கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியாகிறது


பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியாகிறதுசென்னை, மே 21- பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 22 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இவர்களில் 3 லட்சத்து 53 ஆயிரத்து 6 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 7 ஆயிரத்து 969 பேர் மாணவிகள். பள்ளி மாணவ-மாணவிகளை தவிர 61,319 பேர் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதினார்கள்
.

 தேர்வு மார்ச் மாதம் 30-ந் தேதி முடிவடைந்ததை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி உடனடியாக தொடங்கியது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 40 மையங்கள் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. இந்த பணியில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டனர். மதிப்பீட்டு பணி ஏப்ரல் 30-ந் தேதி முடிவடைந்தது. பின்னர் மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டது.

 இந்த ஆண்டு முதல் முதலாக மாணவ-மாணவிகளுக்கு போட்டோவுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, தேர்வுத்துறை மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கும் பணியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், பிளஸ்-2 தேர்வு முடிவு மே 22-ந் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

 அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில் முடிவுகள் வெளியிடப்படுகிறது என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். தேர்வு முடிவு அரசு மற்றும் தனியார் இணையதளங்களில் தெரிந்துகொள்ள அரசு தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

 முக்கிய இணையதள முகவரிகள் வருமாறு:-
 www.tnresults.nic.in
 www.dge1.nic.in
 www.dge2nic.in
 www.dge3.nic.in
 www.tn.pupliclinbraries.gov.in
 www.maalaimalar.com
http://www.maalaimalar.com/2012/05/21075324/plus-2-results-Tomorrow-releas.html

0 கருத்துகள்: