கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ‘பாரத ரத்னா ஏ.பி.ஜே அப்துல் கலாம் வபாத்

                                           அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ‘பாரத ரத்னா’ ஆலி ஜனாப் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள், இன்று (27.07.2015 திங்கட்கிழமை) மாலை மேகாலய மாநில தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (IIM) மாணவர்களிடத்தில் நடைபெற்ற கருத்தரங் கில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட மயங்கி விழுந்தார். பிறகு மருத்துவமணயைில் சேர்க்கப்பட்ட கலாம் அவர்கள், தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாருக்கு வயது 84.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆசெய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், நண்பர்கள், மாணவ செல்வங்கள் மற்றும் இந்திய நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

1 கருத்துகள்:

Unknown சொன்னது…


Missile Man of India Kalam's significant achievement in the field of science into aerospace is well known all over the world
Discover Tamil News