சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மோனிகா. அழகி படத்தின் மூலம் பிரபலமானார். தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்த மோனிகா, திடீரென இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். மேலும் தனது பெயரையும் எம்.ஜி.ரஹிமா என்று மாற்றியுள்ளதோடு, சினிமாவுக்கும் முழுக்கு போட முடிவெடுத்துள்ளார்.
இதுகுறித்து மோனிகா கூறியுள்ளதாவது, இந்து மதத்தில் பாதுகாப்பு இல்லை, எனவே இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளேன். மேலும் இஸ்லாம் மதத்தின் கொள்கைகளும் எனக்கு பிடித்து இருந்தது. 2010ம் ஆண்டே மதம் மாற முடிவெடுத்தேன். ஆனால் அது இப்போது தான் நடந்துள்ளது. எனது அம்மா இந்து மதத்தை சேர்ந்தவர், அப்பா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். இருவரது சம்மதத்துடன் தான் மதம் மாறியுள்ளேன். விரைவில் நான் நடித்த கடைசி படமான ‘நதிகள் நனைவதில்லை’ படம் திரைக்கு வர இருக்கிறது. இந்தப்படத்தோடு சினிமாவுக்கு முழுக்கு போட உள்ளேன். இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். நன்றி:தமிழ்நாளிதழ்கள்
இயற்கை மார்கத்திற்கு திரும்பி தனது பெயரை ரஹீமா என மாற்றிக் கொண்டுள்ள சகோதரிக்கு இந்த ஹதீஸை நினைவு படுத்துவோம்
அம்ரு இப்னு அல்ஆஷ்(ரலி)அறிவிக்கின்றார்கள்: ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது, அது அவருடைய முந்திய பாவங்களை அழித்துவிடும் என முஹம்மத்(ஸல்)அவர்கள் கூறினார்கள்.(ஆதாரம்: முஸ்லிம்:121)
அல்ஹம்துலில்லாஹ் .... அல்லாஹ்வின் அருள் இவருக்கு கிடைத்துள்ளது இன்ஷா அல்லாஹ் இவர் தொடர்ந்து நேர்வழியில் இருக்கவும் , இவருடைய வாழ்வாதாரங்கள் பெருகி வாழ்வு நன்கு சிறக்கவும் , கஷ்டங்களிலிருந்து விடுபடவும் , முஸ்லிம் ஆகியதால் ஏற்படும் தொல்லைகளிருந்து காக்கவும் , இம்மையிலும் , மறுமையிலும் எல்லா நலன்களையும் பெற்றிடவும் மற்றும் இவரின் குடும்பத்தினரும் விரைவில் இஸ்லாமை ஏற்கவும் அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் , இச்செய்தியை படிக்கிற நீங்களும் துஆ செய்யுங்கள் ... மற்றவர்களுக்கும் பகிருங்கள் இன்ஷா அல்லாஹ் ....
நன்றி:தக்கலை கவுஸ் முஹம்மத்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக