கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இ.யூ. முஸ்லிம் லீக் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை

சென்னை, டிச. 14- பாரதீய ஜனதா கட்சியை முஸ்லிம் சமூகத்தில் எவரும் ஆதரிப்பார்கள் என்பது பகல் கனவே என குறிப்பிட்டுள்ள பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை இது போன்ற விஷமத்தனமான செயல் களுக்கு பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இருந்து ஒரு நபர் பிரிந்து சென்று புதிய கட்சியை தொடங் கியுள்ளதாகவும், அது நாடாளு மன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி கூட்டணியை ஆதரிக்க போவதாகவும் சில நாளிதழ் களில் செய்திகள் வெளிவந் துள்ளன. 

அச்செய்திகளில் குறிப்பிடப் பட்டுள்ளவாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீகிலிருந்து எவரும் பிரிந்து செல்லவும் இல்லை-சதக்கத்துல்லா என்ற நபர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை சார்ந்தவரும் அல்ல. இந்த தகவல் அவரை பா.ஜ.க அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ள காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் அவர்களிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலை மையகத்திலிருந்து தெரிவிக் கப்பட்டுள்ளது.

""""சதாம் என்.கே.எம்.சதக் கத்துல்லா, நிறுவனத் தலைவர், அகில இந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம், 66 மரைக்காயர் லெப்பை தெரு, மண்ணடி சென்னை -1 என முகவரியிட்டு 9677843231 என தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டு லெட்டர் பேட் தயாரித்து பா.ஜ.க.,வுக்கு ஆதரவுக் கடிதம் அளிக்கப் பட்டிருப்பதாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பொறுத்த வரை மாநில மாவட்ட நிர்வாகிகளில் என்.கே. எம்.சதக்கத்துல்லா என்ற பெயரில் ஒருவரும் இல்லை. எங்களின் துணை அமைப்பு களான முஸ்லிம் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை, சுதந்திர தொழிலாளர் யூனியன் போன்றவற்றிலும் இந்த பெயரில் எந்த நிர்வாகியும் இல்லை. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை பயன்படுத்தியது உண்மையாக இருக்குமே யானால் அது பாரதீய ஜனதா கட்சி தலைமையை ஏமாற்று வதற்காக செய்யப்பட்ட திட்ட மிட்ட மோசடி செயலேயாகும்.

மதசார்பற்ற, சமூக நீதியை நிலைநாட்டும் ஜனநாய சக்திகளே நாட்டை ஆளும் வகையில் நாடாளுமன்ற தேர்தலில் அவர்களை ஒருங்கி ணைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளது.

ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம் சமுதாயமும் இத்தேர் தலில் ஒருமுக முடிவெடுக்க வலியுறுத்தும் வகையில் எதிர் வரும் 28 - ம் தேதி திருச்சியில் மாபெரும் மாநாட்டையும், இளம்பிறை எழுச்சி பேரணி யையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்துகிறது. அதில் பள்ளிவாசலை மைய மாகக் கொண்ட 12 ஆயிரம் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள், உலமா பெருமக்கள் பல்லாயிரக் கணக்கில் கலந்து கொள்கின் றனர்.

இந்நிலையில் பா.ஜ.க.,விற்கு முஸ்லிம் சமுதாயம் ஆதரவ ளிக்கும் என்று வெளிவரும் செய்தி பகல் கனவேயாகும். 

இதுபோன்ற காரியங்க ளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை மோச டியாக பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் படும்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: