கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

தேர்தல் சீர்த்திருத்தம் தேவை! டெல்லியில் மமக, முஸ்லிம் லீக்,முழக்கம்!


தலைநகர் டெல்லியில் கடந்த மார்ச் 6 மற்றும் 7 தேதிகளில் தேர்தல் சீர்த்திருத்திற்கான தன்னார்வ அமைப்பான ‘CERI’ சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. தற்போது இந்தியாவில் இருக்கும் தொகுதி வாரி தேர்தல் முறைக்கு மாறாக, ஜெர்மனி, சுவீஸ் போன்ற நாடுகளில் நடைமுறையில் இருக்கும் விகிதாச்சார அடிப்படையிலான தேர்தல் முறையை இந்தியாவில் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற அக்கருத்தரங்கில் மமக சட்டமன்ற கட்சித் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 6ஆம் தேதி நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள், புள்ளி விபரங்களுடன் இன்றைய நடைமுறைத் தேர்தல் முறையின் தவறுகளை சுட்டிக் காட்டினார். மேலும் முஸ்லிம் லீக் முன்னாள் தலைவர் பனாத்வாலா அவர்கள் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா கொண்டு வந்து வாதாடியதையும் குறிப்பிட்டார். இப்பிரச்சாரத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

 அன்றைய நிகழ்வில் முஸ்லிம் லீக்கின் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் அவர்களும், விடுதலை சிறுத்தைகளின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் அவர்களும் பங்கேற்று கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். தாமதமாக வந்து திருமாவளவனும் இம்முயற்சிகளுக்கு தனது ஆதரவை தெரிவித்துக் கொண்டார்.

 அடுத்த நாள் காலை நடைபெற்ற கருத்தரங் கில் பேரா. ஜவாஹிருல்லாஹ், வெல்ஃபேர் பார்ட்டியின் பொதுச் செயலாளர் எஸ்.க்யூ.ஆர்.இல்யாஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பரதன், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகப் பேராசிரியர் அர்ஷி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

அதன் மதிய இரண்டாவது அமர்வில் மமக பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி பேசினார். அவர் பேசும் போது இத்தகைய தேர்தல் முறை தற்போது 89 நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதையும் குறிப்பிட்டு சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித்துகளுக்கு உரிய எண்ணிகையிலான பிரதிநிதிகளை அனுப்புவதற்கு இத்தேர்தல் முறைதான் வழிவகுக்கும் என்றும் பேசினார்.

இதற்கு முந்தைய நாள் நிதிஷ்குமார் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளத்தின் தேசியத் தலைவர் சரத் யாதவை அவரது இல்லத்தில் மமக பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரியும், பொருளாளர் ஒ.யு. ரஹ்மத்துல்லாஹ்வும் சந்தித்து, தேர்தல் சீர்திருத்த முயற்சிகளுக்கு அவரது ஆதரவைக் கோரினர். அதை ஏற்று அவரும் 8ஆம் தேதி மாலை நடைபெற்ற தேர்தல் சீர்திருத்தம் குறித்த நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற் றார்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி. பரதனுடன் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, பொருளாளர் ஒ.யு.ரஹ்மத்துல்லாஹ் வும் தனியே சந்தித்துப் பேசினர்.

நன்றி - எம். தமிமுன் அன்சாரி.

0 கருத்துகள்: