“இறைத்தூதரே! நம் சமுதாயம் கொஞ்சம் வசதியோடு வாழ்வதற்கு தாங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிய வேண்டும். நெருப்பை வணங்குபவர்களுக்கும் அல்லாஹ் நிரம்ப செல்வங்களை அள்ளிக் கொடுத்திருக்கிறான். ஆனால் அவர்கள் சிறிது கூட அவனை வணங்குவதில்லை
.” இப்படிச் சொன்னது ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டு சில விஷயங்கள் பேசுவதற்காக வந்திருந்தார்கள் ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள். அண்ணல் நபிகளார் தவிர அங்கே வேறு யாரும் இல்லை. பழைய பாய் ஒன்றில் அண்ணலார் படுத்துக் கிடந்தார்கள். காய்ந்த நார்களைக் கொண்ட ஒரு தலையணையில் தங்கள் தலையைச் சாய்த்திருந்தார்கள்.
அண்ணலாரை அந்த நிலையில் கண்ட ஹஸ்ரத் உமர்(ரலி) அவர்களுக்கு பரிதாபமாக இருந்தது. அந்த அறை வெறிச்சோடியிருந்து. அறையின் மூலையில் தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு தோல் பையும், ஒன்றிரண்டு பாத்திரங்கள் மட்டுமே இருந்தன.
இவை தவிர வேறொன்றும் இல்லை அங்கே.
ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களைக் கண்டதும் அயர்ந்துபடுத்திருந்த அண்ணலார் அவர்கள் எழுந்து அமர்ந்தார்கள்.
அவர்களின் பொன்னான மேனியில் பாயின் தடங்கள் பதிந்திருந்தன. இதனையும் பார்த்துவிட்ட ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களால் ஆதங்கத்தை அடக்க முடியவில்லை. அவர்களின் மனதில் பெரும் சக்கரவர்த்திகள், மதகுருக்கள், இன்னபிற தலைவர்களின் உருவங்களும் அவர்களின் ஆடம்பரங்களும் வந்து போயின.
அவர்கள் அளவுக்கு ஆடம்பரமாக இருக்க வேண்டாம் அத்தியாவசியத் தேவைகளையாவது பெற்றிருக்க வேண்டாமா? ஆதங்கத்தில் அங்கலாய்த்த ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் அதனைக் கொட்டித் தீர்த்தார்கள் அண்ணலாரிடம்.
ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களின் பேச்சைக் கேட்டு அண்ணலார் ஆச்சரியப்பட்டார்கள்.
“கத்தாபின் மகனே, இதுதான் உங்களின் எண்ண ஓட்டமா? இந்த உலகிற்கு மட்டுமே நன்மை நல்கப்பட்ட மக்கள் கூட்டம் அவர்கள். இந்த உலகம் அவர்களுக்கும், ஆனந்தமான மறுவுலகம் நமக்கும் கிடைப்பதில் உங்களுக்கு விருப்பமில்லையா?” என்று அண்ணலார் கேட்டார்கள்.
முஸ்லிம்கள் மதீனாவில் தங்கள் கால்களை உறுதியாக நிலைநாட்டிய சமயத்தில்தான் இந்த சம்பாஷணை நடந்தது. எதிரிகளின் கொட்டங்களை அடக்கி ஓரிரு போர்களில் வெற்றியும் பெற்றிருந்த சமயம் அது. அல்லாஹ்வின் தூதரின் விருப்பம் வேறு மாதிரி இருந்திருந்தால் உமர் (ரலி) அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க மாட்டார்கள். ஓர் எஜமானனைப் போல் வாழ்ந்திருக்கலாம் அவர்கள்.
இதனை அறியாதவர்களல்ல ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள். அல்லாஹ்வின் தூதரின் மேல் அவர்களுக்கிருந்த அலாதியான நேசம்தான் அவர்களை இவ்வாறு கேட்க தூண்டிற்று.
மக்காவில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இருந்த பொழுது எதிரிகள் எகத்தாளமாய், “நீங்கள் அல்லாஹ்வின் அன்புத் தூதராக இருந்தால் ஏன் இப்படி கஷ்டப்படுகிறீர்? தெருக்களிலும், சந்தையிலும் ஏன் நீர் இறங்கி நடக்கின்றீர்? தன் அன்பு தூதருக்கு அல்லாஹ் செல்வத்தை அள்ளிக் கொடுத்திருக்க வேண்டாமா? ஒரு தோட்டமாவது தங்களுக்குச் சொந்தமாக இருக்கிறதா அப்படியிருந்தால் அது மட்டுமாவது தங்களுக்கு வருமானம் தந்து கொண்டிருக்குமே” என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதற்கு பதிலளிக்கவில்லை. ஆனால் அல்லாஹ்வே பதிலளித்தான். குறைஷிகள் கேட்ட கேள்விகளை அல்லாஹ் உதாசீனப்படுத்தினான் இவ்வாறு:
“தங்களை அவர்கள் எவ்வாறு கேலி செய்கிறார்கள் என்று பாருங்கள். வெற்றி பெறுவதற்கு அவர்களுக்கு ஒரு வழியும் இல்லை
.” ஏந்தல் நபியவர்களின் எளிய வாழ்க்கையை ஏகடியம் பேசி கேலி செய்த நிராகரிப்பாளுர்களுக்கு அல்லாஹ் அவர்களின் வெற்றி பெறும் பாதையையே அடைத்துவிட்டான்.
நன்மை, தீமைகளின் இந்த முக்கிய பாடத்தைப் படிப்பதில் மனிதன் பெரும்பாலும் தவறு செய்து விடுகிறான். உலக செளகரியங்கள் அல்லாஹ்வின் முதல் முடக்கம். நம் கண் முன் அந்த முதலை அல்லாஹ் தந்திருக்கிருன்றான். இது நம்மை பரிசோதிப்பதற்காக வேண்டி.
புத்தியுள்ளவர்கள் முடக்கிய முதலிலிருந்து சாப்பிட மாட்டார்கள். அல்லாஹ்வின் திருப்தியையும், அவனிடமிருந்துள்ள பிரதிபலனையும் அவர்கள் விரும்புவார்கள்.
காரூனின் செல்வ வளத்தைக் கண்டு விரிந்த கண்களுடன் மக்கள் இவ்வாறு கூறினார்கள்:
“ஹோ… எங்களுக்கும் இதுபோல் இருந்தால் (எப்படியிருக்கும்)?”
விவேகமுள்ளவர்கள் அவர்களுக்கு இவ்வாறு பதிலளித்தார்கள்:
“அது நரகம். விசுவாசம் கொண்டு, நன்மையை நோக்கமாக வைத்து வாழ்பவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து நல்ல பிரதிபலன் கிடைக்கும். பொறுமையுடையோருக்கே அது கிடைக்கும்.
” அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை கூறினார்கள்:
“அதிக தீமைகள் செய்யும் ஒருவனுக்கு அல்லாஹ் அள்ளி அள்ளிக் கொடுக்கிறான் என்றால் அது அவன் விரைவில் பிடிக்கப்படுவான் என்று பொருள்.”
நன்றி:பாலைவனத்தூதுஆன்லைன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக