இஸ்லாத்தில் பெண்களுக்கிருக்கிற உரிமைகள் பற்றிப் பேசுவதற்கு முன் பெண்களை மற்ற சமூகத்தினர் எப்படி நடத்திக் கொண்டிருந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்துவது அவசியமாகும்.
கிரேக்கர்கள் பெண்களை வியாபாரப் பொருட்களாகவே கருதினர்.
அவர்களுக்கென எந்த உரிமையும் கிடையாது. உரிமைகள் அனைத்தும் ஆண்களுக்கே என்றனர். இன்னும் அப்பெண்களுக்குச் சொத்துரிமை, கொடுக்கல், வாங்கல் போன்ற உரிமைகள் தடுக்கப் பட்டிருந்தன. அவர்களில் பிரபல்யமான தத்துவஞானியான சாக்ரடீஸ் என்பவன் பெண்கள் இருப்பது உலகின் வீழ்ச்சிக்கு மிகப்பெரும் மூல காரணமாகும். மேலும் பெண்கள் விஷ மரத்திற்கு ஒப்பானவர்கள். அம்மரத்தின் புறத் தோற்றம் அழகாக இருக்கும். எனினும் அதன் கனிகளை சிட்டுக்குருவிகள் தின்றவுடனேயே இறந்துவிடுகின்றன என்று கூறியுள்ளான்.
ரோமானியர்கள் பெண்களை உயிரற்ற ஒரு பொருளாகவே கருதி வந்துள்ளனர். அவர்களிடம் பெண்களுக்கு எந்த மதிப்பும் உரிமையும் இருந்ததில்லை. பெண்கள் உயிரற்ற பொருளாகக் கருதப்பட்டதால்தான் அவர்களைக் கொதிக்கின்ற எண்ணெயை ஊற்றியும், தூண்களில் கட்டியும் வேதனை செய்தார்கள். இதுமட்டுமின்றி குற்றமற்ற பெண்களை குதிரைகளின் வால்களில் கட்டி அவர்கள் மரணித்து போகின்ற அளவிற்கு மிக விரைவாக ஓட்டிவிடுவார்கள்.
பெண்கள் விஷயத்தில் இந்தியர்களின் கண்ணோட்டமும் இவ்வாறுதான் இருந்துள்ளது. அவர்கள் இன்னும் ஒருபடி அதிகமாக கணவன் இறந்துவிட்டால் அவனின் சிதையுடன் மனைவியையும் எரித்து விடுபவர்களாகவும் இருந்திருக்கின்றனர்.
சீனர்கள் பெண்களை நற்பாக்கியத்தையும் செல்வங்களையும் அழித்துவிடக்கூடிய தண்ணீருக்கு ஒப்பாக்கினர். அவர்கள் தம் மனைவியரை உயிரோடு புதைத்து விடுவதற்கும் விற்றுவிடுவதற்கும் உரிமை பெற்றிருந்தனர்.
பெண்கள் சாபத்திற்குரியவர்களென யூதர்கள் கருதுகிறார்கள். ஏனெனில் அவள் தான் ஆதம்(அலை) அவர்களை வழிகெடுத்து மரக்கனியை சாப்பிடச் செய்துவிட்டாள். மேலும் பெண்ணுக்கு மாதவிடாய் வந்துவிட்டால் அவள் அசுத்தமானவள், வீட்டையும் அவள் தொடும் பொருளையும் அசுத்தப்படுத்திவிடக்கூடியவள் எனவும் கருதுகிறார்கள். பெண்ணுக்குச் சகோதரர்களிருந்தால் அவள் தன் தந்தையின் சொத்தில் சிறிதும் உரிமை பெறமாட்டாள் எனவும் கருதுகிறார்கள்.
கிறிஸ்தவர்கள் பெண்களை ஷைத்தானின் வாசலாகக் கருதுகிறார்கள். கிறுத்தவ அறிஞர்களில் ஒருவர் பெண் மனித இனத்தைச் சார்ந்தவளல்ல எனக் கூறினார். இன்னும் புனித பூனபெஃன்தூரா என்பவன் கூறினான்: ”நீங்கள் பெண்களைக் கண்டால் அவளை மனி த இனத்தைச் சார்ந்தவள் எனக் கருதிவிடாதீர்கள். அது மட்டுமல்ல அவளை ஒரு உயிருள்ள ஜீவனாகக் கூட கருதாதீர்கள். மாறாக நீங்கள் காண்பது நிச்சயமாக ஷைத்தானின் உருவத்தைத்தான். இன்னும் நீங்கள் செவியேற்கும் அவளது சப்தம் பாம்பின் சீற்றம் தான்”"
மேலும் கடந்த(19ஆம்) நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஆங்கிலேயே பொதுச் சட்டப்படி பெண்கள் பிரஜா உரிமை கொடுக்கப்படாதவர்களாக இருந்தனர். இதுபோன்றே பெண்களுக்கென எந்த தனிப்பட்ட உரிமைகளும் கிடையாது. இன்னும் அவள் அணியும் ஆடை உட் பட எந்தப் பொருளையும் சொந்தப்படுத்திக் கொள்வதற்கும் உரிமையில்லை. 1567 ஆம் ஆண்டு ஸ்காட்லண்ட் பாராளுமன்றம் பெண்களுக்கு எந்த அதிகாரமும் கொடுக்கக்கூடா தென சட்டம் இயற்றியது. இவ்வாறே எட்டாவது ஹென்றியின் காலத்தில் ஆங்கிலேயப் பா ராளுமன்றம் பெண்கள் அசுத்தமானவர்கள் என்பதால் இன்ஜீலைப் படிக்கக் கூடாதென சட்டம் இயற்றியது.
பிரஞ்சுக்காரர்கள் 586 ஆம் ஆண்டில் பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்களா? இல்லையா? என ஆய்வு செய்து முடிவெடுக்க ஒரு சபையை அமைத்தனர். அச்சபை பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்கள்தான். எனினும் அவர்கள் ஆண்களுக்குப் பணிவிடை செய்வதற்காகவே படைக்கப்பட்டவர்களென முடிவு செய்தது. 1805-ம் ஆண்டு வரை ஆங்கிலேயரின் சட்டத்தில் ஒரு கணவன் தனது மனைவியை விற்பது கூடுமென்றே இருந்துள்ளது. மனைவியின் விலை ஆறு பெனி (அரை ஷிலிங்) என நிர்ணயமும் செய்யப்பட்டது.
இஸ்லாத்திற்கு முன்பு வரை அரேபியர்களிடத்தில் பெண்கள் இழிந்த பிறவிகளாக இருந்தனர். அவளுக்கு சொத்துரிமை கிடையாது. அவர்களை ஒரு பொருட்டாகக் கருதப்பட மாட்டாது. அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. மட்டுமல்லாமல் அவர்களில் பெரும்பாலோர் தம் பெண்மக்களை உயிருடன் புதைப்பவர்களாக இருந்திருக்கின்றனர்.
இவ்வனைத்து அநியாயங்களைப் பெண்களை விட்டும் நீக்கவும் நிச்சயமாக ஆண்களும் பெண்களும் சமமானவர்கள்தான் என விளக்கவும்தான் இஸ்லாம் வந்தது. எனவே ஆண்களுக்கு உரிமைகளிருப்பது போல் பெண்களுக்கும் உரிமைகளிருக்கின்றன.
அல்லாஹ் கூறுகிறான்: மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், பெண்ணிலிருந்தே படைத்தோம். பின்னர் நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு உங்களைப் பல கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் எவர் மிக பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ அவர் தாம் அல்லாஹ்விடத்தில் மிக்க கண்ணிய மானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், யாவற்றையும் சூழ்ந்தறிபவன். (49:13)ஆண் அல்லது பெண் ஈமான் கொண்ட நிலையில் நற்கருமங்கள் செய்தால் அவர்கள் சுவனத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அநீதமிழைக்கப்பட மாட்டார்கள்.(4:124)மனிதன் தன் பெற் றோருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென நாம் அறிவுறுத்தியுள்ளோம்.(46:15)நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஃமின்களில் பூரண ஈமானுடையவர்கள் அவர்களில் அழகிய குணமுடையவர்களே. தனது மனைவியிடத்தில் சிறந்தவரே உங்களில் சிறந்தவர். நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து மனிதர்களில் நான் அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டியவர் யார்? எனக் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் உனது தாய் எனக் கூறினார்கள். பின்பு யார்? எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் உ னது தாய் எனக் கூறினார்கள். பின்பு யார்? எனக் கேட்டார். உனது தாய் என்றே கூறினார்கள். பின்பு யார்? எனக் கேட்டார். உனது தந்தை எனக்; கூறினார்கள்.(புகாரி,முஸ்லிம்)
இது பெண்கள் பற்றிய இஸ்லாத்தின் சுருக்கமான கண்ணோட்டமாகும்.
பெண்களுக்குரிய பொதுவான உரிமைகள்
நிச்சயமாக பெண்கள் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய பொதுவான உரிமைகள் உ ள்ளன. அவற்றை அவள் விரும்பும்போது பூரணமாகச் செய்து கொள்வதைச் சமூகம் அங்கீகரிக்கவும் செய்கின்றது. அவ்வுரிமைகள் வருமாறு:
1- சொந்தமாக்கிக் கொள்ளல்: வீடுகள், விவசாய நிலங்கள், தோட்டங்கள், வெள்ளி, தங்கம், கால்நடை வகைகள் இவற்றில் விரும்பியவற்றை ஒரு பெண் தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளலாம். அப்பெண் தாயாக அல்லது மகளாக அல்லது சகோதரியாக இருப்பி னும் சரி.
2- திருமணம் செய்வது, கணவனைத் தேர்வு செய்வது, தனக்கு விருப்பமில்லாதவனை ஏற்கமறுப்பது, தனக்கு இடையூறு ஏற்பட்டால் திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொள் வது போன்றவற்றிலும் அவள் உரிமை பெறுகிறாள். இவை பெண்களுக்குரிய உரிமைகள் என்பதில் ஏகமனதான முடிவாகும்.
3- தனக்கு அவசியமானவற்றைக் கற்றுக் கொள்தல்: உதாரணமாக அல்லாஹ்வை அறிவது, அவனுக்குச் செய்ய வேண்டிய வணக்கங்களையும் அதை நிறைவேற்றும் முறையையும் அறிவது. இன்னும் தன்னுடைய கடமைகளையும் தனக்குத் தேவையான ஒழுக்கங்களையும் தான் கடைபிடிக்க வேண்டிய சிறந்த பண்பாடுகளையும் அறிவது. ஏனெனில் வண க்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதை நீ அறிந் துகொள்.(47:19) என அல்லாஹ்வும், கல்வியைத் தேடுவது ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும்(இப்னுமாஜா) என நபி(ஸல்) அவர்களும் பொதுவாகவே சொல்லியிருப்பதால்.
4- செலவு செய்தல்: தனது பொருளில் தான் நாடியதைத் தர்மம் செய்து கொள்வதற்கும், தனக்கும் தனது கணவன், பிள்ளைகள், தாய், தந்தையர்கள் இவர்களில் தான் விரும்பியவர்களுக்கு வீண், விரயமில்லாத அளவுக்கு செலவு செய்து கொள்வதற்கும் உரிமை பெறுகிறாள். இவ்விஷயத்தில் இவர்களும் ஆண்களைப் போன்று தான்.
5- விருப்பு, வெறுப்புக் கொள்தல்: அவள் நல்ல பெண்களை விரும்பவும், அவர்களைச் சந்திக்கவும், அன்பளிப்புகள் வழங்கவும் செய்யலாம். இன்னும் அவர்களுக்குத் தபால்கள் அனுப்பி அவர்களின் நிலைமைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். கஷ்டகாலங்களில் அவர்களுக்கு ஆறுதலும் சொல்லிக் கொள்ளலாம். அல்லாஹ்விற்காக கெட்ட பெண்களை வெறுத்து, அவர்களை விட்டும் ஒதுங்கி விடுவதும் கூடும்.
6- மரணசாசனம்: அவளின் சொத்தில் மூன்றில் ஒன்றை அவளது ஜீவிதகாலத்தில் மரண சாசனம் எழுதிக்; கொள்வதற்கும் அதை எவ்வித ஆட்சேபணை செய்யாமல் செயல்படுத்து வதும் அவளது உரிமைகளிலுள்ளதாகும். ஏனெனில் மரணசாசனம் எழுதுவதென்பது பொதுவான மனித உரிமைகளைச் சார்ந்ததாகும். எனவே இது ஆண்களுக்கிருப்பது போன்று பெண்களுக்குமிருக்கிறது. ஏனெனில் அல்லாஹ்விடம் நன்மையைப் பெறுவதை விட்டு யாரும் யாரையும் தடுக்க முடியாது. என்றாலும் மரணசாசனம் மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமாகாமலிருப்பது நிபந்தனையாகும். இதில் ஆண்களும் பெண்களும் சமமே.
7- பட்டாடை, தங்கம் அணிதல்: பட்டையும், தங்கத்தையும் பெண்கள் அணிந்து கொள்வது கூடும். இவ்விரண்டும் ஆண்களுக்கு ஹராமாகும்.
8- அலங்கரித்துக் கொள்ளல்: தனது கணவனுக்காக தன்னை அலங்கரித்துக் கொள்ள உரிமை பெறுகிறாள். எனவே அவள் சுர்மா இட்டுக்கொள்ளவும் விரும்பினால் இரு கன்னங்களிலும் உதடுகளிலும் சிகப்புச்சாயம் வைத்துக் கொள்ளவும் செய்யலாம். மிக அழகிய அணிகலன்கள் அணிந்து கொள்ளலாம். எனினும் முஸ்லிமல்லாத மற்றும் தவறான நடத்தையுள்ள பெண்களுக்கே உரிய ஆடைகளை அணியக்கூடாது. இவற்றை அவள் அணியக் கூடாது என்பது சந்தேகம் தவறுகளிலிருந்து தூரமாகுவதற்காகவே.
9- உண்பது, குடிப்பது: நல்ல, சுவையான பானங்களை பருகவும் அதுபோன்ற உணவுகளை உண்ணவும் அவளுக்கு உரிமையுண்டு. உண்பதிலும் குடிப்பதிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் எந்தப் பாகுபாடுமில்லை. இவ்விரண்டில் ஆண்களுக்கு அனுமதி க்கப்பட்டுள்ள அனைத்தும் பெண்களுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகிற ன்: உண்ணுங்கள் பருகுங்கள் ஆனால் வீண்விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக வீண்விர யம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை (7:31) இங்கு இருபாலாரையும் நோக்கியே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கணவன் மீது மனைவிக்குரிய கடமைகள்
ஒரு பெண்ணுக்கு அவளது கணவன் செய்ய வேண்டிய சில குறிப்பிட்ட கடமைகளிருக் கின்றன. இக்கடமைகள் தனது கணவனுக்கு அவள் செய்ய வேண்டிய சில குறிப்பிட்ட கட மைகளுக்குப் பகரமாகிவிடுகின்றன.
அவை அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாற்றமில்லாக் காரியங்களில் கணவனு க்கு கட்டுப்பட்டு நடப்பது, அவன் உண்பதற்கும் பருகுவதற்கும் தயார் செய்து கொடுப்ப து, அவனது படுக்கையைச் சீராக வைத்துக்கொள்வது, அவனது குழந்தைகளுக்குப் பா லூட்டுவது, அவர்களை வளர்ப்பது, அவனது பொருளையும் மானத்தையும் பாதுகாப்பது, தனது கற்பைப் பாதுகாத்துக் கொள்வது, அனுமதிக்கப்பட்ட வகைகளில் அவனுக்காக தன்னை அலங்கரித்துக் கொள்வது, அழகுபடுத்திக் கொள்வது போன்றவைகளாகும். இவை ஒரு பெண் அவளது கணவனுக்குச் செய்ய வேண்டிய கட்டாயக் கடமைகளிலுள்ள வையாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: மனைவியர் மீது கணவர்களுக்கு உள்ள உரிமைகளைப் போல வே முறைப்படி கணவர்கள் மீது மனைவியருக்கும் உரிமையுண்டு (2:228)
முஃமினான பெண் இவற்றை அறிந்து எவ்வித நாணமும் பயமுமின்றி இவ்வுரிமைகளைக் கேட்டுப் பெறவேண்டும் என்பதற்காக இவற்றைக் கூறுகிறோம். இவைகளில் சிலவற்றை அவள் மன்னித்துவிட்டாலான்றி கணவன் இவைகளை முழுமையாக மனைவிக்கு வழங்குவது கடமை. அவள் விட்டுக் கொடுப்பதும் கூடும்.
1- அவன் தனது வசதி, ஏழ்மை நிலையைக் கவனித்து அவளுக்குச் செலவுக்குக் கொடுக்க வேண்டும். ஆடை, உணவு, குடிப்பு, மருத்துவம், தங்குமிடம் இவைகளுக்கான செலவை அவள் பெற்றுக் கொள்வாள்.
2- ஆண், பெண்ணை நிர்வகிக்க வேண்டியவனாகயிருப்பதால் அவளின் மானம், மரியாதை, உடல், பொருள், மார்க்கம் இவை அனைத்திலும் அவளைப் பாதுகாக்க வேண்டும். ஒரு பொருளைப் பாதுகாத்துக் கவனித்து வருவதென்பது அதனை நிர்வகித்து வருபவ னின் பொறுப்பிலுள்ளதாகும்.
3- அவளின் மார்க்க விஷயங்களில் அவசியமானவற்றை அவளுக்குக் கற்றுக் கொடுக்கவேண்டும். அவனுக்கு இயலாவிட்டால் அல்லாஹ்வின் இல்லங்களிலும், கல்விக்கூடங்களிலும் நடைபெறுகின்ற பெண்களுக்குரிய மார்க்கக் கூட்டங்களுக்குச் சென்றுவர அனுமதியளிக்க வேண்டும். ஆனால் அவ்விடங்கள் குழப்பத்தை விட்டும் பாதுகாப்பானதாக இருப்பதோடு அவனுக்கோ அவளுக்கோ அதில் இடையூறு ஏற்படாமலிருப்பதும் அவசியமாகும்.
4- அவளிடம் அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: அவர்களோடு நல்லமுறையில் வாழ்க்கை நடத்துங்கள்.(4:119)
நல்ல முறையில் வாழ்க்கை நடத்துதல் எனபதில் உடலுறவில் அவளுக்குரிய உரிமை யைக் குறைத்திடாமலிருப்பது, திட்டுவது, இழிவுபடுத்துவது, கேவலப்படுத்துவது போன்ற வற்றால் அவளுக்கு தொல்லை கொடுக்காமலிருப்பது அகியவை அடங்கும். இன்னும் அவ ள் தனது உறவினர்களைச் சந்தித்து வருவதால் குழப்பம் ஏற்படுமென அவன் பயப்படாத போது அவளைத் தடுக்காமலிருப்பதும், அவளுக்கு முடியாத வேலைகளைச் செய்யும்படி சிரமம் கொடுக்காமலிருப்பதும், சொல்லிலும், செயலிலும் அவளுடன் அழகியமுறையில் நட ந்து கொள்வதும் அதில் அடங்கும்.
ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: தம் மனைவியரிடத்தில் சிறந்தவரே உங்களில் சிறந்தவர். உங்களில் நான் எனது மனைவியரிடத்தில் சிறந்தவராக இருக்கின்றேன்.(திர்மிதி) மேலும் கூறினார்கள்: பெண்களைக் கண்ணியமாக நடத்துபவர்களே நல்லவ ர்கள். அவர்களை இழிவாக நடத்துபவர்கள் தாம் கெட்டவர்கள்.
இஸ்லாம்ஹவுஸ்.காம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக