கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கல்வி விழிப்புணர்வு மாபெரும் மாநாடு செப்டம்பர் 8 சனிக்கிழமை கும்பகோணத்தில் நடைபெறுகிறது

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கல்வி விழிப்புணர்வு மாபெ ரும் மாநாடு தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வரும் செப்டம் பர் 8ம் தேதி சனிக்கிழமை நடை பெறுகிறது. இம்மாநாட்டு நடத்து வதற்கான ஒருங்கிணைப்பு பணி களை ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திற்குட்பட்ட தஞ்சா வூர், நாகை வடக்கு, நாகை தெற்கு, திருவாரூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களின் நிர்வாகிகள் முழுவீச்சுடன் செய்து வருகின்றனர்.


 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உயர்நிலை அரசியல் ஆலோ சனைக் குழு கூட்டம் சென்னை யில் ஜூன் 5-ம் தேதி நடை பெற்றபோது ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் கல்வி விழிப்புணர்வு மாநாட்டை நடத்து வது என்று முடிவு செய்யப்பட் டது. 

கும்பகோணத்தில் ஆலோசனை கூட்டம்

 ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட தஞ்சா வூர், திருவாருர், நாகை வடக்கு, நாகை தெற்கு மற்றும் காரைக் கால் ஆகிய மாவட்டங்களின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கும்பகோணம் கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற் றது.

 மாநில பொது செயலாளர் கே.ஏ.எம். முஹம் மது அபூபக்கர் தலைமை வகித் தார். மாநில கல்வி பனி செயலாளர் ஆடு துறை ஏ . எம். ஷாஜஹான் வரவேற்புரை நிகழ்த்தினார்.

 சிறப்பு அழைப்பாளர்களாக நோபிள் மரைன் ஷாகுல் ஹமீது மற்றும் ராஜகிரி தாவூத் பாட்சா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் அதிரை நஸ்ருதீன், இளைஞர் அணி செயலாளர் முஹம்மது யூனுஸ், தஞ்சை மாவட்ட செயலாளர் லயன் பஷீர் அஹமது, பொருளாளர் மதுக் கூர் அப்துல் காதர், நாகை வடக்கு மாவட்ட தலைவர் அபுல் ஹசன், செயலாளர் அமீர் என்.ஏ.எம். நூருல்லாஹ், துணை தலைவர் சிட்டிசன் மஜீது, நாகை தெற்கு மாவட்ட இணை செயலாளர் ஜான் செய்யது மீரான், திருவாரூர் மாவட்ட தலை வர் ஜலாலுதீன், செயலாளர் முகைதீன் அடுமை, காரைக்கால் மாவட்ட தலைவர் இஸ்மா யில், மாவட்ட செயலாளர் முஹம்மது அலி, பொருளாளர் அப்துல் நசீர், அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரி தலைவர் ஜமால் முஹம்மது இப்ராகிம், துணை தலைவர் முஹமது ஹுசைன் , அமீரக காயிதே மில்லத் பேரவை மண்டல செயலாளர் ஆவை அன்சாரி, தலைமை நிலைய பேச்சாளர்கள் கொள்ளிடம் ரஷீத் ஜான், தஞ்சை ஜைனுல் ஆபிதீன், அப்துல் கரீம், வலங்கைமான் பி.கே.இ. அப்துல்லாஹ் மற்றும் பல்வேறு மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய, பிரைமரி அமைப்பாளர்கள், ஐந்து மாவட் டங்களின் இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி அமைப் பாளர்கள் கலந்துகொண்டனர்.

 செப்டம்பர் 8-ம் தேதி சனிக்கிழமை மாநாடு

 வரும் செப்டம்பர் 8ம் தேதி சனிக்கிழமை கும்பகோணம் அல்-அமீன் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மைதானத்தில் மாபெரும் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்துவது என்றும், அம்மாநாட்டில் மாநிலத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர் களுக்கு பரிசுத் தொகையும், ஏழை மாணவர் களுக்கு ஊக்கத்தொகையும் வழங்குவது என்றும் தீர்மானிக் கப்பட்டது.

 மாநாட்டிற்கு மத்திய அமைச்சரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலை வருமான இ.அஹமது மற்றும் கேரளா மாநில முஸ்லிம் லீக் அமைச்சர்கள், தமிழ்நாடு மாநில நிர்வாகிகள், கல்வியாளர்களை யும், சமுதாய புரவலர்களையும் அழைப்பது என்றும் தீர்மானிக் கப்பட்டது.

 மாநாட்டிற்கு ஜமாஅத் நிர்வா கிகள், சமுதாய பெருமக்கள் அதிக அளவில் பங்கேற்க செய் வதென்றும் தீர்மானிக்கப்பட் டது.

 மாநாடு சிறப்பாக நடை பெற பல்வேறு குழுக்கள் அமைப்ப தென தீர்மானிக்கப்பட்டது. சுவர் விளம்பரங்களும், தெரு முனை பிரச்சரக்கூட்டங்களும் நடத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

 அமைப்பாளராக ஆடுதுறை ஏ.எம். ஷாஜஹான்.

 மாநாட்டின் அடுத்த கட்ட ஏற்பாடுகளை தொடர மாநாட்டு வரவேற்புகுழு அமைக்கப் பட்டது. மாநாட்டு கன்வீனராக ஆடுதுறை ஏ. எம். ஷாஜஹானும் உறுப்பினர்களாக மாநில துணைத்தலைவர் அதிரை நஸ்ருதீன், தஞ்சை மாவட்ட தலைவர் பி.எஸ். ஹமீது, செய லாளர் லயன். பஷீர் அஹமது, பொருளாளர், ஏ.எம். அப்துல் காதர், நாகை வடக்கு மாவட்ட தலைவர் எம். அபுல் ஹஸன், செயலாளர், அமீர் என்.ஏ.எம். நூருல்லாஹ், பொருளாளர், என்.எம். முபாரக், நாகை தெற்கு மாவட்ட தலைவர் டாக்டர் கே.எம். எம். சம்சுதீன், செயலா ளர், எம்.ஓ.எம். செய்யது அலி, பொருளாளர், ஏ. ரஹ்மத் அலி, திருவாரூர் மாவட்ட தலை வர் எம்.எம். ஜலாலுதீன், செய லாளர் கே. முகைதீன் அடுமை, பொரு ளாளர் கே.எம்.எம். அன் வர் அலி, காரைக்கால் மாவட்ட தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில், செயலாளர் ஏ. முஹம்மது அலி, பொருளாளர், முஹம்மது ஆரிப், எலந்தங்குடி சிட்டிசன் அப்துல் மஜீது, ராஜகிரி தாவூத் பாட்சா, ஜமால் முஹம்மது இப்ராகிம், முஹமது ஹுசைன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

  தஞ்சை மாவட்ட செயலாளர் ஹாஜி லயன் பஷீர் அஹ்மத் நன்றி கூறினார்.
http://www.muslimleaguetn.com

0 கருத்துகள்: