கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

நம் உடலில் அதிசயம்

உங்களுக்கு உள்ளாகவும் (பல அத்தாட்சிகள் இருக்கின்றன அவைகளை) நீங்கள் ஆழ்ந்து கவனித்துப் பார்க்க வேண்டாமா?’ (51:21)

‘நாம்தாம் அவர்களைப் படைத்தோம்; நாம்தாம் அவர்களுடைய அமைப்பையும் உறுதிப்படுத்தினோம்’ (76:28)

‘திட்டமாக நாம் மனிதனை மிக்க மேலான வடிவத்தில் படைத்தோம்’ (95:04)



இந்த  வசனங்கள் மனிதனாகிய நம்முடைய படைப்பு நம்முடைய அமைப்பு, நம்முடைய அவயங்களின் மீது அல்லாஹ் தன் முத்திரையை பதித்திருப்பதை, இது போன்ற வசனங்கள் குர்ஆன் நெடுக காணமுடிகிறது. தன்னை அறிந்து கொண்டவன் அல்லாஹ்வை அறிந்து கொண்டான்:

இந்த கட்டுரை மூலம் ஒரு சில அவயங்களின் புள்ளி விபரங்களையும், சில அவயங்களின் பணிகளையும் மிகச் சொற்பமாகவே சுட்டிக் காட்டியுள்ளேன். அதுவும் 100 புள்ளிகளில். ஒவ்வொரு அவயத்தின் படைப்பின் நுட்பத்தை நவீன விஞ்ஞானத்தின் மூலம் காணும் போது படைத்த அல்லாஹ்வே புகழுக்குரியவன், என நம் வாய்முணு முணுக்கிறது அத்தனை ஆச்சரியங்களையும் எழுதி முடித்துவிட முடியாது.

உதாரணத்திற்கு, நமது மூளையைப் பற்றி நவீன விஞ்ஞானம் அறிந்து கொண்டது மிகமிக சொற்பமானது தான் இன்னும் தெரியாத புரியாத விளங்கிக் கொள்ள முடியாத விநோதங்கள் ஏராளம், ஏராளம்.

அல்லாஹ்! நீயே மகத்துவமானவன்; நீயே சிறந்த படைப்பாளன்: நீயே சிறந்த பாதுகாவலனும் கூட..

1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது.

2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதாரணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்.

3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள் ஒரே அளவாக இருப்பதில்லை காரணம் கருவில் சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக வளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வித்தியாசம் தான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது. நம் இடதுகால் செருப்பை விட வலதுகாலின் செருப்பு வேகமாக தேய்வது கூட இந்த சிறு வித்தியாசத்தால் தான்.

4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள் தொடர்ந்து 24 மணி நேரம் வரை செயல்படுகிறது. அவனது எலும்பு தொடர்ந்து 4 நாட்களை வரை செயல்படுகிறது. தோல் தொடர்ந்து 5 நாட்கள் வரை பணி செய்கிறது. கண் மற்றும் காது தொடர்ந்து 6 மணி நேரம் பணி செய்கிறது தசைகள் ஒரு மணி நேரம் செயல்படுகிறது. அவனது சிறுநீரகம் தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது. ஆக அவனது ரூஹ் பிரிந்தாலும் அவனது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் நிறுத்தப்படவில்லை.

5. 50 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 300 நாட்களில் குழந்தை பிறக்கிறது. 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும். பெண்களுக்கு 280 நாட்களில் குழந்தை பிறக்கிறது. இதுதவிர மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறப்பும் சற்றுமுன்னாடியே (குறை பிரசவம்) அமைந்து விடுகிறது. பெண்கள் இது விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும்.

6. பகலில் 8 மில்லிமீட்டர் சுறுங்கி இரவில் 8 மில்லி மீட்டர் உயர்ந்து விடுகிறோம். காரணம் பகலில் நமது வேலைகள் செய்யும் போது தண்டு வடத்திலுள்ள குறுத்தெலும்பு வட்டுகள் ஈர்ப்பு விசை காரணமாக அழுத்துகின்றன. இதனால் உயரம் குறைகிறது. இரவில் எவ்வித விறைப்புத்தன்மையும் இல்லாமல் படுத்து உறங்குவதால் நமது உடம்பின் உயரம் கூடுகிறது.

7. நம் இரத்தத்தில்; சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 127 நாட்கள் தான் அதன் பிறகு அது மடிந்துவிடும். புது சிவப்பணுக்கள் உருவாகும். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள்.

8. நம் உடலில் சுமார் 20 லட்சம் வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. அவை ஒரு நாளில் சராசரியாக 5 லிட்டர் முதல் 6 லிட்டர் வியர்வையை வெளிப்படுத்துகின்றன.

9. நமது கைகளில் நடுவிரலில் நகம் வேகமாகவும், கட்டை விரலில் நகம் மெதுவாகவும் வளர்கின்றன.நம்முடைய உடல் பாரத்தால் கைவிரல் நகத்தைவிட கால்விரல் நகம் மெதுவாக வளர்கிறது.

10. நாம் இரவில் தூங்கும் போது அசையாமல் தூங்குவதில்லை, சுமார் 40 முறை அந்தப் பக்கம், இந்தப்பக்கமாகப் புரண்டு படுக்கிறோம்

0 கருத்துகள்: