அஸ்ஸலாமு அலைக்கும்.(வரஹ்)
இறைவனின் பொருத்தம் நாடி தந்தையின் கனவை நனவாக்க இசைந்து படைத்தவனின் அன்பை பெற்ற இறைத்தூதர் இஸ்மாயில்(அலை)அவர்களின் பெற்றோர் நலம் பேணல் என்னும் உயரிய கொள்கையை பின்பற்றி நாமும் நமது பெற்றோர்கள் நலம் பேணவும்,
பெற்றோர்களின் பொருத்தத்தில் பிள்ளைகளின் சுவனம் உண்டு என்ற முகம்மது நபியவர்களின் உன்னத கோட்பாட்டினை நெஞ்சில் சுமந்து குடும்ப நலம் பேணும் நன்மக்களாய் வாழ்வதற்கு இந்நாளில் சபதமேற்போம்!
சகோதர,சகோதரிகள்,நண்பர்கள்,உறவினர்கள்,அனைவருக்கும்,
கோணுழாம்பள்ளம்post தன் நெஞ்சார்ந்த இனிய தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
கோணுழாம்பள்ளம் அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குச்சவாடி மையத்தில் வாக்களார் பெயர் சேர்க்க,நீக்க,திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடைபெற்றது. இம் முகாமில் 01.01.2016. அன்று 18வயது பூர்த்தியாகியுள்ள புதிய வாக்களர்கள் அனைவரும் தங்கள் பெயர்களை சேர்த்து கொள்ள..பதிவு செய்தார்கள்.ஏற்கனவே வாக்காளர்களாக இருப்பவர்கள் தங்களது வாக்கு உரிமை பறிக்கப் படாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம்கல்லகொல்லைதெருஜாகிர்ஹுசைன்,சாகுல்ஹமீது,
நஜீர் அகமது இவர்களின் தகப்பனார்S.பக்கீர்முஹம்மது அவர்கள்(18.09.2015)வெள்ளிக்கிழமை இரவு 7.00மணியளவில் தாருல்ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வாஇன்னா இலைஹிராஜிஊன் ஜனாஸா நல்லடக்கம் (19.09.2015)சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது