கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

திருச்சி ஜமாஅத்துல் உலமா நடத்திய ஷரீஅத் மாநாடு தீர்மானம்

575716
திருச்சி, நவ.7- திருச்சி மாநகர மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் ஷரீஅத் மாநாடு திருச்சி சிங்காரதோப்பு நியூ கோல்டன் மஹாலில் நடைபெற்றது. காலையில் நடைபெற்ற முதல் அமர்வில் மார்க்க கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லவி ஏ.முஹம்மது ரூஹுல் ஹக் தலைமை வகித்தார். திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டமான திருச்சி மாநகர், புறநகர், கரூர், பெரம்பலூர், அரியலூர் உள் ளிட்ட மாவட்டங்களின் ஜமாஅத் தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

திருச்சி குமுந்தான் பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி ஏ. உபைதுல்லாஹ் ஹழ்ரத் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் பொருளாளர் மௌலவி முஹம்மது ஹுசேன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ஜமாஅத்துல் உலமா சபையின் துணைத் தலைவர் மௌலவி முஹம்மது பஸீம் துவக்கவுரை நிகழ்த்தினார். மேலப்பாளையம் உஸ்மா னியா அரபிக் கல்லூரி முதல்வர் மௌலவி எஸ்.எஸ். ஹைதர் அலி, `மார்க்கக் கல்வி மங்கிப் போனால்’ என்ற தலைப்பிலும், சென்னை அடையாறு ஜும்ஆ மஸ்ஜித் தலைமை இமாம் மௌலவி எம். சதீதுத்தீன் பாகவி, `உலமாகளும் - உமரா களும்’ என்ற தலைப்பிலும், ஐக்கிய நல கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் முஹம்மது ரஃபீக், `நம் மக்களின் நிலையும் - உயர்வுக் கான வழியும்’ என்ற தலைப்பில் பேசினார்கள்.

இரண்டாவது அமர்வில் `பிள்ளைகளின் சீரழிவுக்கு பெரிதும் காரணமாக இருப்பது வீட்டுச்சூழலா? - வெளிச் சூழலா?’ என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைபெற்றது. சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரி முதல்வர் மௌலவி எம். அபுதாஹிர் பாகவி நடுவராக இருந்து தீர்ப்பளித்தார். `வீட்டுச் சூழலே’ என்ற தலைப்பில் திருச்சி மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் மௌலவி ஏ. முஹம்மது சிரா ஜுதீன் ஹழ்ரத், மதீனா மஸ்ஜித் தலைமை இமாம் மௌலவி நூர் முஹம்மது ஆகியோர் `வெளிச் சூழலே’ என்ற தலைப்பில் ஜமாஅத்துல் உலமா சபை துணைத் தலைவர் மௌலவி முஹம்மது ஷரீப் ஹழ்ரத் யூசுபி, திருச்சி தக்வா மஸ்ஜித் தலைமை இமாம் மௌலவி வி.எம். அல்அமீன் ஹழ்ரத் ஆகியோர் பேசினர்.

ஷரீஅத் மாநாடு
இறுதியாக மாலை நடை பெற்ற ஷரீஅத் மாநாட்டிற்கு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி ஏ.இ.எம். அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். ஜமாஅத் நிர்வாகி கள், உலமா பெருமக்கள், ஜமா அத்தார்கள் ஆகியோர் முன்னி லை வகித்தனர்.

திருச்சி ஜங்ஷன் பள்ளி இமாம் மௌலவி முஹம்மது அன்சாரி கிராஅத் ஓதினார். மாநாட்டு வரவேற்பு குழு செயலாளரும், திருச்சி மாநகர மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவருமான முஃப்தி எஸ்.ஏ.எச். உமர் பாரூக் மழாஹிரி அனைவரையும் வரவேற்றார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியப் பொதுச் செய லாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், `ஷரீஅத் சட்டங்களும் - இந்திய சட்டமும்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

திருச்சி மாநகர மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் மாநில தலைமை கட்டட நிதியாக ரூ.75 ஆயிரம், தலைவர் மற்றும் பொதுச் செய லாளர் ஆகியோரிடம் திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா நிர்வாகிகள் வழங்கினார்கள்.

கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு-
அல்லாஹ்வின் உதவி ஒன்றிணைந்து செயல்படு வதில்தான் இருக்கிறது என்ற நபிமொழியை கவனத்தில் கொண்டு 1975-ம் ஆண்டு மூத்த ஆலிம்களால் திருச்சி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை ஆரம்பம் செய்யப்பட்டு பின்னர் 1977-ம் ஆண்டு மாவட்ட சபையாக விரிவாக்கம் செய்யப்பட்டு சிறப்பாக செயல் பட்டு வருகிறது. அத்தகைய மூத்த உலமாகளை நினைவு கூர்ந்து அவர்களின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோ மாக.

ஜமாஅத்துல் உலமா மார்க்க சபைக்கு தனி அலுவலகம் அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால் மஹல்லா நிர்வாகிகள், வியாபாரப் பெரு மக்கள், தாராள மனம் படைத்த தனவந்தர்கள், ஜமாஅத்துல் உலமா சபைக்கு மாவட்ட அலு வலகம் அமைக்க ஒத்துழைப்பும், நிதி உதவியும் செய்யுமாறு இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

மேலும், சேவை உணர்வு, அர்ப்பணிப்பு தன்மைகளோடு பணி செய்து மக்களுக்கு மிகச் சிறந்த முன்னோடி வழிகாட்டி களாக திகழ வேண்டும் என ஆலிம், உலமா பெருமக்களை இம் மாநாடு கேட்டுக் கொள் கிறது.

இமாம்கள் சேர்த்தல் நீக்கல்
மஹல்லாவின் கண்ணியம் காக்கப்பட உலமாகளை பணி யில் சேர்க்கும் போது மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் பரிந்துரை யின் பேரில் சேர்த்துக் கொள்ளுமாறும், நிர்வாகத்திற் கும், இமாமுக்கும் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பணிநீக்கம் செய்யும் முன் ஜமாஅத்துல் உலமா சபையின் நிர்வாகிகளோடு கலந்து பேசி முடிவு செய்தால் நல்லது என இம் மாநாடு நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறது.

ஒவ்வொரு மஹல்லா நிர்வாகத்திலும் பைத்துல்மால் அமைப்பு ஏற்படுத்தி அதன் மூலம் மஹல்லா ஏழை எளிய மக்களின் பல்வேறு காரியங் களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறது.

கல்வி நிலையங்களில் பெண்பிள்ளைகள்
மஹல்லா நிர்வாகிகள் தங்கள் மஹல்லாவில் வசித்து வரும் பெண்பிள்ளைகளின் மார்க்க கல்வி, நல்லொழுக்கம் ஆகியவற்றில் தனி கவனம் செலுத்த வேண்டும். அவர் களின் எதிர்கால வாழ்வு சிறப்பாக அமைந்திட - மார்க்கப் பற்று உள்ளவர்களாக உருவாக மஹல்லாதோறும் நிஸ்வான் களை உருவாக்க வேண்டும். மேலும், மக்தப் மதரஸாக்களில் கூடுதல் கவனம் செலுத்தி குர்ஆன்ஷரீப் ஓதத் தெரியாத வர்கள் இம் மஹல்லாவில் யாரும் இல்லை என்ற நிலையை உருவாக்க மஹல்லா நிர்வாகி களும், இமாம்களும், பெற் றோர்களும் இணைந்து செயல் பட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

சமுதாயத்தில் பெண் பிள்ளைகளை மேல்படிப்பிற்கு சேர்க்கும் போது, ஈமான், நல்லொழுக்கம் ஆகியவற்றை முதன்மையாக கொண்டு செயல்பட வேண்டும். எனவே, பெண்பிள்ளைகளை இருபாலர் சேர்ந்து படிக்கும் கல்வி மற்றும் கல்லூரிகளில் சேர்க்காமல் பெண்பிள்ளைகள் மட்டுமே பயிலும் கல்விக் கூடங்களில் சேர்த்து கண்ணியம் காக்க வலியுறுத்துகிறது.

காஜிகளுக்கு அங்கீகாரம்
தமிழ்நாடு தலைமை காஜி, மாவட்ட அரசு டவுன் காஜிகள் மற்றும் மஹல்லா பள்ளிவாசல் களின் இமாம்களான மஹல்லா காஜிகள் அனைவரும் முஸ்லிம் தனியார் (ஷரீஅத்) சட்டப்படி நடைபெறும் திருமணம் மற்றும் மணமுறிவு (தலாக் - குலா - பஸ்க்) போன்ற நிகழ்வுகளின் போது முன்னின்று அக் காரி யங்களை மேற்படி காஜிகளே நடத்துவதும், சான்றுகள் வழங்குவதும் காலம் காலமாக இஸ்லாமிய சமுதாயத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. இத்தகைய சான்றுகளை நீதிமன்றங்களும், அரசு அலுவ லகங்களும் ஏற்றுக் கொள்ளும் வழக்கம் தொன்றுதொட்டு நடைமுறையில் உள்ளது.

இந்த பாரம்பரிய முறையில் நடைபெறும் திருமணம், மணமுறிவு, பாகப்பிரிவினை போன்ற முஸ்லிம் தனியார் சட்டங்களில் மேற்படி காஜிகள் வழங்கும் சான்றுகளை மத்திய -மாநில அரசுகள் அங்கீகரித்து இச் சான்றுகளும் சட்டப்பூர்வ மான சான்றுகளே என அறி விக்குமாறு மத்திய - மாநில அரசுகளை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது. திருமணங்கள் பதிவு

தமிழ்நாடு அரசு 2009-ல் நிறைவேற்றிய திருமண கட்டாய பதிவுச் சட்டம்.
இதில் பதிவுக்கா மஹல்லா ஜமாஅத்துகளின் பதிவேட்டை (தப்தர்) அப்படியே அங்கீகரித்து அதனை முஸ்லிம் சமுதாயத்தி னரின் பதிவுக்கென தனியே தரப்பட்டுள்ள படிவம் 1 (அ) -ல் கண்டுள்ள விவரங்களின்படியே திருமணங்களை பதிவு செய்யவும்,

முஸ்லிம் திருமணங்களை விசேஷ திருமண சட்டப்படி பதிவு செய்தே ஆக வேண்டும் என முஸ்லிம்களை நிர்ப்பந்திக்கக் கூடாது என மாவட்ட சார்பதிவா ளர்களுக்கு தாக்கீது அனுப்பு மாறு மாநில அரசுக்கு இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது. உயர்கல்வி உதவித் தொகை கல்வி உதவித் தொகை பெற மாணவர்கள் அலைக் கழிக்கப்படுவதும், ஜாமீன் உட்பட பல்வேறு கார ணங்களை சொல்லி விண்ணப் பங்களை நிராகரிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எனவே, மத்திய அரசின் கல்விக்கடன், வழிகாட்டு நெறி களை கவனத்தில் கொண்டு அவரது சொந்த ஜாமீனிலேயே கல்விக் கடன் வழங்கி அவர்கள் தங்களின் மேல்படிப்பை தடையில்லாமல் தொடர்ந்து படிக்க வங்கிகள் முன்வர வேண்டும் என இம் மாநாடு கேட்டுக் கொள்வதுடன்,

கல்விக் கடன் பெற்ற மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் சேர்ந்துள்ள வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு

எல்லா சீரழிவுக்கும் மதுவே காரணம். எல்லா குற்ற நிகழ்வுகளிலும் அடிப்படை காரணமாக இருப்பது மதுதான் என்பதை சமீபத்திய பல்வேறு நிகழ்வுகள், குற்றச்செயல்கள், கொடூர கொலைகள், குடும்ப வன்முறைகள், பாலியல் கொடு மைகள் தெளிவுபடுத்துகின் றன.

மதுவின் காரணத்தால் வாழும் சமுதாயம் அவதிப்படு கிறது. வளரும் சமுதாயம் அழிந்து வருகிறது. எனவே, மனித சமுதாயம் குறிப்பாக வளரும் சமுதாயம் ஆரோக்கி யமாக வாழ தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தி மக்களை பாதுகாக்குமாறு இம் மாநாடு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

இடஒதுக்கீடு
இந்தியாவில் சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமியர்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நிலைகளில் மிகவும் பின்தங்கியுள்ளார்கள் என்ற ஆய்வின் அடிப்படையில் முஸ்லிம்களின் மேம்பாட்டுக் கென நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அரசின் வேலை வாய்ப்பு மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் களுக்கு 18 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளதை சட்டமாக்கி சிறுபான்மை மக்களுக்கு சமூக நீதி வழங்க வேண்டும் என மத்திய அரசை இம் மாநாடு கேட்டுக் கொள் ளும் அதேவேளையில்,

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் இடஒதுக்கீட்டை உயர்த்தி கொடுப்போம் என்று சொன்ன முதல்வரின் தேர்தல் வாக்குறுதியை நினைவுப் படுத்தி தற்போது தமிழகத்தில் வழங்கப் பட்டு வரும் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை அதிகரித்து தரும்படியும் தமிழக அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

சிறைவாசிகள் விடுதலை
நாட்டின் பல்வேறு மாநிலங் களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகள் குற்றச் செயல் களில் ஈடுபட்டதாக கூறி அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகள் விசாரணை செய் யப்படாமலேயே சிறைச்சாலை களில் பல்வேறு கொடுமை களை அனுபவித்து வருகிறார் கள். உண்மையான குற்றவாளி கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், அப்பாவி முஸ்லிம்கள் சிறைச்சாலைக ளில் இல்லை என்பதை மாநி லங்கள் உறுதிப்படுத்த வேண் டும் என்ற மத்திய அரசின் தாக்கீதை அடிப்படையாக கொண்டு மேலும் காலம் தாழ்த்தாமல் நாட்டின் பல்வேறு சிறைகளில் இருக்கும் அப்பாவி முஸ்லிம் கைதிகளை உடனே விடுதலை செய்து உரிய இழப் பீடு வழங்குமாறு மத்திய - மாநில அரசுகளை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

பொது சிவில் சட்டப்பிரிவை நீக்குக!
இந்தியாவின் அரசமைப்பு சட்டத்தில் எல்லா மக்களுக்கும் அடிப்படை உரிமைகள், விரும் பும் மதத்தை தேர்ந்தெடுத்து கடைபிடிக்கும் மத சுதந்திர உரிமை, சமயசார்பான கொள் கைகள், தெளிவாக சொல்லப் படும் அதே நேரத்தில்,

அரசமைப்பு சட்டத்தின் 44-வது பிரிவு எல்லா மக்களும் ஏற்று கொள்ளும் வகையில் பொது சிவில் சட்டம் கொண்டு வர அரசு முயற்சிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு மேற்கூறிய உரிமை நிலைப்பாடுகளுக்கு எதிராக இருப்பதால் அரசமைப்பு சட்டம் 44-ஐ நீக்குவதற்கு பாராளுமன்றத்தில் சட்ட திருத் தம் கொண்டு வந்து நிறை வேற்றுமாறு மத்திய அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

திருச்சி பள்ளி மாணவி தௌஃபீக் சுல்தானா படுகொலை
திருச்சி பள்ளி மாணவி தௌஃபீக் சுல்தானா பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கு பல்வேறு போராட்டங் களுக்குப் பிறகு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டு எவ் வித முன்னேற்றமும் ஏற்பட வில்லை.

மேலும், வழக்கு விசா ரணையை விரைவுபடுத்தி உண்மை குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இல்லை யெனில், தமிழக காவல் துறை வசமிருந்து வழக்கு விசா ரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற தமிழக அரசுக்கு உத்தர விட வேண்டும் என இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது. கல்லணை பள்ளிவாசல்

தஞ்சை மாவட்டம் திருவை யாறு சட்டமன்ற தொகுதி கோவிலடி பஞ்சாயத்திற்கு உட் பட்ட தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கல் லணையில் அமைந்துள்ள நூற்றாண்டு கால பழமையான பள்ளிவாசலை கரிகாலன் நினைவு மண்டபம் கட்டுவதை காரணம் காட்டி எவ்வித தேவையுமின்றி இடிக்க முயற்சிப்பதை இம் மாநாடு வன்மையாக கண்டிப்பதுடன் பள்ளிவாசல் மற்றும் அதனைச் சேர்ந்துள்ள பகுதிகளை பாதுகாப்பதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

உலமா ஓய்வூதியம்
தமிழக அரசு உலமாகளுக்கு மாதம்தோறும் வழங்கி வரும் உலமா பென்ஷன் தொகை ரூ.ஆயிரத்தை 2ஆயிரமாக உயர்த்தி வழங்கிடுமாறும், உதவித்தொகை பெறும் வயது 60 என்பதை தளர்த்தி 50 ஆக குறைக்குமாறு தமிழக அரசை இம் மாநாடு கேட்டுக் கொள் கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்: