இந்நிலையில், தமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கத்தின் சார்பில், சென்னை மண்டல அமைப்பாளர் சுதர்சனம் மற்றும் காஞ்சி மாவட்டச் செயலர் வரதராஜன் ஆகியோர், புதிய மின் கட்டண விவரங்களை, கையடக்க அட்டைகளாக அச்சடித்து, மின் நுகர்வோருக்கு இலவசமாக வழங்குகின்றனர்.
கட்டண முறை: வீடுகளுக்கான மின் கட்டண கணக்கீட்டு முறை குறித்து, அதில் கூறியிருப்பதாவது:
நூறு யூனிட்கள் வரை பயன்படுத்துவோர், 20 ரூபாய் நிலைக் கட்டணத்துடன், யூனிட்டுக்கு 1 ரூபாய் வீதம், மின் கட்டணம் செலுத்த வேண்டும்.
101 யூனிட்டுகளுக்கு மேல், 200 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோர், 20 ரூபாய் நிலைக் கட்டணத்துடன், யூனிட்டுக்கு 1 ரூபாய் 50 பைசா வீதம், மின் கட்டணம் செலுத்த வேண்டும்.
இருநூறு யூனிட்டுகளுக்கு மேல், 500 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோர், 30 ரூபாய் நிலைக் கட்டணத்துடன், முதல் 200 யூனிட்டுகளுக்கு, யூனிட்டுக்கு 2 ரூபாய் வீதமும், 201வது யூனிட் முதல், ஒரு யூனிட்டுக்கு 3 ரூபாய் வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும்.
இதேபோல், 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோர், 40 ரூபாய் நிலைக் கட்டணத்துடன், முதல் 200 யூனிட்டுகளுக்கு, யூனிட்டுக்கு 3 ரூபாய் வீதமும், 201வது யூனிட் முதல், 500வது யூனிட் வரை, யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதமும், 501வது யூனிட் முதல் ஒரு யூனிட்டுக்கு, 5 ரூபாய் 75 பைசா என கணக்கிட்டு, மின் கட்டணம் செலுத்த வேண்டும்.
thanks:Dinamalar
0 கருத்துகள்:
கருத்துரையிடுக