செல்போனில் குறுஞ்செய்தி மூலம் மின் கட்டணம் எவ் வளவு என அறிவிக்கும் திட் டத்தில் செல்போன் எண் களை பதிவு செய்யவும், மாற்றம் செய்யவும் இணைய தளத்தில் புதிய வசதி அறிமு கப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து நுகர் வோரும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் மொபைல் எண்ணை, இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.
தமிழகத்தில் மின் துறை யின் வருவாயைப் பெருக் கவும், மின்சாரத் துறையை நவீனப்படுத் தவும், தமிழக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத் துக்கு மத்திய அரசிலிருந்து ஆர்-ஏ.பி.டி.ஆர்.பி. திட்டத்தின் மூலம் நிதி உதவி வழங்கப் படுகிறது.
இந்நிலையில், சுமார் ரூ.70 ஆயிரம் கோடி இழப்பில் தவிக்கும் மின் வாரியத்தின் வருவாயை உயர்த்த எடுக்கப்படும் பல நடவடிக்கைகளில் ஒன்றாக, மொபைல் போன் மூலம் மின் கட்டண விவரங்களை அனுப்பும் திட்டத்தை மின் வாரியம் அறிமுகப்படுத்த உள்ளது.
தமிழகத்தில் உள்ள 2.3 கோடி மின் நுகர்வோரில், விவசாயம் மற்றும் குடிசை களுக்கான இலவச மின்சார இணைப்புகள் பெற்றுள் ளோரைத் தவிர, மற்ற அனை வருக்கும், மின் கட்டணம் குறித்த விவரங்களை குறுஞ் செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் அனுப்ப முடிவு செய்யப் பட்டது.
முதலில் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் உள்ள மின் கட்டண வசூல் மய் யங்களில், பணம் கட்டும் போதே, செல்போன் எண் ணைப் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டது. இதில் மின் ஊழியர்களுக்கு அதிக பிரச்சினைகள் ஏற்பட்டதால், வெளியே தனியாக பதிவேடு வைக்கப்பட்டு, நுகர்வோர் தாங்களாகவே மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.
இதிலும் ஏராளமானோர் மொபைல் போன் எண் ணைப் பதிவு செய்யவில் லை. பெரும்பாலானோர் தங்கள் மின் கட்டணத்தை இணையதளம், அஞ்சல் அலுவலகம், வங்கி ஏ.டி.எம். மய்யங்கள் மற்றும் தனியார் ஏஜெண்டுகள் மூலம் கட்டி விடுவதால், அவர்கள் செல்போன் எண்ணை பதிவு செய்வதில் கால தாமதம் ஏற் பட்டது.
இணையதளத்தில் புதிய வசதியை, தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்அறிமுகப்படுத்தியுள்ளது.மின்நுகர்வோர் http://www.tangedco.gov.in/ என்ற இணையதள முகவரியில் மின் உற்பத்தி மற்றும் பகிர் மானக் கழக இணைய தளத்தில், பில்லிங் சர்வீசஸ் (Billing Services) என்ற ஆப் ஷனில் சென்றால், இறுதி ஆப்ஷனாக மொபைல் நம்பர் ரெஜிஸ்ட்ரேஷன் (Mobile Number Registration) சேர்க்கப்பட்டுள்ளது.
அதில் க்ளிக் செய்தால், தங்களது மின் மண்டல எண்ணை தனியாகவும், மற்ற எண்களை தனியாகவும் குறிப்பிட வழி செய்யப்பட்டுள்ளது. இணைப்பு எண்ணைப் பதிவு செய்ததும், மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய வசதி செய்யப்பட் டுள்ளது.
மின் துறை கணக்கீட் டாளர்கள், தங்களது கைய டக்க கருவி மூலம் மின் கட்டண பட்டியல் எடுத் ததும், அவை மின்வாரிய இணையதள சர்வரில் ஏற்றப் படும். பின்னர் முதலில் பதிவு செய்யப்படும் ஒரு லட்சம் எண்களுக்கு, தினமும் சர்வரி லிருந்து மொபைல் போன் குறுஞ்செய்தி மூலம் தகவல் கள் அனுப்ப தனியார் நிறு வனத்திடம் ஒப்பந்தம் செய் யப்பட்டுள்ளது.
நன்றி:விடுதலை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக