கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

திருக்குர்ஆனின் நற்செய்தியை உலக மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கவேண்டும் – யூசுஃப் எஸ்டஸ்!


Shaikh Yousuf Estes
துபாய்:திருக்குர்ஆனை அதிகமாக புரிந்து, எல்லா பிரிவு மக்களுடனும் அதிகமான நல்லிணக்கத்தை ஏற்படுத்தி உலகில் அனைவருக்கும் திருக்குர்ஆனின் நற்செய்திகளையும், மகத்துவங்களையும் புரியவைப்பது அனைத்து முஸ்லிம்கள் மீதும் கடமையாகும் என்று பிரபல அமெரிக்க அறிஞர் யூசுஃப் எஸ்டஸ் கூறியுள்ளார்.

பதினாறாவது துபாய் புனித திருக்குர்ஆன் விருது தொடர்பாக வழங்கப்படும் இவ்வாண்டிற்கான சிறந்த இஸ்லாமிய ஆளுமையாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருதை பெறும் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 மேலும் அவர் கூறியது:திருக்குர்ஆனின் நற்செய்திகளும், சிந்தனைகளும் உலகின் குறைந்த சதவீத மக்களுக்கு மட்டுமே தற்பொழுது புரிந்துள்ளது. இதர மக்களுக்கும் இந்த சிந்தனைகளை கொண்டுசேர்ப்பது குறித்து ஒவ்வொரு முஸ்லிமும் இறைவனிடம் பதில் அளித்தாக வேண்டும் என்று யூசுஃப் எஸ்டஸ் கூறினார்.

 துபாய் துணை ஆட்சியாளர் ஷேக் மக்தூம் பின் முஹம்மது ராஷித் யூசுஃப் எஸ்டஸுக்கு சிறந்த இஸ்லாமிய ஆளுமைக்கான விருதை வழங்கினார்.

 திருக்குர்ஆன் ஓதுதல் போட்டியில் முதல் பரிசை குவைத்தைச் சார்ந்த யாஸீன் பின் ஹஸ்ஸன் பெற்றார். இரண்டரை லட்சம் திர்ஹம் முதல் பரிசாகும். பங்களாதேஷைச் சார்ந்த ஐனுல் ஆரிஃப் இரண்டாவது பரிசைப் பெற்றார். சாட் நாட்டைச் சார்ந்த யஃகூப் ஆதம் மூன்றாவது பரிசைப் பெற்றார். இரண்டாவது பரிசாக இரண்டு லட்சம் திர்ஹமும், மூன்றாவது பரிசாக ஒன்றரை லட்சம் திர்ஹமும் பரிசாக அளிக்கப்பட்டன. இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தைச் சார்ந்த முஹம்மது தாரிக்கும் போட்டியில் பங்கேற்றிருந்தார்.

 கென்யா, சீனா, கொஸாவோ, புரூணை, சுரிநாம், ஜாம்பியா, சிங்கப்பூர், மொஸாம்பிக், நியூசிலாந்து ஆகிய நாடுகளைச் சார்ந்தவர்கள் துவக்க கட்ட போட்டியிலேயே வெளியேறிவிட்டனர். 91 நாடுகளைச் சார்ந்த பிரதிநிதிகள் புனித திருக்குர்ஆன் ஓதுதல் போட்டியில் பங்கேற்றிருந்தனர்
.http://www.thoothuonline.com

0 கருத்துகள்: