கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

காயிதே மில்லத் ஆவணப்படம்: இ.அஹமது சாகிபுடன் சந்திப்பு!

மத்திய வெளியுறவு மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவருமான மாண்புமிகு இ.அஹமது அவர்கள் கடந்த 20-01-2012 அன்று சென்னை வந்திருந்தார்.
அவரை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், ஆவணப்பட இயக்குனர் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் சந்தித்து உரையாடினர். காயிதே மில்லத் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் தொடர்பாக இச்சந்திப்பு நிகழ்ந்தது. சந்திப்பின் போது முஸ்லிம் லீக் நிர்வாகிகளான காயல் மகபூப், வழக்கறிஞர் ஜீவகிரிநாதன், மில்லத் இஸ்மாயில் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை காயிதே மில்லத் நிர்மானித்த 1948 மார்ச் 10 ஆம் நாளை நினைவு கூரும் வகையில் வரும் மார்ச் மாதம் ஆவணப்பட வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. காயிதே மில்லத் அவர்களோடு நெருங்கிப்பழகி அரசியல் நடத்திய முத்தமிழறிஞர் கலைஞர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மூத்த எழுத்தாளர் சோலை போன்றோரை விழாவுக்கு அழைக்கும் எண்ணமுள்ளது. மேலும் அரசியல் தலைவர்கள், திரைக்கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்கும் வகையில் ஆவணப்பட சிறப்புத் திரையிடலை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முறையான அறிவிப்புகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விரைவில் வெளியிடும்.
http://aloorshanavas.blogspot.com/

0 கருத்துகள்: