கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

மத்திய அரசு சிறுபான்மையினருக்காக உருவாக்கும் 5 பல்கலைக்கழங்களில் ஒன்றை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும்.

சிறுபான்மையினருக்காக மத்திய அரசு உருவாக்க உள்ள 5 பல்கலைக்கழகங் களில் ஒன்றை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் எம். அப் துல் ரஹ்மான் எம்.பி. இன்று கோரிக்கை வைத்தார்.

சிறுபான்மையின சமுகத் தின் கல்வி மேம்பாட்டின் அவசியம் குறித்து ஆய்வு செய்த மத்திய அரசு சிறுபான்மை யினருக்கென பிரத்யேகமாக நாடு முழுவதும் பல்கலைக் கழகங்கள் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்றும், அதன் முதற்கட்டமாக ஐந்து பல்கலைக் கழங்களை ஐந்து வெவ்வேறு மாநிலங்களில் உருவாக்க வேண்டும் என்றும் முடிவு செய்தது.

இந்த முன்னோடி திட்டத் தின் பயன்பாட்டை ஆய்ந்து, பெருமளவிலாக பல்கலைக் கழகங்கள் தோற்றுவிக்கப்படும் என மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கே. ரஹ்மான்கான் வெளியிட்ட அரசு பூர்வாங்க அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

வேலூர் தொகுதியில் அமைக்க எம். அப்துல் ரஹ்மான்கோரிக்கை

இன்று (24.08.2013) நாடாளுமன்ற கூட்டத்தின் போது பகல் 12 மணிக்கு 377வது விதியின் கீழ் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் இது தொடர்பாக கோரிக்கை வைத் தார்.

மத்திய அரசு சிறுபான்மை யினருக்காக ஐந்து பல்கலைக் கழகங்கள் உருவாக்குவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றை தமிழ்நாட்டிற்காக ஒதுக்க வேண்டும் என நான் வேண்டுகோள் வைக்கிறேன். 

தமிழ்நாட்டிலுள்ள வேலூர் நாடாளுமன்ற தொகுதி சிறு பான்மை சமூக மக்கள் அதி களவில் வாழும் தொகுதி 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு பான்மையினர் இங்கு சமூக பொருளாதார கல்வித் துறை யில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் காரணத் தால் இந்த பல்கலைக்கழகம் வேலூர் தொகுதியில் நிறுவப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

வேலூர் தொகுதியில் கூலித் தொழிலாளர்கள், அன்றாடம் காட்சிகள், பீடி மற்றும் தோல் பதனிடம் தொழிலாளர்கள் அதிகம் வாழ்கின்றனர். தொடக்கப்பள்ளி நிலையில் இருந்து உயர் கல்வி நிலைக்கு செல்வதற்கு அவர்களின் பொருளாதார இயலாமையே ஒட்டு மொத்த சிறுபான்மை சமுதாயத்தையும் பின்னுக்கு கொண்டு செல்கின்ற காரணத்தால் பள்ளி படிப்பை நிறைய பேர் பாதியிலிலேயே நிறுத்தி விடும் அவல நிலை இருந்து வருகிறது. 

இந்திய அரசியல் சட்டத்தின் 15 மற்றும் 16 விதிகளின்படி சமூக பொருளாதார பின்னடை வில் இருக்கும் சிறுபான்மை சமூகம் நிறைந்திருக்கும் தொகுதி யாக வேலூர் தொகுதி யை மத்திய அரசு கணக்கில் எடுத்து பல்கலைக்கழகத்தை அங்கே நிறுவுவதற்குரிய பூர்வாங்க பணியை தொடங்க நான் வலியுறுத்துகிறேன்.

இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்படும் விதிமுறை அனைத்திற்கும் வேலூர் தொகுதி தகுதி உடையதாக இருக்கின்ற காரணத்தால் என் வேண்டுகோளை ஏற்று மிக விரைவாக மத்திய சிறுபான்மை நலத்துறை பல்கலைக்கழக அறிவிப்பை வெளியிட வேண் டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு எம்.அப்துல் ரஹ்மான் பேசினார்.
நன்றி:http://www.muslimleaguetn.com/

0 கருத்துகள்: