கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

முஹத்திஃதின் அல்லாமா அல் பக்காலி காலமானார்


100 வருடங்கள் உயிர் வாழ்ந்துள்ள முஹத்திஃதின் அல்லாமா அல் பக்காலி  காலமானார்கள்.
 
இந்த பெரியவர் இந்த மாதம் 7 ஆம் தேதி, திங்கள் கிழமை (07/01/2013) அன்று மரணித்தார்கள். இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிஹூன். ஆனால் யார் இவர்? ஒரு புகழ்ப் பெற்ற நடிகரோ, பாடகரோ, விளையாட்டு வீரரோ என்றால் நம் அனைவருக்கும் இந்நேரம் தெரிந்திருக்கும். இந்நேரம் எல்லா ஊடகங்களும் செய்தியை உலகுக்கு பறை சாற்றியிருக்கும்.

அப்படியானால் யார் இந்த பெரியவர்?

இவர் ஷேய்க் அல் அல்லாமா அல் பக்காலி, மிகப் பிரபலமான முஹத்திஃதின்.

(முஹத்திஃதின்கள் என்றால், அவர்கள் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எல்லா அறிவுப்புகள் அல்லது குறைந்த பட்சம் இருநூறு ஆயிரம் அறிவுப்புகளையாவது, அந்த ஹதீத் சம்பந்தமான அறிவிப்பாளர் போன்ற எல்லா விசயங்களையும் மனதில் கொண்டவர் என்று அர்த்தம்).

இவர்கள் மொரோக்கோ நாட்டைச் சார்ந்தவர்.

இந்த ஹதீத் கலை அறிஞரிடமிருந்து, 1000 க்கும் அதிகமான உலக அறிஞர்கள் ஹதீத் கலையைப் பயின்றுள்ளனர் அல்ஹம்துலில்லாஹ்.

100 வருடங்கள் உயிர் வாழ்ந்துள்ளார்கள் இந்த அறிஞர்.

இந்த சிறந்த மார்க்க அறிஞருக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோமாக.

எல்லாம் வல்ல அல்லாஹ் இவருடைய பாவங்களை மண்ணித்து, மறுமையில் உயர்ந்த இடத்தைக் கொடுப்பானாக. நபிமார்கள், சுகதாக்கள், உண்மையாளர்களுடன் ஜன்னத்தில் பிர்தௌசில் இருக்கும் வாய்ப்பையும் கொடுப்பானாக. ஆமீன்.
source:http://www.nidur.info

0 கருத்துகள்: