கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இஸ்லாமிய சகோதர,சகோதரிகளே...


1) முதல் மனிதர் ஆதம் அவரது மனைவி ஹவ்வா அவர்கள் பூமியில் இறக்கபட்ட இடம் மக்காவாகும்….

2) தங்கள் இறைவனை வணங்க தாங்கள் வாழ்ந்த இடத்தில் எழுப்பிய முதல் இறையில்லம் கஃபா இருக்குமிடமாகும்…

3) அவர்கள் அந்த பூமியில் வெறும் 40 வருடமே வசித்ததாகவும் பின் அல்லாஹ்வின் அருளை தேடி வேறு இடம் சென்றதாக ஹதீஸ் உள்ளது…

4) அதற்க்கு பின் அவர்கள் மூலம் மக்கள் பெருகினர்.. உலகம் முழுவதும் பல திசைகளில் பரவினர்.. ஆனால் இந்த மக்கா மனிதர்கள் வசிக்க அடிபடை தேவையற்ற பாலைவனமாகவே ஆள் நடமாட்டம் இன்றி இருந்தது….

5) நூஹ் நபி காலத்தில் உலகம் முழுதும் ஏற்பட்ட வெள்ளத்தில் மண்ணுள் புதைந்தும் போனது…

6) ஆதம் அவர்களுக்கு பலாயிரம் ஆண்டுகளுக்கு பின் தோண்றிய இப்றாகிம் நபி மூலம் இறைவன் இந்த மக்காவை முஸ்லிம்களின் தலமையகமாக ஆக்க நாடுகிறான்…

7) இப்றாகிம் நபியுடைய மனைவி ஹாஜர் அவர்களையும் அவர்களது மகன் கைகுழந்தையாக இருந்த இஸ்மாயில் அவர்களையும் இறைவன் மக்காவில் விட்டுவிட்டு சென்றுவிடுமாறு கட்டளையிடுகிறான்..

8) ஆள் நடமாட்டம் இன்றி இருக்கும் மக்கா பாலைவனத்தில் இறைவனின் கட்டளைகினங்கி மனைவி, பிள்ளையை விட்டுவிட்டு செல்கிறார் மனைவியும் இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து ஒத்துழைக்கிறார்….

9) இபுறாகிம் நபி கொடுத்து சென்ற உணவும் தீர்ந்து தொண்டை வரண்டு கைக்குழந்தை இஸ்மாயில் கதறி அழ தண்ணீர் தேடி அருகில் இருந்த இரு குன்றுகளுக்கிடையே மாறி மாறி ஓடுகிறார் அவரது தாய் ஹாஜர் அவர்கள்

10) உதவிகிட்ட வில்லை, குழந்தையின் அழுகுறளும் அடங்கியது பதறிய திரும்பிய தாய்க்கு அங்கு இறைவனின் அற்புத அதிசயம் காட்சி அளித்தது.. குழந்தைக்கு அருகில் நீரூற்று உருவாகி குழந்தையின் வாயை தொட்டுருந்தது…

11) தண்ணீரையும், அங்கு கிடைத்த பேரீச்சைகளையும் கொண்டு போதுமாக்கி கொண்டனர் அந்த தாயும், மகனும்…

12) அப்பொழுது அவ்வழியாக வந்த அரபி மொழி பேசும் நாடோடி கூட்டம் தண்ணீர் இருப்பதை அறிந்து அங்கயே இருப்பிடம் அமைக்க அந்த தாயிடம் அனுமதி கேட்கிறது…..

13) அண்ணை ஹாஜர் அவர்களும் சில நிபந்தனை அளிக்க அவர்கள் ஏற்று கட்டுபட்டு அங்கு இருப்பிடங்களை அமைத்து அது இறைவன் நாட்டபடி ஊராகிறது…( ‪அல்லாஹ்_அக்பர்‬)

14) பின் இறைவன் முதல் மனிதரால் கட்டபட்ட முதல் இறையில்லம் இருந்த இடத்தில் அந்த ஆலயத்தை மீண்டும் எழுப்ப நாடிகிறான்..

15) இப்றாகிம் நபிக்கு கட்டளையிட அவர் மீண்டும் மக்கா திரும்பி தன் மகன் இஸ்மாயில் அவர்களுடன் இணைந்து அல்லாஹ் அறிவித்த இடத்தில் பழைய ஆலயத்தை அதன் அடிதளத்தில் இருந்து மீண்டும் எழுப்பிகிறார்கள்..

.16) இப்றாகிம் நபிக்கு இறைவன் சோதனையாக தன் மகனை அறுத்து பலியிட கனவை கொடுக்க… அதுவே இறை ஆணை என்று தன் மகனை அறுத்து பழியிட முனைகிறார் மகனும் உடன்படுகிறார்… (‪சுப்ஹானல்லாஹ்‬) மகனை அறுக்க கத்தியுடன் செல்லும் தந்தையை திசை திருப்ப சைத்தான் நாடுகிறான் அவரது மனசை மாற்ற முயற்ச்சிகிறான் ஆனால் அந்த இடத்தில் கல்லை எறிந்து தன் மனசை ஒரு நிலைபடுத்தி மகனை அறுக்க ஆயத்தமாகிவிட்டார்..
ஆனால் நரபலி விரும்பாத கருனை இறைவன் அதை சோதனை என தெளிவுபடுத்தி தனக்காக ஆட்டை அறுத்து இறைவழியில் செலவிட கட்டளையிடுகிறான்…

17) தந்தைக்கு பின் மகனும் இறைவனின் தூதராக இறைவனால் தேர்ந்தெடுக்கபட்டு அங்கே இஸ்லாம் நிலைநாட்டபட்டது…

18) அவர்களது காலத்துக்கு பின் அங்குள்ள மக்கள் அவர்களது போதனையின் படி அங்கு இஸ்லாத்துடன் வாழ்ந்தனர்…

19) பல நூற்றாண்டுகள் கடந்தன பல நபிமார்கள் கடந்தனர்… மக்காவில் மனித இனம் பல்கி பெறுகியது கூடவே குழப்பமும், பெருகியது..

20) அங்கு அறியாமை காலத்து பழக்கம் மெல்ல மெல்ல நூதனமாக நுழைய தொடங்கியது…

21) சிலை வணக்கம் ஆரம்பமானது, விபச்சாரம், குடி, கொலை அநாகரீகமான செயல் பல்கி பெறுகியது..

22) உலகில் முதல் மனிதர், முதல் இறை தூதர், ஆதம் அவர்கள் ஆரமித்த பிரச்சாரம் அதே இடத்தில் இறுதி தூதரை கொண்டு இறைவன் இஸ்லாத்தை நிறைவாக்க நாடிகிறான்.. ஆம் முகமது நபி(ஸல்) பிறக்கிறார்கள்…

23) அவரது 40 வது வயதில் இறைவன் தனது தூதராக தேர்ந்தெடுகிறான்…

24) 63 வயதில் மரணித்த முகமது நபி (ஸல்) இறைவன் நாடிய மிகப்பெரிய வேலைகளை செய்ந்து முடிக்க எடுத்து கொண்ட காலம் வெறும் 23 ஆண்டுகள்… அதிலும் 10 ஆண்டுகள் ஒடுக்கபட்டே கழி்ந்தது… மீதம் உள்ள 13 ஆண்டுகள் போதிய தூக்கம், ஒய்வு, உணவு, இன்றி ஓயாது உழைத்து இறைவன் கொடுத்த வேலைகளை செவ்வனே செய்ந்து முடித்தார்கள்… ஆம் உலகம் முழுவதும் இஸ்லாத்தை எத்தி வைத்தார்கள்…

25) இஸ்லாம் ஆரம்பம் ஆன இடத்திலயே முற்று பெற்றது… ஆம் மக்காவில் ஆரம்பம் ஆகி அங்கயே முற்றும் பெற்றது… அங்கு இப்றாகிம் நபி போதனைக்கு பிறகு தோண்றிய சிலை வணக்கம், தீய பழக்கவழக்கம் ‪முகமது‬ நபி ஸல் அவர்களால் அழித்து இஸ்லாம் இறுதியாக மறுசீரமைக்கபட்டது…

26) இப்றாகிம் நபியின் தியாகங்கள் இறைவனால் ஹஜ் கிரிகளாக்கபட்டது..
அங்கு இறைவனின் மன்னிப்பையும், நன் மரணத்தையும் மட்டுமே நாடி வெள்ளை உடையணிந்து வருபவர்களுக்கு பெரும் நன்மாரயம் இறைவனால் கிடைக்க பெறுகிறது…

27) அங்கு இப்றாகிம் நபியின் மனைவி அண்ணை ஹாஜர் அவர்கள் இரு குன்றுகளுக்கிடையே ஓடியது போன்று அந்த கஷ்டத்தை நினைவு கூற அதே குன்றுகளுகிடைய ஓட ஹாஜிகளுக்கு கடமையாக்க பட்டது…. தன் மகனையும் இறைவனுக்காக பலி கொடுக்க நாடிய மாபெரும் இறை விசுவாசத்தை நினைவு கூறும் பொருட்டு குர்பானி கடமையாக்கபட்டது….
சைத்தானின் எண்ணங்களை கற்களை கொண்டு எறிந்து மனசை கட்டுபடுத்திய அந்த கனத்த இதயத்தை நினைவு கூற கல் எறிந்த அதே இடத்தில் கல் எறிய முஸ்லிம்களுக்கு கடமையாக்கபட்டுள்ளது…
சுப்ஹானல்லாஹ்…

28) மக்கா உலகம் அழியும் வரை இறைவனால் பாதுகாக்கபடும் நகரமாக இறைவனாலயே அறிவிக்கபட்ட இடம்..
அங்கு நன்மை செய்ந்தாலும் கூலி பன் மடங்கு, தீமை புரிந்தால் அதற்க்கு கேடான கூலியும் பன்மடங்காகும்..

29) மேலும் உலக முடிவு நாளின் அடையாளமாக வர இருக்கும் கொடியவன் தஜ்ஜால் மக்காவினுல் நுழைய சக்தி பெறமாட்டான் என்பது இறைவனின் வாக்கு…

30) உலகின் முதல் ஆலயம் மக்கா ஹரம். இரண்டாவது ஆலயம் பாலஸ்தீனில் உள்ள மஸ்ஜித் அக்ஸாவாகும்….
இவையே மக்கா வை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அடிபடை விசயங்களாகும்…

நன்றி –  

0 கருத்துகள்: