அல்லாஹ்வையும் அல்லாஹ் படைத்த இயற்கையும் மனிதன் மறந்தான். அதனால் பெரும் துன்பங்களுக்கு மனித சமுதயாம் ஆளாகிக் கொண்டு இருக்கிறது.
மரங்கள் அல்லாஹ் படைத்த இயற்கையின் அருட்கொடைகள்.மரம் வளர்ப்பின் அவசியமும் நன்மைகளும்:
1. உயிர் வாழ்க்கைக்கு அவசியமாகத் தேவைப்படுகின்ற நீரும், மூச்சுக்காற்றும் மரங்கள் வழியாக தான் நாம் பெற வேண்டி உள்ளது.
2. மரம் வளர்ப்பின் மூலம் நாம் நேரடியான பலங்களைவிட மறைமுகமான பலன்கள் அதிகமாக உள்ளது.
3. 50 ஆண்டுகள் வளர்ந்த ஒரு மரம் ரூ.5.30 இலட்சம் மதிப்புள்ள ஆக்ஸிஜனை வெளியிடுகின்றது.
ரூ.6.40 இலட்சம் மதிப்புள்ள அரிப்பை தடுக்கின்றது, ரூ.10.00 இலட்சம் மதிப்புள்ள உணவைத் தருகிறது, ரூ.10.30 இலட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டைத் தடுக்கிறது,
ஒரு மரம் தன் வாழ்நாளில் கிரகித்துக் கொள்ளும் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு 1000 கீலோ.
மரம் வளர்ப்பவர்களுக்கு உடனடி நன்மைகள் இல்லாவிட்டாலும் பிற்காலத்தில் சிறந்த பலன்கள் அவர்கள் அடையலாம். இந்த சமுதாயத்துக்கு நிரந்தர நன்மைகளையும் கிடைக்கும்படி செய்யலாம். மனிதன் தான் வளர்ந்த மரங்களின் மூலம் இவ்வளவு நன்மைகள் இருக்கின்றதா என கற்பனை செய்து கூட பார்க்க முடியாத விதத்தில் அல்லாஹ் மரம் வளர்ப்பின் மூலம் நன்மைகள் கிடைக்க செய்கின்றான்.
நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது மணம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது; அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும். அது தன்னுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு ஒவ்வொரு காலத்திலும் தன்னுடைய கனியைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது; மக்கள் நல்லுணர்வு பெரும் பொருட்டு அல்லாஹ் (இத்தகைய) உதாரணங்களைக் கூறுகிறான். (அல்-குர்ஆன் 14:24,25)
“மரங்கள் அல்லாஹ் படைந்த இயற்கையின் வரங்கள்”
“மனித நேயம் மலர மண் வளம் காக்க மரங்களை வளருங்கள்”
. அவனே வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்கிறான்; அதிலிருந்து உங்களுக்கு அருந்தும் நீரும் இருக்கிறது; அதிலிருந்து (உங்கள் கால்நடைகளை) மேய்ப்பதற்கான மரங்கள் (மற்றும் புற்பூண்டுகளும் உண்டாகி) அதில் இருக்கின்றன. (அல்-குர்ஆன் 16:10)
“தண்ணிர் சிக்கனம் தன்னலமற்ற சேவையாகும்”
“மழைநீர் சேமிப்பு மனிதர்களுக்கு பாதுகாப்பாகும்”
“எனவே மரம் வளர்ப்போம்-உயிரினங்களைப் பாதுகாப்போம்”
நமது வீடுகளிலும், தோட்டங்களிலும், வயல் வரப்புகளிலும், மானாவாரி நிலத்திலும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மரம் வளர்ப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவோம். இயற்கயை பாதுகாப்போம், இனிய சுகத்தை அனுபவிப்போம்! இன்ஷா அல்லாஹ்….
thanks.http://www.imdtime.org/
0 கருத்துகள்:
கருத்துரையிடுக