தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும்!
ஆட்சியாளர்கள் அஞ்சிக் கொள்ளட்டும்.
நீதி தேவன் மயக்கத்தில் தான் இருக்கின்றான் என நினைப்பவர்கள் புரிந்து கொள்ளட்டும்...
அபுதாஹீரை உங்களுக்கு தெரியுமா…? 14 ஆண்டுகாலமாக சிறையில் வாடும் இவரின் இழப்புகளை குறித்து பேச ஆரம்பித்தால் உங்களால் நிச்சயம் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது - வல்வை அகலினியன் அவர்கள் இன்று http://tamizl.comல் எழுதிய உணர்ச்சி பூர்வமான யதார்த்தம் ....
மதுரை துணை ஜெயிலர் ஜெயபிரகாஷ் கொலை வழக்கில் பொய்யாக புனையப்பட்ட நான்கு நபர்களில் ஒருவர்தான் இந்த அபுதாஹீர்… 27.03.1998ல் 18 வயதில் சிறையில் அடைக்கப்பட்ட அபுதாஹீர் அந்த வழக்கில் பொய்யாக சிக்கவைக்கப்பட்டார். 14 ஆண்டுகாலமாக சிறையில் வாடும் இவரின் இழப்புகளை குறித்து பேச ஆரம்பித்தால் உங்களால் நிச்சயம் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது..
ஆனாலும் பேசித்தான் ஆகவேண்டும்…
இவரின் 14 வருட சிறைவாழ்வில் தன் தாய், தந்தை இருவரையும் இழந்துவிட்டார். துயரம் அதோடு விட்டதா என்றால் SLE என்ற அறியவகை நோய் ஒன்று இவரை தாக்கி ஒவ்வொரு உடல் உருப்புக்களையும் செயல் இழக்க வைத்துக்கொண்டிருக்கிறது. SLE என்ற இந்த அரியவகை வைரஸ்ஸை முற்றிலுமாக ஒழிக்கமுடியாது சாவை தள்ளிப்போடவே முடியும் இந்த கிருமியினால் இவரது இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்துவிட்டது.
இதய நோய் பாதிப்பு மற்றும் பார்வை குறைபாடுகளுடன் தன் வாழ்நாளை எண்னிவரும் அபுதாஹீரை விடுதலை செய்ய சிறை சட்டங்களே வழி வகுத்தாலும் அவரை விடுதலை செய்யத்தான் அரசுக்கு மனம் இல்லை….
கற்றறிந்த மருத்துவர்கள் SLE என்ற இந்த அறியவகை நோய் குணப்படுத்த முடியாது என்று சான்றழித்த பின்பும் சிறைதுறை, காவல்துறை கூட்டு மனசாட்சி இவரை விடுதலை செய்ய மறுத்துவருகிறது.
கோவை சிறையில் மிகவும் மோசமான உடல்நிலையோடு இருந்த அபுதாஹீரை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்த சிறைநிர்வாகம் அவருக்கு போதிய மருத்துவ சிகிச்சைக்கான வசதிகள் கோவை அரசு மருத்துவமனையில் இல்லாத நிலையில் மருத்துவம் பார்க்க தன்னை விடுதலை செய்யவேண்டும் அல்லது குறைந்த பட்சம் பரோலில் விடவேண்டும் என்ற கோரிக்கை மருந்துக்கு கூட ஏற்கபடவில்லை. நீதிமன்றத்தில் பரோலுக்கு அனுகிய அபுதாஹீரின் வழக்கிற்கு சிறைதுறையும், காவல் துறையும் சரியான பதில் சொல்லாமல் இழுத்தடிப்பு வேலை செய்த காவல்,சிறை, உளவு துறை கூட்டு மனசாட்சிகள் பரோலுக்கு அனுமதிக்க கூடாது என்று கடுமையாக எதிர்ப்புதெரிவித்தனர்.

இவரின் விடுதலைக்கான மனு உயர்நீதிமன்றத்தில் நிலைவையில் உள்ளது. இடைகால உத்திரவாக கோவை தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கவேண்டும் என்றும் உரிய சிகிச்சைகள் வழங்கவேண்டும் என்றும் உத்திரவிடப்பட்டுள்ளது. உயர்நீதி மன்றத்தின் ஆனைப்படி இரண்டு கிட்னியும் செயல் இழந்த அபுதாஹீருக்கு வாரத்தில் இரண்டு முறை டயாலிஸஸ் என்கிற ரத்த சுத்தகரிப்பு சிகிச்சை நடந்து வருகிறது.
சகோதரர்களே நாம் அனைவரும் தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும் என்று அறிவுரை சொல்லும் மருத்துவர்கள் அபுதாஹீருக்கு சொல்லும் அறிவுரை என்னவென்றால் அரை லிட்டர் தண்ணீர்தான் குடிக்கவேண்டும் என்பது ஆம் சகோதரர்களே அந்த அரை லிட்டர் தண்ணீர் கூட பாதி தண்ணீர் சிறு நீரகத்திலும் பாதி தண்ணீர் உடலிலும் கலந்து உடல் முழுவதும் வீங்கிய நிலையில் இருக்கும் அந்த சகோதரனை பார்க்கும் போது கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.
கைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிறு மோட்டார் எந்த நேரமும் இயங்கிக்கொண்டே இருக்கிறது அதன் இயக்கம்தான் அபுதாஹீரின் இதயத்தையும், சிறுநீரகத்தையும் இயக்கிக்கொண்டிருக்கிறது.
சிறைசாலையில் 14 ஆண்டுகாலமாக இருக்கும் அபுதாஹீர் நல்ல நடத்தையும் எவ்வித சட்ட மீறல்களுக்கும் ஆட்படாத சிறைவாசியாகவே இருந்து வருகிறார். சிறையில் MA. பட்டப்படிப்பும், கணிணி சான்றிதழ். மற்றும் பல தொழிற்படிப்புகளில் சான்றிதழ் பெற்று அனைவரின் பாராட்டுகளை பெற்ற சிறைவாசியாகவே இருந்து வரும் அபுதாஹீரின் விடுதலைக்கு” அவரின் மரணம்தான் விடுதலையை” பெற்றுதருமா….? என்ற கேள்விதான் நம் முன் நிற்கிறது. தனது இறுதி வாழ்நாளிலாவது சுதந்திரமாக கழிக்க வேண்டும் என்ற நியாமான ஒரு கோரிக்கையை இந்த அரசு செவி சாய்க்குமா…?தன் துயரத்தை கனிவாக கவனிக்க, தன் தலையை கோதி ஆறுதல் படுத்த அவனுக்கு தாய் மடியும் கொடுத்துவைக்கவில்லை….
நாம் என்ன செய்ய போகிறோம் சகோதரர்களே…?
நன்றி – வல்வை அகலினியன்,http://tamizl.com/?p=57514
எனது கருத்து ...
அபூ தாஹிரைப் போன்று கடும் நோய் வாய்ப்பட்டு , சிகிட்சைக்காக - குடும்ப உறவுகளுக்காக ஏங்கும் குற்றம் நிரூபணமாக இல்லாத நிலையில் விசாரணைக் கைதிகளாகவே ஆண்டுக்க் அகன்காக இருந்து வரும் அப்பாவி முஸ்லிம் கைதிகள் விஷயத்தில் அரசு காட்டும் பாரபட்சங்கள் மனிதாபிமானமற்றது , கொடூரமானது ...
இஸ்லாமிய சமூகம் இந்த அப்பாவிகளுக்காக ஒருங்கிணைந்து குரல் கொடுக்குமா ?.. யா அல்லாஹ் இவர்களை நீயே காப்பாற்ற வேண்டும் என மனமுருகி துஆ செய்கிறேன் ...
மிகுந்த மன வருத்தங்களுடன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக