்றி கேரள நாளிதழான மலையாள மனோரமா செய்த விசமப் பிரச்சாரம் என்ன? கேரள அரசு செய்த, செய்துக் கொண்டிருக்கும் சூழ்ச்சி என்ன? இந்த அணைக்குறித்து உச்சநீதி மண்றத்தின் நிலை என்ன? பிரபல அரசியல்வாதி வைகோ அவர்கள் தமக்காக போராடவில்லை ஒட்டுமொத்த தமிழினத்திற்காக போராடுகிறார் என்பதை விளக்கும் அருமையான குரும்படம்.

இந்த குரும்படத்தை ஒவ்வொரு தமிழனும் அவசியம் பார்க்க வேண்டும், மற்ற தமிழர்களையும் பார்க்க வைக்க வேண்டும்.







 

நான் உனக்கு எதில் குறை வைத்தேன் ?

அன்பார்ந்த சகோதர, சகோதரரிகளே இந்த கேள்வி கேட்கப்டாத குடும்பங்கள் உள்ளதா? உங்கள் அன்பிற்கினியவர்கள் உங்களை நோக்கி இந்த கேள்வியை கேட்டுவிட்டால் எப்படி இருக்கும் என்பதை ஒரு கணம் யோசித்துப்பாருங்கள்.

இந்த கேள்வியை கேட்டுவிட்டால் ஆத்திரப்படாதவர்கள் எவரேனும் இருப்பார்களா? என்னைப் பார்த்து இக்கேள்வியை கேட்கிறாயே

உங்களுக்கு 40 வயது ஆகிவிட்டதா?

40 முதல் 60வயது வரையிலான பருவம் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது. இந்த காலக் கட்டத்தில்தான் பலவிதமான நோய்கள் மனிதர்களைத் தேடி வரும். அதற்கு இடம் கொடுத்து, உடலில் உட்காரவைத்துவிட்டால், ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக கெடுத்து ஆளையே வீழ்த்திவிடும். நாம் கவனமாக இருந்தால் நோயை அண்டவிடாமல் தடுத்து, முழு ஆரோக்கியத்துடன் வாழலாம்.

வலைதளங்களை குறிவைக்கும் வக்கிர கும்பல்

சமூக வலைதளங்கள் மூலம், பள்ளி, கல்லூரி மாணவியரை குறிவைத்து மோசடி செய்யும் வக்கிர கும்பல்களின் செயல்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்த விஷயத்தில் மாணவியர் மட்டுமின்றி, பெற்றோரும் உஷாராக இருக்க வேண்டும்.

புறம் பேசுவதன் விபரீதங்கள்!

மனிதனுக்கு அல்லாஹ்வினால் ஏராளமான நிஃமத்துக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் மனிதனின் உடலுறுப்புகள் அனைத்தையும் விட முதன்மையானது ஆகும். அதிலும் தான் கற்பனை செய்கின்ற விஷயங்களை, சிந்திக்கின்ற விஷயங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுகின்ற மிக மிக முக்கிய உறுப்பாக மனிதனின் நாவு விளங்குகின்றது. இந்த நாவு,

சர்க்கரை நோயுள்ளவருக்கு இதய பாதிப்பு!

"சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு இதய பாதிப்புகள் ஏற்படும்" என இந்திய மருத்துவ கழகத்தின் தலைவர் மருத்துவர் சடகோபன் தெரிவித்துள்ளார்.

இந்திய மருத்துவ கழகத்தின் மதுரை கிளை மற்றும் கல்லூரி பயிற்சி பொது மருத்துவர்கள் சார்பில் சர்க்கரை நோய் தடுப்பு மற்றும் பாதிப்புகள் குறித்த சிறப்பு கருத்தரங்கம் மதுரையில் நடைபெற்றது. இந்திய மருத்துவ கழகத்தின் செயலாளர் மருத்துவர் அமானுல்லா வரவேற்றார். தலைவர் மருத்துவர் சடகோபன் தலைமை தாங்கி பேசினார்.

இணையதளத்தில் ஆபாச வீடியோ வெளியிட்டால் 5 வருடம் சிறை!

சென்னை : பரபரப்பாக காணப்படும் இன்றைய கணினி உலகில் இணைய தளங்கள் மூலம் ஆபாச படம் வீடியோக்கள் வெளிவருகின்றன. இதனால் பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை சீரழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க ஆபாச வீடியோகளை இணையதளத்தில் வெளியிட்டால் அவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று சைபர் குற்றப்பிரிவு காவல்துறை எச்சரித்துள்ளனர்

வரலாறு படைத்த பாப்புலர் ஃப்ரண்டின் சமூக நீதி மாநாடு

Social Justice conference Grand Public Meet. mulayam singh
புதுடெல்லி:ஒடுக்கப்பட்ட-சிறுபான்மை மக்களின் சமூகநீதிக்கான போராட்டத்தில் புதிய வரலாற்றை படைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநாடு நிறைவுற்றது.

அன்பளிப்பு


ஒருவருக்கொருவர் அன்பளிப்புச் செய்து கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக அன்பளிப்பு, உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடும். மேலும் எந்த அண்டை வீட்டாரும் தம்முடைய அண்டை வீட்டாரை இழிவாகக் கருத வேண்டாம் அவர் ஆட்டின் குழம்புத் துண்டை அன்பளிப்பாக அனுப்பிய போதினும் சரி என்று நபி (ஸல்) அவர்கள் கூறினர்.நபி(ஸல்) அவர்கள் அன்பளிப்பை ஏற்றுக் கொண்டதுடன் அதற்குப் பகரமாக அன்பளிப்பும் அனுப்பி வந்தனர்.

அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)
நூல் : அபூதாவூத், திர்மிதீ)

குடும்பத்தை பிளவுபடுத்தும் பாவிகள்

Post image for குடும்பத்தை பிளவுபடுத்தும் பாவிகள்
குடும்ப வாழ்க்கையின் அவசியம் குறித்து நாம் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறோம். நமது குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சியும் நல்லுறவும் நீடிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறோம்.
ஆனால் மற்றவர்களின் குடும்பங்களைப் பற்றி நமக்கு இத்தகைய நல்லெண்ணம் இருப்பதில்லை.

நீரிழிவு நோய்க்கு நபிவழியில் தீர்வு

"நான் நோயுறும்போது அவனே (அல்லாஹ்வே) எனக்கு நிவாரணம் தருகின்றான்'' (அல்குர்ஆன் 26:80)

மேற்கண்டபடி நோய்க்கான நிவார ணத்தை தானே தருவதாக அல் லாஹ் திருமறைக் குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான். இதேபோல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், எல்லா நோய் களுக்கும் இப்பூமியில் நிவாரணம் உண்டு என்கிறார்கள்.

இந்திய சட்டத்துறையில் ஷரீஅத் சட்டத்தின் பங்களிப்பு

( வழக்கறிஞர் நீடூர் அல்ஹாஜ் ஏ.எம். சயீத் )

   (நபியே) உண்மையான இவ்வேதத்தை நாம் தான் உம்மீது இறக்கினோம். இது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மையாக்கி வைக்கின்றது. அன்றி அவைகளைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே நீர் அல்லாஹ் இறக்கிய இ(வ் வேதத்)தைக் கொண்டே அவர்களுக்கிடையில் தீர்ப்பளியும். மெளட்டீகக் காலத்து சட்டங்களையா இவர்கள் விரும்பிகின்றனர். மெய்யாகவே நல்லுறுதி பூண்ட மக்களுக்கு அல்லாஹ்வை விட அழகான தீர்ப்பளிப்பவர் யார்?  – திருக்குர்ஆன் 5:48-50.

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை:

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்திகிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.


இன்று தமிழகம் முழுவதும் பரவலாக
காணப்படுகிறது பரோட்டாகடை .


அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .

நபி (ஸல்) சமுதாயத்தவர்களுக்கு மட்டும் தண்ணீர்த் தடாகம்

நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் (கியாமத்) நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஊதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்'. (அல்குர்ஆன் 78:17,18)

தண்ணீர்த் தடாகம்

மக்கள் விசாரணைக்காக ஒன்று திரட்டப்படும் அந்நாளின் கொடூரத்தைப் பற்றி முன்னர் நாம் விளக்கியுள்ளோம். கடும் தாகத்தால் மக்கள் துடிக்கக் கூடிய அந்நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு மட்டும் தாகம் தீர்க்கத் தனி ஏற்பாட்டை அல்லாஹ் செய்வான்.

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25% இடம்

 இலவச - கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இனி 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்துக்கான விதிமுறைகளில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

நேரமில்லை” – ஓர் இஸ்லாமியப் பார்வை

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.

நேரமில்லை! – இது நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை! அதிலும் குறிப்பாக தொழுகை, நஃபிலான வணக்கங்கள், மார்க்கக் கல்வியை பயில்வது போன்ற இபாத்களைப் பற்றி பேசப்படும் போது அதிகமாக உபயோகப்படுத்தும் வார்த்தை!

அல்லாஹ்வின் வாக்குறுதிகள்

                  செயலுக்கேற்ப கூலித் தரப்படும்:
Post image for அல்லாஹ்வின் வாக்குறுதிகள்* (நபியே!) நீர் கூறுவீராக; இவ்வுலக இன்பம் அற்பமானது; மறு உலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது; நீங்கள் எவ்வளவேணும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.   (4:77)

இரவில் பாதுகாப்பான டிரைவிங்குக்கு சில டிபஸ்..

பகல் நேரத்தை போன்று இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு போதிய வெளிச்சமும்,பார்வை திறனும் கிடைப்பதில்லை.வாகனத்தின் முகப்பு விளக்குகள் குறைந்த தூரத்திற்கு மட்டுமே வெளிச்சத்தை தருகின்றன.இதனால்,இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சாலையை கணித்து ஓட்டுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. எனவே,இரவு நேர பயணங்களில் டிரைவர்கள்
மிகவும் விழிப்புடன் செயல்படுவதற்கான சில முன் யோசனைகள்...

நாவை பேணுவோம்...!!!

புறம் பேசாதீர்..(அல்குர்ஆன்.49:12)

பொய் பேசாதீர்..(அல்குர்ஆன்.22:30)

அவதூறு பேசாதீர்..(அல்குர்ஆன்.33:58)

நியாயமே பேசுங்கள்..(அல்குர்ஆன்.6:152)

நளினமாக பேசுங்கள்..(அல்குர்ஆன்.20:44)

உண்மையை பேசுங்கள்..(அல்குர்ஆன்.3:17)

ஆதாரமற்றதை பேசாதீர்..( அல்குர்ஆன்.2:111)

மிக அழகியதாய் பேசுங்கள்..(அல்குர்ஆன்.17:53)

வீண் பேச்சை தவிர்த்திடுங்கள்..(அல்குர்ஆன்.23:3)

மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்..(அல்குர்ஆன்2:83)

நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்..(அல்குர்ஆன்.33:70)

கனிவான, அன்பான சொல்லையே சொல்வீராக..(அல்குர்ஆன்.17:28)

கனிவான, கண்ணியமான பேச்சையே பேசுவீராக..(அல்குர்ஆன்.17.23)



இவ்வளவு முறை குர்ஆனில் சொல்லியும்

நாம் நாவை காக்கவில்லையென்றால்...?????

................................................................?????

வல்ல இறைவனே நம் அனைவரையும் பாதுகாக்கட்டும்..!!!!

வாக்காளர் அட்டை தொலைந்து போனால் ரூ. 25 செலுத்தி புதிய அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.


தினகரன்.

வாக்களர் அடையாள அட்டை – ஆன்லைனில்

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் புதிதாக தங்களின் பெயரை இணைக்க புகைப்படத்துடன் ஆன்லைனில் அப்ளை செய்ய தமிழ்நாடு தேர்தல் ஆணையம் கடந்த 2010 முதல் இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளது.
தற்போது நேரில் இந்த சேவை எண்ணற்ற அரசு பள்ளிகளிலும்  நகராட்சி அலுவலங்களிலும்  நடைபெற்று வருகிறது. அவற்றில் இந்த சலுகையை தவறவிட்டவர்கள் ஆன்லைனில் அப்பளை செய்து தங்களின் பெயரை இணைத்துக்கொள்ளவும்.
இணைய முகவரி: http://www.elections.tn.gov.in/eregistration/

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்!

செல்வத்தின் மீதுள்ள ஆசை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது!
“பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு” (அல்-குர்ஆன் 3:14)

கர்ப்ப காலத்தில் ஏடுத்துக்கொள்ள வேண்டிய சத்தான உணவுகள்

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப்பெண்ணுக்கு அதிக அளவில் நல்ல சத்தான உணவுப்பொருட்கள் தேவைப்படுகிறது. கர்ப்பிணி பெண் மற்றும் வயிற்றில் வளரும் குழந்தையின் தேவைகள் சந்திக்கப்பட கர்ப்பிணியானவள் வழக்கததிற்கு அதிகமான சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தியாவில், ஏழை கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்பால் கொடுக்கும் பெண்கள் எடுத்துக் கொள்ளும் உணவானது மற்ற சாதாரண கர்ப்பமில்லாத மற்றும் பால் கொடுக்காத நிலையில் உள்ள பெண்கள் உட்கொள்ளும் உணவின் அளவிலேயே உள்ளது.

இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்

கோணுழாம்பள்ளம் நண்பர்கள் கோணுழாம்பள்ளம்,வாழ்வெளிநாட்டுநண்பர்கள்,
இணையதள வாசகர்களுக்கும்,உறவினர்களுக்கும்,நண்பர்கள் அனைவருக்கும்கோணுழாம்பள்ளம்post சார்பில் இனிய ஹஜ் திருநாள் நல் வாழ்த்துக்கள்…!



புனித ஹஜ் செய்தவர்களுக்கு பூரணமான ஹஜ்ஜாக இறைவன் ஆக்கவும், ஏனையர்களுக்கு அந்த (ஹஜ்) சிறந்த இடத்தை கண்டு வரும் பெரும் பாக்கியத்தை தரவும் இந்த நன்னாளில் இறைவனிடம் வேண்டுகிறேன்!!!

ஹஜ் மாதத்தின் படிப்பினை

"(...ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைச் சேமித்துக் கொள்ளுங்கள். சேமிப்பில் சாலச்சிறந்தது இறையச்சமாகும். எனவே, நல்லறிவுடையோரே! என்னையே அஞ்சி வாழுங்கள்" (அல்குர்ஆன் 2:197).

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொருளாளருக்கு அமீர காயிதெமில்லத் பேரவை சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி!

animation maker

அம்மா உன்னை நேசிக்கிறேன்....



யா அல்லாஹ் என் இரட்சகனே! நான் சிறுபிள்ளையாய்
இருந்தபோது என் பெற்றோர்கள் என் மீது பிரியமாய் இருந்ததுபோல் நீயும் அவர்கள் மீது கிருபை செய்வாயாக! எனது பாவங்களையும் அவர்களது பாவங்களையும் கேள்வி கணக்கு நாட்களில் மன்னித்தருள்வாயாக!  

இதயத்தை பாதுகாக்க யோசனைகள்

1. மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள். சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம்.

2. உண்ணாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல் படுத்தவே செய்யும். சில நேரங்களில் டயட்டில் இருப்பது போதிய சத்து உடலில் சேராமல் தீங்கு விளைவிக்கும்.

கன்னத்தில் முத்தமிட்டால்........... -

வாப்பா....... வாப்பா.............

”என்னம்மா?”
”வாப்பா... சாயங்காலம் சீக்க்ரம் வந்திருங்க, சரியா ஆறு மணிக்கெல்லாம் நிகழ்ச்சி ஆரம்பிச்சிருவாங்க, கலெக்டர் தான் சீப் கெஸ்ட். நான் பேச ஆரம்பிக்கையில் நீங்க இருக்கணும் சரியா........... "  சொல்லிக்கொண்டே கல்லூரிப் பேருந்தைப் பிடிக்கப் பறந்தாள் ஆயிஷா.