இந்த காணொளியில் ஜாகிர் நாயக்கிடம் கேள்வி கேட்கும் ஹிந்து பெண் படிக்காத பாமரர் அல்ல. துபாய் இந்திய தூதரகத்தில் பணியாற்றக் கூடிய மெத்த படித்த பெண். அந்த பெண் வைக்கும் கேள்விகளும் மிக சாதுர்யமானவை. அவர் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் அழகிய முறையில் பதில் அளிக்கிறார் ஜாகிர் நாயக். தெளிவு கிடைத்தது. அந்த கூட்டததிலேயே இந்த பெண் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொள்கிறார். மேலும் தனக்கு இறைவனை இஸ்லாமிய முறையில் எவ்வாறு தொழுவது என்று தெரியாது என்றும் அதற்கு யாரையாவது ஏற்பாடு செய்து தர முடியுமா? என்றும் கேட்டார். அந்த கூட்டத்திலேயே அதற்கும் ஒரு பெண்மணியை அந்த அரங்கம் ஏற்பாடு செய்து கொடுத்தது.
பலரது விமரிசனம் ‘இஸ்லாமியர்கள் பணம் கொடுத்து மத மாற்றம் செய்கின்றனர்’ என்பது. ஆனால் இங்கு அந்த பெண்ணுக்கு பணம், பதவி ஒரு பொருட்டே அல்ல. இறைவனின் தேடுதலால் அலை பாயும் அவரது மனதுக்கு ஜாகிர் நாயக்கின் இந்த நிகழ்ச்சி ஒரு வடிகாலாக அமைந்துள்ளது. உடன் சத்திய இஸ்லாத்தை தேர்ந்தெடுக்கிறார். அதிகமான மன மாற்றங்கள் ஏற்படுவது இவ்வாறே.
மொகலாயர்கள் காலத்தில் வேண்டுமானால் பணத்துக்காகவும், பதவிக்காகவும் ஒரு சிலர் மன மாற்றம் அடைந்து இஸ்லாத்தை தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் இன்றைய காலத்தில் நிலைமை அவ்வாறு இல்லை. எந்த மாநிலத்தை எடுத்துக் கொண்டாலும் ஆள்வோர்களால் இஸ்லாமியர்கள் மிரட்டப்படுகின்றனர். பல இடங்களில் சொத்துக்கள் திட்டமிட்டு சூரையாடப்படுகின்றன. மோடி தலைமையில் நடந்த குஜராத் இனப் படுகொலைகளை இந்த உலகம் அவ்வளவு சுலபமாக மறந்து விடாது. காவல் துறை பெரும்பாலும் பெரும்பான்மை இனத்தவராக இருப்பதால் அங்கும் முஸ்லிம்களுக்கு நீதி கிடைப்பதில்லை. நீதி மன்றங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அப்பட்டமாக இஸ்லாமியருக்கு எதிராகவே செயல்படுகிறது.
தகவல். சுவனப்பிரியன்.&முத்துபேட்டை நியூஸ்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக