கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

மீனாட்சி புர முஸ்லிம்களின் வாழ்க்கை இன்று எப்படி?- பிபிசியின் தமிழோசை..!

மீனாட்சிபுரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு ரஹ்மத் நகராக மாறியது நம் அனைவருக்கும் தெரியும். 1000க்கு மேற்பட்ட குடும்பங்கள் இஸ்லாத்தை தழுவி இந்தியாவையும் முழு உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த ரஹ்மத் நகரில் பிபிசியின் தமிழோசைப் பிரிவு ஒரு நேர்காணலை சமீபத்தில் நடத்தியது. இதனை தயாரித்தவர் த.ந.கோபாலன். இனி பிபிசி சொல்லும் செய்தியை பார்ப்போம்.


'இறைவனே என் பாவங்களை மன்னிப்பாயாக! அருட்கொடையின் தலைவாசலை எங்களுக்காக திறந்து வைப்பாயாக'

மீனாட்சிபுரத்தில் உயரமாக நிமிர்ந்து நிற்கும் பள்ளி வாசலின் முன் பக்கம் எழுதப் பட்ட வாசகமே இது. தேவர் இனத்தவரின் சொல்ல முடியாத அடக்கு முறையினால் வேறு வழி இன்றி இஸ்லாத்தை நோக்கி இந்த மக்கள் சென்றனர். தற்போது இந்த மக்களின் வாழ்வில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்று கண்டு வர எங்களது குழு மீனாட்சிபுரத்துக்கு சென்றது.

'மதம் மாறியதைப் பற்றி உங்களின் கருத்து என்ன?'

'நீங்க சொல்லித்தான் நாங்க மதம் மாறின ஞாபகமே வருது. அந்த அளவு இஸ்லாத்தில் தற்போது ஐக்கியமாகி உள்ளோம். எனது பிள்ளைகள் இந்த கேள்விக்கே இடமில்லாமல் இஸ்லாமிய சமூகத்தில் இரண்டற கலந்து விட்டனர். நாயக்கர் சாதி, ஆசாரி போன்ற சாதியினர் கூட எங்களை மாமன், மச்சான் என்று உரிமையோடு தற்போது கூப்பிடுகிறார்கள். மதம் மாறுவதற்கு முன்பு இந்த நிலை இல்லை.'.

'மதம் மாறியதாலே சமூக அந்தஸ்து உங்களுக்கு கிடைச்சிடுச்சா?'

'நிறையவே நாங்கள் மாற்றங்களை உணருகிறோம். முன்பெல்லாம் 8 வயசு 10 வயசு பசங்களெல்லாம் 'டேய் சுப்பையா! டேய் மாடா! இங்க வாடா' என்று தான் ஏளனமாக கூப்பிட்டனர். இன்று அந்த நிலை முற்றாக மாறி எங்களை மரியாதையாக நடத்துகின்றனர்.'

'வெளியூர்களில் உங்களின் நிலைமை தற்போது என்ன?'

'எந்த பிரச்னையும் இல்லாமல் தற்போது இருக்கிறோம். உள்ளூரில்தான் சிலருக்கு நாங்கள் தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து மதம் மாறியதாக தெரியும். வெளியூர்களில் எங்களின் பெயரை கேட்டவுடனேயே தானாக சமூக அந்தஸ்து கிடைத்து விடுகிறது. எந்த ஹோட்டலுக்கு போனாலும் சரி சமமாக உட்கார்ந்து சாப்பிடுகிறோம். யாரும் எங்களை ஏளனமாக பார்ப்பதில்லை. பிரச்னையும் கொடுப்பதில்லை. முருகேஷனை 'முருகேஷா இங்க வாடா' என்று கூப்பிடுபவர்கள் மதம் மாறிய அன்வர் அலியை 'வாங்க அன்வர் அலி' என்று கூப்பிடுகின்றனர். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?'

நாம் பல இடங்களில் பார்த்த வகையில் இஸ்லாத்துக்கு மாறியதால் இந்த மக்களின் வாழ்வில் சமூக அந்தஸ்து கூடியிருப்பதாகவே தெரிகிறது. ஆனால் ஒரு பிரச்னை இன்றும் உள்ளது. அதாவது பூர்வீக இஸ்லாமியர்கள் இவர்களை மதிப்பதில்லை எனவும் இவர்களிடம் பெண் கொடுத்து பெண் எடுப்பதில்லை எனவும் ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இது சம்பந்தமாக 'கருப்பாயி என்கிற நூர்ஜஹான்' என்ற கதை முன்பு வெளி வந்து பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதைப் பற்றி அந்த கிராம மக்களிடம் கேட்டோம்.

'அந்த கதையை எந்த ஊரை மையமாக வைத்து அவர் எழுதினாரோ தெரியவில்லை. ஆனால் எங்கள் ஊரில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை. 20 க்கு மேற்பட்ட பெண்கள் இங்கிருந்து அங்கு போயிருக்கிறார்கள். அதே எண்ணிக்கையில் அங்கிருந்து இங்கு வந்திருக்கிறார்கள். பொருளாதார ஏற்றத் தாழ்வுதான் முக்கியமாக பார்க்கப்படுகிறது. 

ஏழைகள் ஏழை வீட்டைப் பார்த்து சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்கள். வசதியுள்ளவர்கள் வசதியான இடததில் சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்கள். ஒரு சில பூர்வீக முஸ்லிம்கள் எங்களிடம் சம்பந்தம் பண்ண தயங்குவது பொருளாதார ஏற்ற தாழ்வுகளை வைத்தே. நாங்களும் அவர்களைப் போல் பொருளாதாரத்தில் நல்ல நிலைக்கு வந்தால் தாராளமாக பெண் கொடுத்து பெண் எடுப்பார்கள். சில இடங்களில் நடந்தும் இருக்கிறது.

http://www.maattru.com/2011/12/blog-post_6584.html


'உங்களின் கிராமத்தில் இன்னும் சிலர் இந்து மதத்திலேயே உள்ளனரே! அவர்கள் ஏன் மாறவில்லை'

'அதற்கு நாங்கதான் காரணம் என்று சொல்லலாம். மார்க்கத்தை இங்குள்ளவர்கள் சரியாக விளங்காமல் பொடும் போக்காக உள்ளனர். மேலும் இங்கு வந்தால் சில சட்டதிட்டங்கள் கட்டுப் பாடுகள் (தொழுகை, மது உண்ணாமை, வட்டி வாங்காமை, நோன்பு) உள்ளதும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்க தயங்குவதற்கான காரணம். இறைவன் நாடினால் அவர்களும் வருங்காலத்தில் எங்கள் மார்க்கத்தில் இணைவர்'

சில ஆதி திராவிட இந்துக்களையும் சந்தித்தோம். 

முருகேஷன் என்ற தலித் இளைஞர்:

'மதம் மாறினா இட ஒதுக்கீடு கிடைக்காதுல்ல...அதான் நான் மாறல்ல. ஆனால் சமூகத்துல இன்னமும் 'வாடா முருகேஷா' என்றுதான் இன்றும் அழைக்கப்படுகிறேன். 'வா முருகேஷா' என்று கூட கூப்பிட சாதி இந்துக்களுக்கு நா எழ மாட்டேங்குது."

தேன் மொத்தை ஊராட்சி மன்ற தலைவி. இவர் இன்னும் இந்து மதத்தில்தான் உள்ளார்.

'நான் பஞ்சாயத்து போர்டு தலைவிங்கறதால ஏதோ மதிப்பு கொடுக்கறாங்க. ஆனால் மொத்தத்தில எங்களை சமூகத்துல இன்னும் கீழ்சாதியாத்தான் பார்க்கிறார்கள்'

மற்றொரு தலித் இளைஞரை சந்தித்தோம்.

'முஸ்லிமாக மதம் மாறினவங்களுக்கும் உங்களுக்கும ஏதும் பிரச்னை வந்துள்ளதா?'

'இல்லை. நாங்க சாமி கும்புடறப்போ அவங்க தொந்தரவு பண்றதில்லை. அதே போல் அவுங்க தொழுகை பண்ணும் போது எந்த இடைஞ்சலும் நாங்க கொடுக்கறது இல்ல.

எங்கள் குழு ஆராய்ந்த வகையில் தலித்கள் இஸ்லாமியராக மாறியதற்கு பிறகு சமூக அந்தஸ்து அவர்களுக்கு கிடைத்துள்ளதாகவே அறிகிறோம்.

நன்றி பிபிசி தமிழோசை.

இதில் முஸலிம்களுக்கு ஒரு பாடம் உள்ளது. வரதட்சணை என்ற ஒரு பெரும் கேட்டை மற்ற மதத்தவரிடமிருந்து கடன் வாங்கியதால் இன்று அந்த மக்களின் இஸ்லாமிய பெண்கள் திருமணம் முடிப்பதில் சிரமம் உள்ளதை காண்கிறோம். அந்த மக்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு இது ஒரு முட்டுக் கட்டையாக உள்ளதைப் பார்க்கிறோம். அதே போல் புதிதாக இணைந்த அந்த மக்களை அன்போடு அரவணைக்க வேண்டியது நமது கடமை. திருமண உறவுகளையும் அவர்களோடு வைத்துக் கொள்ள முன்னுரிமை கொடுக்க வேண்டும். 

ஒரு நான்கைந்து தலைமுறைகளுக்கு முன்னால் நமது முன்னோர்களும் ஒரு ராமசாமியாகவோ ஒரு கந்தசாமியாகவோத்தான் இருந்திருப்பார்கள். எனவே நாங்கள் பூர்வீக முஸ்லிம்கள் என்று வெற்று பெருமை பேசிக் கொண்டு இஸ்லாத்தையும் விளங்காமல் காலத்தை ஓட்டாமல் அந்த மக்களை நம்மோடு மேலும் இணைக்க இஸ்லாமியர்கள் முயற்சிக்க வேண்டும்.

வாஜ்பாய் போன்றோர் அந்த மக்களுக்கு ஆளுக்கு ஒரு இலட்சம் ரூபாய் தருவதாக ஆசை காட்டினர். இந்திய அரசின் விசாரணை கமிசன், தமிழக அமைச்சர் என பலர் பேசியும் எடுத்தமுடிவில் மாறாமலே இருந்தனர் மக்கள். மீனாட்சிபுரத்தை முன்மாதிரியாக எடுத்து மேலும் பல ஊர்களில், பகுதிகளில் மக்கள் பார்ப்பனீய மதத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள் என்ற நிலை ஏற்பட்டது. இந்த அளவு தங்கள் முடிவில் உறுதியாக இருந்த அந்த மக்களை நாம் இன்னும் அதிகமதிகம் அன்பு காட்டி அவர்களின் காயங்களை போக்க முயற்சிக்க வேண்டும்.

குடும்பத்தோடு அந்த ஊர்களுக்கு சென்று அந்த மக்களோடு அன்யோன்யமாக பழக வேண்டும். அந்த மக்களையும் நம் ஊர்களுக்கு விருந்தினர்களாக வரவழைத்து நமது அன்பைக் காட்ட வேண்டும். செல்வந்தர்கள் அந்த மக்களின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்று அந்த சமூகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முனைய வேண்டும். 

திருமணம் ஆகாமல் உள்ள அந்த இஸ்லாமிய புதிய சகோதரிகளை நமது சொந்தங்களாக ஆக்க முயற்சிக்க வேண்டும். அதற்கு இஸ்லாமிய செல்வந்தர்கள் கணக்கின்றி உதவி புரிய வேண்டும். நம் நாட்டில் உள்ள தீராத தலைவலியான தீண்டாமைக் கொடுமை அறவே ஒழிய வேண்டுமானால் இந்த மாற்றங்களை எல்லாம் முஸ்லிம்கள் தங்களின் கடமையாக நினைத்து செய்ல்பட வேண்டும். நமது நாட்டில் தீண்டாமை ஒழிவதற்கு வேறு மார்க்கமும் இல்லை.


பல வருடங்களுக்கு முன்பு மதம் மாறிய ஒருவர் அன்று கொடுத்த பேட்டி:

ஆசிரியர்: நீங்க படிச்சவங்கன்னு சொன்னீங்க; அதுவரைக்கும் படிச்சிருக்கீங்க?

உமர்செரீப்: பி.ஏ. வரை படிச்சிருக்கேன்.

ஆசிரியர்: எந்தக் காலேஜில்?

உமர்செரீப்: ஸ்ரீவைகுண்டம் காலேஜ்ல.

ஆசிரியர்: சரி, இவ்வளவு படிச்சிருக்கீங்க. உங்களுக்கு சலுகைகள்லாம் கிடைச்சிருக்குமே!

உமர்செரீப்: ஆமா கிடைச்சது.

ஆசிரியர்: உங்களுக்கு தாழ்த்தப்பட்டவங்க அப்படீங்கறதனாலதான் இந்த சலுகையெல்லாம் கிடைச்சது. அப்போ இந்தச் சலுகையெல்லாம் கிடைக்காதுன்னு தெரிஞ்சு தானே மாறுனீங்க?

உமர்செரீப்: ஆமா! தெரிஞ்சு தான் மாறுனோம். சலுகை கிடைக்காட்டிலும் பரவாயில்லை தாழ்த்தப்ப்ட்டவன் என்கிற முத்திரையில்லாம இருந்தால் போதும் என்று மாறினோம்.

இப்போது ஏன் இந்த முடிவு?

ஆசிரியர்: இதுக்கு முன்னால் இந்தக் கொடுமைகள்லாம் அனுபவிச்சுக்கிட்டு தானே இருந்தீங்க? இப்ப எப்படி திடீர்னு இந்த முடிவுக்கு வந்தீங்க?

உமர்: நாங்கள் கொடுமை அனுபவிச்சாலும் பரவாயில்லை எங்க வருங்கால சந்ததியாவது நல்லா இருக்கட்டுமென்றுதான் இந்த முடிவுக்கு வந்தோம். வருங்கால சந்ததி மற்றவர்களோடு சரி சமமாக மானத்தோட இருக்கணும்னுதான் இந்த முடிவுக்கு வந்தோம்.
http://adiraimujeeb.blogspot.com/
http://suvanappiriyan.blogspot.in/2012/12/blog-post_29.html

0 கருத்துகள்: