கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

புனித ஹஜ் பயணத்திற்கான விண்ணப்ப தேதி ஏப்ரல் 25 வரை நீட்டிப்பு

புனித ஹஜ் பயணத்திற்கான விண்ணப்ப தேதி ஏப்ரல் 25 வரை நீட்டிப்புபிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தால் சவூதி செல்ல ஒரு வருட பாஸ்போர்ட் வாய்ப்பை பயன்படுத்த எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. வேண்டுகோள்


இந்த ஆண்டு புனித ஹஜ் பயணம் செல்வதற்கு ஏப்ரல் 16-ம் தேதி கடைசி என்று அறிவிக் கப்பட்டிருந்தது.அது வரும் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டி ருப்பதாக மத்திய ஹஜ் குழு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு புனித ஹஜ்ஜுக்கு செல்ல நாடியிருந்து இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண் ணப்பிக்கலாம்.

ஹஜ் செல்ல ஒரு வருட பாஸ்போர்ட்

புனித ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்கும் போது அவர் கள் சர்வதேச பாஸ்போர்ட் வைத் திருக்க வேண்டும் என்பது நிபந்தனையாக விதிக்கப்பட் டுள்ளது பாஸ்போர்ட் இல்லாமல் ஹஜ் பயணத்திற்கு விண்ணப் பித்தவர்கள் சர்வதேச பாஸ் போர்ட் விரைவாக பெறுவதற் காக பல்வேறு இடங்களில் பாஸ்போர்ட் மேளாக்கள் நடை பெற்றன.

ஆனாலும், காவல்துறை விசாரணையில் தாமதம் ஏற்பட்டதால் பாஸ்போர்ட் பெறுவதில் ஹஜ் பயணி களுக்கு பெரும் சிரமம் ஏற்பட் டது. எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. கோரிக்கை

இதுபற்றி கடந்த மார்ச் 26-ம் தேதி நாடாளுமன்ற மக்கள வையில் எம். அப்துல்ரஹ்மான் எம்.பி., அரசின் கவனத்துக்கு கொண்டு வந்து பேசினார். தொடர்ந்து மத்திய அரசின் வெளிவிவகாரத்துறை கூடுதல் செயலாளரை சந்தித்து முறையிட்டார்.

இதன் பலனாக போலீஸ் விசாரணையில்தாமதம் ஏற்பட் டால் சவூதிக்கு செல்லும் வகையில் எட்டு மாத கால அவகாசம் கொண்ட பாஸ் போர்ட் வழங்கப்படும் என்று வெளியுறவுத்துறை அறிவித் தது.

இப்போது அந்த அறிவிப் பிலும் ஒரு மாற்றம் செய்து வெளியுறவுத்துறை புதிய அறிவிப்பை வெளியிட் டுள்ளது.

இதன்படி, புனித ஹஜ் பயணம் செல்வதற்கு பாஸ் போர்ட் விண்ணப்பிப்பவர்கள் ஹஜ் பயணத்திற்கு விண் ணப்பித்ததற்கான கவர் எண்ணை எழுதத் தேவை யில்லை என்றும், 10 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் நோட்ரிக் பப்ளிக்கிடம் `அபிடவிட்(பிரமாண வாக்குமூலம்) அளித்தால் அவர்களுக்கு ஒரு வருட காலம் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது.

காவல் துறையின் விசாரணை முடிந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு 20 வருட சர்வதேச பாஸ்போர்ட் வழங்கப் படும். இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள இருப் பவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்த காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கி ணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 கருத்துகள்: