மீனில் உள்ள எண்ணை தலையிடி வருவதைத் தடுக்கும். அதேசமயம், இஞ்சி வலியையும், நெஞ்சு எரிவையும் தடுக்கும்.
கோடைகால காச்சல் (Hay Fever) – தயிர் (Yogurt) அதிகம் சாப்பிடுங்கள்..
மகரந்த மணி உருவாகும் காலம் வரும் முன்னர் அதிகளவு தயிர் சாப்பிட்டால் கோடைகால காச்சலை தடுக்கலாம். மேலும் தினமும் உங்கள் பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் தேன் அருந்துவதும் குணமளிக்கும்.
பக்கவாதம் (Stroke): தேனீர் குடியுங்கள்
இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுக்கும் தன்மை தேனீருக்கு உண்டு. பச்சைத் தேயிலை (Green tea) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தூக்கமின்மை: தேன் அருந்துங்கள்
தேன் அருந்துவதால், தூக்கமின்மை நோயை விரட்ட முடியும்.
ஆஸ்த்துமா (Asthma): வெங்காயம் அதிகம் சாப்பிடுங்கள்
வெங்காயம் மூச்சுக்குழாய்களின் சுருக்கத்தை தடுக்கும் சக்தி கொண்டது. நல்ல சுவாசத்திற்கும் உதவிபுரியும்.
வயிற்றுக்கோளாறு: வழைப்பழம், இஞ்சி சாப்பிடுங்கள்
வாழைப்பழம் வயிற்றுக் கோளாறுகளை சீர்செய்யும் தன்மை கொண்டது. இஞ்சி ஜீரணசக்தியை அதிகரிக்கும்.
சிறுநீர்ப்பை தொற்றுநோய் (Bladder Infection): கிரன்பெரி சாறு (Cranberry Juice) அருந்துங்கள்.
உயர் அமிலத் தன்மை கொண்ட கிரன்பெரிச் சாறு பக்ரீரியாக்களை கொல்லும் தன்மை கொண்டது.
எலும்பு முறிவு (Bone Problems): அன்னாசிப்பழம் சாப்பிடுங்கள்.
என்புமுறிவு மற்றும் osteoporosis போன்ற நோய்களை அன்னாசியில் உள்ள மங்கனீஸ் (manganese) என்ற தாதுப்பொருள் தடுக்கும் சக்தி கொண்டது.
தடிமன் (Colds): உள்ளி சாப்பிடுங்கள்.
உள்ளி தலையில் உள்ள சளியை போக்கும் தன்மை கொண்டது. (கொலஸ்ரேலின் அளவையும் அது கட்டுப்படுத்தும்).
குருதியில் சக்கரை: புறோக்கொலி (Broccoli), நிலக்கடலை சாப்பிடுங்கள்.
புறோக்கோலி மற்றும் நிலக்கடலையில் காணப்படும் குறோமியம் (Chromium) என்ற தாதுப்பொருள் இன்சுலின் உற்பத்தியை சீராக்கும்.
source:Eelam eNews.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக