கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

குழப்பமின்றி மின் கட்டணம் கணக்கிடுவது எப்படி?


புதிய மின் கட்டண முறையில், வீட்டு இணைப்பு நுகர்வோர் குழப்பமின்றி கட்டணம் செலுத்துவதற்கான விவரங்களை, தமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. குழப்பம்:புதிய மின் கட்டண முறைகளை, தமிழக அரசு, ஏப்ரல் முதல் அமல்படுத்தியுள்ளது. இதில் வீடுகளுக்கான கட்டணம், பலவித அடுக்கு முறைகளை கொண்டுள்ளதால், எத்தனை யூனிட்டுகளுக்கு, எவ்வளவு கட்டணம் என, நுகர்வோர் குழப்பமடைகின்றனர்.

துபை ஈமான் அமைப்பின் உயர்கல்வி உதவித்திட்டம்


கோணுழாம்பள்ளம் T.C.முஸ்லிம்தெரு S.M.பக்கீர்முஹம்மது அவர்கள் மறைவு

                                   அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம் T.C.முஸ்லிம்தெரு S.M.பக்கீர்முஹம்மது அவர்கள் இன்று பிற்பகல் (28.05.2012)
1.30மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.ஜனாஸா நல்லடக்கம் நாளை(29.05.2012)  காலை10.00 மணியளவில் நடைபெறும்.


எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

கண்ணுக்கு தெரியாத வில்லன்கள்



நம்மைசுற்றி எல்லா இடங்களிலும் கோடிக்கணக்கான கண்ணுக்குத்தெரியாத நோய்கிருமிகள் நிறைந்திருக்கிறது. நம் நோயெதிர்ப்பு சக்தி வலுவிழக்கும் நேரம் பார்த்து இவை நம்மை தாக்கி நோயாளியாக்கக் காத்திருக்கின்றன. பொதுவாக எங்கெங்கே இந்த கிருமிகள் கூடாரம் போட்டு தங்கக் கூடும் என்று பார்ப்போம். அவற்றை இல்லாது ஒழிப்பதன் மூலம் உடல் நலத்தைக் காப்போம்.

புனித ஹஜ் பயணத்திற்கு திருச்சியி​லிருந்தும் விமானம் ஹஜ் மாநாட்டில் எம்.அப்துர் ரஹ்மான் எம்.பி கோரிக்கை

மானியம் என்ற பெயரால் புனித ஹஜ் பயணத்திற்கு வழங்கப் படும் விமான கட்டண சலுகை ஆயுளில் ஒரு முறை வழங்கப்பட வேண்டும் என்றும், புனித ஹஜ் பயணத்திற்கு திருச்சியிலிருந்து விமான இயக்கப்பட வேண்டும் என்றும் காயிதே மில்லத் பேரவை

பழமை காலம் பொற்காலமா?

                          (டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ,பீ.எஸ்(ஓ) 
 வயதானவர்களுடன் இளைஞர்கள் தனிமையில் உரையாடினால் அவர்களுடைய ஐம்பது வருட கால அனுபவங்கள் சொல்லி அவைகளெல்லாம் மிக சிறந்தவை என்றும் , இன்றைய நடப்பினை தரம் குறைந்தது என்றும் கதை கதையாக தன் பொக்கை வாயினை ஆசைப் போட்டுக் கொண்டு கூறக் கேட்கலாம். ஒருவருடைய மனைவிகூட தன் பிறந்த வீட்டில் குறைந்த வசதி இருந்தாலும் அன்டிய கணவர் வீட்டிற்கு வந்தாலும், தன் வீட்டுப் பெருமையினை வாய் நிறைந்து சொல்வதினைக் காணலாம். ஆனால் அக்கரை எல்லாம் பசுமையில்லை, இன்றைய உலகம் தான் இனிமை, பசுமை நிறைந்தது என்ற கருத்துடன் இந்தக் கட்டுரை வரையப் பட்டுள்ளது.

தமிழை வெறுக்க வேண்டாம்!


தமிழ்ச் சமூகம் மத்தியில் கடுமையான விரோதத்தை விதைத்து வளர்ந்து விட்டிருக்கிறது சமூகம். மரபு வழியாக 15இலட்சம் ஆண்டுகளாக முஸ்லிம்கள் வளர்க்கப்பட்டும் தமிழில் ஆளுமை பெற வில்லை. தமிழின் உச்சத்தை தொடவில்லை. தகுதியற்றவர்கள், துறை சாராதவர்கள் தமிழ் மேடையில் அமருகினறனர். அமர்த்தப் படுகின்றனர். விளைவு தமிழ்ச் சமுகத்தின் மிகப்பெரிய அவைகளுக்கு முஸ்லிம்கள் அழைக்கப்படுவதில்லை. அமர்த்தப்படுவதில்லை.

வெறும் மதிப்பெண்களா... விலைமதிப்பில்லா உயிரா : சோர்ந்து போகாதீர் பெற்றோரே... மாணவர்களே!


மதுரை:பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைத்தால் இரட்டிப்பு சந்தோஷம். மதிப்பெண் குறைந்து விட்டது அல்லது எதிர்பாராதவிதமாக தோல்வி ஏற்பட்டு விட்டது என்றால் மனம் தளரக்கூடாது. சோர்ந்துவிடக்கூடாது

பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியாகிறது


பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியாகிறதுசென்னை, மே 21- பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 22 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இவர்களில் 3 லட்சத்து 53 ஆயிரத்து 6 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 7 ஆயிரத்து 969 பேர் மாணவிகள். பள்ளி மாணவ-மாணவிகளை தவிர 61,319 பேர் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதினார்கள்

கோணுழாம்பள்ளம் பள்ளிவாசல்தெரு ஜக்கரியா அவர்களின் மகனார் ஜாகிர்உசேன் அவர்கள்மறைவு

                                அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம் பள்ளிவாசல்தெரு ஜக்கரியா அவர்களின் மகனார் ஜாகிர்உசேன் அவர்கள் இன்று இரவு (20.05.2012)தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

வாழ்த்துகிறோம்

                                  அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
 நாள்:20.05.2012(ஞாயிற்றுக்கிழமை)
 இடம்:கோணுழாம்பள்ளம்
 நீடூர் ஜனாப் மன்சூர்அலி- கோணுழாம்பள்ளம்M. ஜெஹபர்அலி இவர்களின் பேரனும் முஹம்மது ரிபாய்- பமிதா நஸ்ரின் இவர்களின் 
                                               அன்பு குழந்தை 
                                   முஹம்மது இப்ராஹிம்
                                       பெயர் சூட்டுவிழா
                          பல்லாண்டு வாழ வாழ்த்தும்
       முஹம்மது ஆசிக் -முஹம்மது பஹ்ரிஸ்
       சாகுல்ஹமீது -அஸ்கர் அலி
       சப்ரினா -முஹம்மது இஸாம்
இவர்களுடன் இணைந்து கோணுழாம்பள்ளம்post இணையதளம்

உலகமெங்கும் அதிகரித்து வரும் உடற்பருமன், உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை! – WHO


WHO highlight increases in hypertension, diabetes incidenceஉலகெங்கும் பக்கவாதம், இதய நோய் மற்றும் புற்று நோய் அபாயங்களை கூடுதலான மக்கள் எதிர்கொள்கிறார்கள் என்று சர்வதேச சுகாதார ஸ்தாபனம்(WHO) தெரிவித்துள்ளது.
 தனது 194 உறுப்பு நாடுகளிலிருந்து சுகாதாரம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் உலகெங்கும் அதிகரித்து வருவதாக கூறியுள்ளது.

தள்ளிப் போட்டது போதும்!

                                                    - இப்னு பஷீர் :
சில நேரங்களில் காலம் மிக மிக மெதுவாக நகர்வது போல நமக்குத் தோன்றும். நாம் பொறுமையிழந்து வேகமாக கடந்து செல்ல முயல்வோம். வேறு சில நேரங்களில் நன்மையான காரியம் ஒன்றை செய்ய நினைத்து, அதை செயல் படுத்துவதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்போம். ஏதோ ‘நாளை நமது கையில்’ என்று நிச்சயமாக நமக்குத் தெரிவது போல! கடந்த காலத்தை புரட்டிப் பார்த்தால் நாம் இது போல தள்ளிப் போட்டு

உழைக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது

சட்டையின் மடிப்புக் கலையாமல், உடம்பு கசங்காமல், வியர்வை வராமல், நகத்தில் அழுக்குப்படாமல் வாழ வழியுண்டா? உபதேசம் செய்யும் உயர்ந்த மனிதனாக இருந்துவிட வாய்ப்புண்டா? அத்தகைய வாழ்க்கையை நிரந்தரமாக்கிக்கொள்ள முடியுமா? இதுவே இன்றைய சமுதாயத்தின் தேடுதலாக இருக்கின்றது. காரும், பங்களாவும் எடுபிடி ஆட்களும், உழைக்காமல் வரும் நிரந்தர வருமானமும், மாலை மரியாதையுமான விளம்பர வாழ்க்கையும்தான் இன்றைய சமூகத்தின் குறிக்கோளாகவும் இருக்கின்றது.

முன்மாதிரி அரசியல் தலைவர்

                                                    மௌலவி இஸ்மாயில் ஸலபி
‘அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணிக்கும் போது திர்ஹமையோ, தீனாரையோ (வெள்ளிக் காசையோ, தங்கக் காசையோ), அடிமைகளையோ, வேறு எதனையுமோ விட்டுச் செல்லவில்லை. தமது வெள்ளைக் கோவேறு கழுதையையும், தம்முடைய ஆயுதங்களையும் தர்மமாக வழங்கிச் சென்ற ஒரு நிலத்தையுமே அவர்கள் விட்டுச் சென்றார்கள்’ (அறிவிப்பவர்: ஜுவைரியா பின்த் ஹாரிஸ் ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 2739, 2839, 2912, 3098, 4461)

ரெட்டியூர் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா

J.அன்வர் பாட்ஷா-S.பாமிலா பர்வின் திருமணம்



பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் {அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}.

அன்புடன்…கோணுழாம்பள்ளம்post இணைய தளம் 

ஆசை பலவிதம்!


நமக்குத்தான் எத்தனை ஆசைகள்...! எதிர்பார்ப்புகள்...! நாம் ஆசைகளையும் கனவுகளையும் வளர்த்துக்கொள்கிறோம். ஆசைகளுக்குப் பின்னால் ஓடுகின்றோம். ஓடி ஓடிக்களைத்துப் போகின்றோம். வாழ்க்கையே முடிந்து போனாலும் ஆசைகள் முடிவதில்லை.

ஆசை இல்லாத மனிதர்களே இல்லை! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசை. சின்னச்சின்ன அசை, பெரிய பெரிய ஆசை. மருத்துவராக ஆசை; பொறியாளராக ஆசை, வீடு கட்ட ஆசை, இன்னும் என்னென்னவோ!