கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

அணைக்கரை கொள்ளிடம் பாலம் புதுப்பிப்பு இலகுரக வாகனங்களுக்கு மட்டும் அனுமதி

கும்பகோணம்: அணைக்கரை கொள்ளிடம் ஆற்று பாலத்தில் புதுப்பிப்பு பணிகள் முடிவடைந்ததையடுத்து, நேற்று முதல் இலகுரக வாகனங்களில் போக்குவரத்து துவங்கியது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தையும், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களையும் இணைப்பது
 அணைக்கரை கொள்ளிடம் ஆற்று பாலம். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இப்பாலம் பழ மை காரணமாகவும், அளவுக்கு அதிகமான எடையுடன் சென்ற லாரிகளாலும் சேதமானது. இதன்காரணமாக கடந்த 2007ம் ஆண்டு முதல் இப்பாலத்தில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பஸ் போக்குவரத்து தஞ்சையில் இருந்து திருவையாறு வழியாகவும், கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை வழியாகவும் மாற்றி அனுப்பப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் 100 கி.மீ தூரம் பஸ்கள் சுற்றி செல்வதால் கூடுதல் பயண கட்டணம், எரிபொருள் செலவு அதிகமாகிறது. இதற்கிடையில் தெற்கு ராஜன் மற்றும் வடக்கு ராஜன் பாலங்கள், 6.50 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்தது. பாலத்தில் இருந்த சுண்ணாம்பு காரைகள் ஒரு -அடி ஆழத்திற்கு அகற்றப்பட்டு, புதிதாக அரை அடிக்கு ஆர்.சி.சி கான்கிரீட் போடப்பட்டுள்ளது. பாலத்தின் கீழே கண்மாய்களும் பலப்படுத்தப்பட்டுள்ளது. பலப்பணிகள் முடிவடைந்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இலகு ரக வாகன போக்குவரத்து மட்டும் துவங்கியது. பயணிகள் பயன்படும் வகையில் பஸ் போக்குவரத்தை அமைச்சர் வைத்திலிங்கம், எம்.பி மணியன் ஆகியோர் துவக்கி வைப்பதாக இருந்தது. ஆனால் மேலிடத்தில் உத்தரவு கிடைக்க பெறாததால், முறைப்படி துவக்கி வைக்கப்படவில்லை. இருந்தபோதிலும் பஸ், லாரியை தவிர அனைத்து பயணிகள் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. பாலத்தின் பாதுகாப்பு கருதி ஒரு நேரத்தில் ஒரு மார்க்கத்தில் இருந்து மட்டுமே பஸ்கள் செல்லும் வகையிலும், இரு பக்கவாட்டிலும் பாதசாரிகள் நடக்கும் வகையிலும் நடைபாதைக்கான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பயணிகள் நடந்து செல்கின்றனர். ஒரு பக்கத்தில் இருந்து பஸ்கள் சென்ற பின், போலீஸ் வாக்கி டாக்கி மூலம் தகவல் பரிமாறப்பட்டு, மறு பக்கத்தில் இ ருந்து பஸ்கள் அனுமதிக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து இன்னும் 10 நாட்களில் இரு பக்கத்திலும் சிக்னல்கள் அமைக்கப்பட் டு, போக்குவரத்து சீரமைக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்து றை அதிகாரிகள் தெரிவித்தனர்.


0 கருத்துகள்: